Sunday, 9 March 2014

பெரம்பலூர் பாராளு மன்ற தொகுதியில் 152 பதற்றமான வாக்கு சாவடிகள் உள்ளன.
பதற்றமான வாக்குசாவடிகள்
பெரம்பலூர் பாராளு மன்ற தொகுதியில் குளித்தலை, லால்குடி மண்ணச்சநல்லூர், முசிறி, துறையூர்., பெரம்பலூர் ஆகிய 6 சட்டமன்ற தொகுதி கள் அடங்கி யுள்ளன.
குளித்தலை சட்டமன்ற தொகுதியில் உள்ள 247 வாக்குச்சாவடிகளில் 17 வாக்குச்சாவடிகளும், லால் குடி சட்டமன்ற தொகுதியில் உள்ள 232 வாக்குச்சாவடிகளில் 17 வாக்குச்சாவடிகளும், மண்ணச்சநல்லூர் சட்ட மன்றத் தொகுதியில் உள்ள 250 வாக்குச் சாவடிகளில் 10 வாக்குச்சாவடிகளும், முசிறி சட்டமன்றத் தொகுதியில் உள்ள 244 வாக்குச்சாவடிகளில் 15 வாக்குச்சாவடிகளும், துறையூர் சட்டமன்றத் தொகு தியில் உள்ள 247 வாக்குச் சாவடிகளில் 7 வாக்குச்சாவடிகளும், பெரம் பலூர் சட்டமன்றத் தொகுதி யில் உள்ள 297 வாக்குச் சாவ டிகளில் 86 வாக்குச் சாவடி களும் பதற்றம் நிறைந்த வாக்குச் சாவடிகள் என மொத்தம் 152 வாக்குசாவடிகள் பதற்றமான வாக்கு சாவடி களாக அறியப்பட்டுள் ளது.
குன்னம் தொகுதி
பெரம்பலூர் மாவட் டத்தில் உள்ள சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதிக் குட்பட்ட குன்னம் சட்ட மன்றத் தொகுதியில் உள்ள 293 வாக்குச்சாவடிகளில் 79 வாக்குச்சாவடிகள் பதற் றம் நிறைந்த வாக்குச் சாவடி களாக அறியப் பட்டுள்ளது.
மேற்கண்ட தகவலை பெரம் பலூர் மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான தரேஸ் அஹமது தெரிவித்துள் ளார்.

நன்றி-தினத்தந்தி.

0 comments:

Post a Comment