ஜெ.வின் மனக்கோட்டையை மண்கோட்டையாக்க வேண்டும் என்று பெரம்பரில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் விஜயகாந்த் பேசினார்.
பெரம்பரில் லோக்சபா தொகுதி வேட்பாளரும், இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனருமான பச்சமுத்துவை ஆதரித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று தேர்தல் பிரசாரம் செய்தார்.
பெரம்பரில் நடந்த பொதுக்கூட்டத்திற்கு தேமுதிக மாவட்ட செயலாளர் துரைகாமராஜ் தலைமை வகித்தார். பா.ஜ கட்சி மாவட்ட தலைவர் சந்திரசேகரன், மதிமுக மாவட்ட செயலாளர் துரைராஜ், பாமக மாவட்ட செயலாளர் செந்தில், ஐஜேகே மாவட்ட தலைவர் குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் ஐஜேகே மாநில தலைவர் கோவை தம்பி, பொதுசெயலாளர் ஜெயசீலன், பா.ஜ கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் சிவசுப்ரமணியம், ஐஜேகே மாநில வக்கீல் பிரிவு செயலாளர் அன்புதுரை, ஐஜேகே பொறுப்பாளர்கள் காமராஜ், முத்தமிழ்செல்வன் உட்பட பலர் பேசினர்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் பேசுகையில், தேசிய ஜனநாயக கூட்டணி மக்கள் கூட்டணி, இது வெற்றிக் கூட்டணி. இந்த தேர்தலில் நரேந்திர மோடி தான் பிரமராவார். பெரம்பர் ஆத்தூர் சேலம் வழியாக ரயில் சாலை வசதி ஏற்படுத்தவில்லை. மெடிக்கல் கல்ரி கொண்டு வரவில்லை, கல்லாறு குறுக்கே அணை கட்டுவேன் என்றார்கள். ஆனால் அணை கட்டவில்லை, மக்களை கட்டுப்படுத்த முடியவில்லை, அறிக்கை மட்டுமே விடும் ஜெயலலிதா அறிக்கை ராணியாக திகழ்கிறார். மக்களுக்கு எதுவும் ஜெயலலிதா செய்யவில்லை. வரும் தேர்தலில் 40 தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும். அதிமுகவுக்கு யாரும் ஓட்டு போடக்கூடாது, ஏனென்றால் மக்களை ஜெயலலிதா ஏமாற்றி வருகிறார். கூட்டணி கட்சி மரியாதை தரமாட்டங்க, தேமுதிகவுக்கு திராணி இருந்தா தேர்தலில் நிக்கட்டும் என்றார்கள். எங்களுக்கு திராணி உள்ளது என்பதை காட்ட புதுக்கோட்டை இடைத்தேர்தலில் நின்றோம். தமிழகத்தில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுவிடலாம் என மனக்கோட்டை ஜெயலலிதா கட்டியுள்ளார். அதை நீங்கள் மண் கோட்டையாக்க வேண்டும். மீண்டும் அதிமுகவிற்கு 2004 தேர்தல் நிலை ஏற்படும். ஒரு பாட்டில் ரூ.10 க்கு விற்பனை செய்கின்றனர். தமிழக முதல்வரால் மக்களுக்கு தண்ணீர் கொடுக்க முடியவில்லை. உணவு, குடிநீர், பார்மஸி போன்றவற்றிற்கு அம்மா என பெயர் வைத்த ஜெயலலிதா பெண்கள் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்பதால் டாஸ்மாக்கிற்கு மட்டும் அம்மா என பெயர் வைக்கவில்லை. 2016ல் நான் உங்களிடம் ஓட்டுகேட்பேன். அப்போது எனக்கு நீங்கள் ஓட்டு போடுங்கள். ஒரு முறை ஓட்டை மாற்றிபோடுங்கள், ஊழல் இல்லாத ஆட்சி அமையும். நரேந்திர மோடி தலைமையில் மத்தியில் ஊழல் இல்லாத ஆட்சி அமையவேண்டும். அப்போது இந்தியாவின் அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு காணப்படும் இவ்வாறு அவர் பேசினார்

0 comments:
Post a Comment