கலைவாணன் |
பெரம்பலூர் சங்கு அருகில் உள்ள சமுதாயக் கூடத்தில் திருவாளந்துறையைச் சேர்ந்த திரு. கலைவாணன் அவர்களின் ஓவியக் கண்காட்சி கடந்த மூன்று நாட்களாக நடைபெற்றது .
நம் கண்ணுக்கு தெரியாத , அறிமுகமில்லாதவர்களின் உழைப்பை , திறமையை அங்கீகரிக்கும் நாம், நம் மாவட்ட நண்பரின் திறமையை கண்டு விமர்சிக்கவாவது செல்வோம்.
இவர் சென்னையில் உள்ள ஒரு விளம்பர நிறுவனத்தில் பணிபுரிகிறார். கும்பகோணம் கவின்கலைக் கல்லூரியில் ஓவியம் படித்தவர்.
50 க்கும் மேற்பட்ட ஓவியங்களை காட்சிக்கு வைத்திருக்கிறார்.
கோட்டோவியங்கள், மாடர்ன் ஆர்ட், தூரிகையின்றி கைகளால் மட்டுமே வரையப்பட்டது என்று பல்வேறு வகையாக இருக்கிறது இவரது ஓவியங்கள்.
பெரம்பலூரில் நடைபெறும் இது மாதிரியான ஓவியக் கண்காட்சியில் இந்த மாவட்ட ஓவியரின் படைப்புகளே இடம்பெறுவது சிறப்புக்குரியதே.
0 comments:
Post a Comment