பெரம்பலூர் சட்டப்பேரவை தொகுதிக்கான பறக்கும் படை வட்டாட்சியர்
செல்வராஜ் தலைமையிலான குழுவினர், திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில்
உள்ள திருமாந்துறை சுங்கச்சாவடி பகுதியல் வியாழக்கிழமை காலை சோதனையில்
ஈடுபட்டிருந்த போது, அவ்வழியே மோட்டார் சைக்கிளில் சென்ற நபரிடம் மேற்கொண்ட
விசாரணையில், தொழுதூரில் இரும்புகடை வியாபாரம் செய்து வரும் சையது முஸ்தபா
மகன் அபிபுல்லா உரிய ஆவணங்களின்றி ரூ. 1.46 லட்சம் தொகையை கொண்டு சென்றது
தெரியவந்தது.
இதையடுத்து அந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால், உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்படும் பணம் மற்றும் பொருள்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்படும்.
நன்றி-தினமணி.

0 comments:
Post a Comment