மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக
கூட்டணிக்கு அதிக இடங்கள் கிடைக்கும் என்று என்டிடிவி தொலைக்காட்சி
நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் மக்களவை தேர்தலில் வெற்றி பெறும் கட்சிகள் குறித்து பல்வேறு
கருத்துகணிப்புகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. என்டிடிவி நடத்திய
கருத்துக்கணிப்பில் பாஜகவிற்கு அதிக இடங்கள் கிடைக்கும் என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது. என்டிடிவி தமிழ்நாடு, கர்நாடகா, மேற்கு வங்காளம்,
ராஜஸ்தான், தில்லி, குஜராத் உட்பட 13 மாநிலங்களில் நடத்திய
கருத்துக்கணிப்பு குறித்து வெளியிட்டுள்ளது.
அதில் மொத்தம் உள்ள 319 தொகுதியில் பாஜக கூட்டணிக்கு 166 இடங்களும்,
காங்கிரஸ் கூட்டணிக்கு 52 இடங்களும் கிடைக்ககூடும் என்று தெரிவித்துள்ளது.
மேலும் பாஜக மட்டும் 146 தொகுதியில் வெல்லும் என்றும், காங்கிரஸ் 40
இடங்களில் வெல்லும் என்றும் கூறியுள்ளது.
தமிழகத்தில் மொத்தம் உள்ள 39 தொகுதியில், அதிமுகவிற்கு 27 இடங்களும்,
திமுகவிற்கு 10 இடங்களும், மற்றவர்களுக்கு 2 இடங்களும் கிடைக்கும் என்று
கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் மொத்தம்
உள்ள 42 இடங்களில் 32 இடங்களில் திரிணாமுல் காங்கிரஸ் வெல்ல
வாய்ப்புள்ளதாகவும், இடது சாரிகள் 9 தொகுதிகளில் வெல்லக்கூடும் என்றும்,
காங்கிரஸ் ஒரு தொகுதி கிடைக்ககூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
கர்நாடகா(28)- பாஜக=20, காங்கிரஸ்-6, மஜத-2
தமிழ்நாடு(39)- பாஜக=0, காங்கிரஸ்-0 மற்றவர்கள்-39
மேற்குவங்கம்(42)- பாஜக=0, காங்கிரஸ்-01.. இடதுசாரி-9. திரிணாமுல்-32
ராஜஸ்தான்(25)-பாஜக=19, காங்கிரஸ்05 மற்றவர்கள்-01
தில்லி(7)- பாஜக=2, காங்கிரஸ்-1, ஆம் ஆத்மி-04
ஹரியானா(10)- பாஜக=7, காங்கிரஸ்-3 மற்றவர்கள்-0
மகாராஷ்ட்ரா(48)- பாஜக=33, காங்கிரஸ்-12 மற்றவர்கள்-3
சட்டீஸ்கர்(11)- பாஜக=9, காங்கிரஸ்-02 மற்றவர்கள்-0
குஜராத்(26- பாஜக=23, காங்கிரஸ்-3, மற்றவர்கள்-0
ஜார்கண்ட் (14)- பாஜக=6, காங்கிரஸ்-4 மற்றவர்கள்-4
பீகார்(40- பாஜக=23, காங்கிரஸ்-11 மற்றவர்கள்-6
நன்றி-தினமணி.