Tuesday, 11 March 2014

பெரம்பலூர், : கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் 2 துணிகள் வாங்கினால் ஒரு துணி இலவசம் என்ற சிறப்பு விற்பனை திட்டம் இம்மாதம் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், பட்டுத் துணி விற்பனையில் 50% கட்டணத்திற்கு காட்டன், பாலியஸ்டர் துணிகள் இலவசம் வழங்கும் புதிய திட்டமும் நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது.
பெரம்பலூர் துறையூர் சாலையில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் கைத்தறி நெசவாளர்களின் வாழ்வாரதாரத்தை மேம்படுத்த, 2 துணிகளை வாங்கினால் 1 துணி இலவசம் என்ற சிறப்பு விற்பனை திட்டம் கடந்த மாதம் 17ம் தேதி துவங்கியது. கடந்த 25 நாட்களில் ரூ.8 லட்சத்திற்கு துணிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. பொதுமக்களின், வாடிக்கையாளர்களின் அதிகப்படியான ஆதரவைத் தொடர்ந்து இச் சலுகை விலை விற்பனை இம்மாதம் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மேலும், நேற்று முதல் பட்டுத் துணிகள் விற்பனையில் புதிய சலுகைத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் படி, ஒரு பட்டுத் துணி வாங்கினால் அதன் (50 சதவீத) பாதி விலைக்கு காட்டன் அல்லது பாலியஸ்டர் துணிகள் வழங்கப்படும் புதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
உதாரணமாக ரூ.4 ஆயிரத்திற்கு ஒரு பட்டுச் சேலை வாங்கினால் அவர்களுக்கு ரூ2ஆயிரத்திற்கு காட்டன், பாலியஸ்டர் துணிகள் கூடுதலாக வழங்கப்படும். இத் திட்டமும் இம்மாதம் 31ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி-தினகரன்.

0 comments:

Post a Comment