பெரம்பலூர் மாவட்டத்தில் புதிதாக 8 ஆயிரத்து 527 பேர் தங்கள் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க விண்ணப்பித்துள்ளனர்.
590 வாக்குச்சாவடி மையங்கள்நடைபெற உள்ள பாராளுமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு, பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 590 வாக்குச் சாவடி மையங்களில் காலை 10 மணி முதல், மாலை 5 மணி வரை சிறப்பு முகாம் நடை பெற்றது. இந்த முகாம்க ளில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், தொடர்பான படிவங்களை பெற்று பூர்த்தி செய்வதற்கு அறிவுறுத்தப் பட்டது.
அதன்படி, பெரம்பலூர் வட்டத்தில் 1,042 ஆண் களும், 1,334 பெண்களும், வேப்பந் தட்டை வட்டத்தில் 721 ஆண்களும், 849 பெண்களும், குன்னம் வட்டத்தில் 820 ஆண்களும், 1,019 பெண்களும், ஆலத்தூர் வட்டத்தில் 1,295 ஆண்களும், 1,805 பெண்களும், குன்னம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட செந்துறை வட்டத் தில் 649 ஆண்களும், 723 பெண்களும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மனு கொடுத்தனர்.
8,527 பேர்
பெரம்பலூர் மற்றும் குன்னம் சட்டமன்ற தொகுதிக் குட்பட்ட பகுதிகளில் உள்ள 590 வாக்குச்சாவடி மையங் களிலும், 3,832 ஆண்களும், 4,695 பெண்களும் என மொத்தம் 8,527 பேர் விண்ணப்பித்தனர்.
மேற்கண்ட தகவல் கலெக்டர் அலுவலக செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
நன்றி-தினத்தந்தி.
0 comments:
Post a Comment