பெயர்: முள்ளு சீதா
தாவரவியல் பெயர்: Annona muricata
மற்ற பெயர்கள்: Graviola, Soursop, Brazilian Paw Paw, Guanabanaª
மாற்று மருத்துவத்தில் மக்கள் கவனம் செலுத்த ஆரம்பித்தவுடன் பயனுள்ள பல தாவரங்களும் வைத்திய முறைகளும் பிரபலமாகி வருகின்றன. சமீபத்திய மிகப் பிரபலம் - ‘ஃக்ரவயோலா’ என்று அழைக்கப்படும் முள்ளு சீதா! அமேசான் காடுகளில் வளரும் சிறுமரம் இது. இம்மரத்தை அங்குள்ள பழங்குடியினர் பல்வேறு நோய்களைக் குணப்படுத்த உபயோகித்தனர்.
இதன் பட்டை, இலை, பழம் என எல்லாமே நோய்களை குணமாக்க உதவுகிறது. பழங்கள் உற்பத்தி குறைவு என்பதாலும் இலைகளிலும் நோய் தீர்க்கும் குணம் இருப்பதால் இதனை பதப்படுத்தி ‘டீ’ போன்று அருந்துகின்றனர். இது பல நாடுகளில் வியாபார ரீதியாக விற்பனையில் உள்ளது. ஒரு பன்னாட்டு நிறுவனம் மில்லியன் டாலர் பொருட்செலவு செய்து புற்றுநோய்க்கு இப்பழத்தின் மூலம் தீர்வு கண்டதாகவும், பின் காப்புரிமை பெற முடியாததால் ஆய்வை விரிவுபடுத்தாமல் கைவிட்டதாகவும் ஆய்வு செய்த விஞ்ஞானிகளில் ஒருவர் இந்த ரகசியத்தை வெளியுலகிற்கு அறிவித்ததாகவும் செய்திகள் கூறுகின்றன.
கர்ப்ப காலத்தில் அதிகம் உண்ணக் கூடாது என்றும் சொல்வதுண்டு. தொன்றுதொட்டு பழக்கத்தில் உள்ள மருத்துவ மரமென்றாலும், சிலர் ‘இதை அதிகம் சாப்பிடக்கூடாது’ என்றும் ‘பக்க விளைவுகள் உண்டு’ என்றும் கூறுகிறார்கள். இருப்பினும் நவீன மருத்துவ முறையில் ‘கீமோதெரபி’ சிகிச்சைக்குப் பின் ஏற்படுகிற உடனடி பக்க விளைவுகள் மற்றும் செலவு போன்றவற்றைக் கணக்கிட்டால் தொன்றுதொட்டு பழக்கத்தில் உள்ள ‘முள்ளு சீதா’ நன்று என்றே தோன்றுகிறது.
இப்போதைய உணவுப் பழக்கம், அளவுக்கு மீறிய ரசாயன மருந்து மற்றும் உரங்கள் ஆகியவை புற்றுநோய்க்கு வழிவகுக்கின்றன. இதனை குறைப்பதற்கு மாற்று மருத்துவத்தில் வழி உண்டு என்பதை பரம்பரை ஞானமும் விஞ்ஞானமும் சொல்கிறது. எடுத்துக் கொள்வதும் விட்டுவிடுவதும் அவரவர் கையில் உள்ளது!
நன்றி-தினகரன்.

0 comments:
Post a Comment