தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு புதிய அரசும்
பொறுப்பேற்றாகி விட்டது. இந்நிலையில் காங்கிரஸின் தோல்விக்கு என்ன காரணம்
என அலசுவதானால் அது அரைத்த மாவை மீண்டும் அரைப்பதாகத்தான் இருக்கும். அதே
வேளையில் பல் வேறு கருத்துக்கள், கட்டுரைகள் வந்தபின்னரும் வாராத
கருத்துக்கள் இருக்கின்றனவா என்று ஆராய்ந்தால் , ஆம் இருக்கின்றன என்றுதான்
தெரிகிறது. இமாலய ஊழல்கள், வரலாறு காணாத உணவுப் பொருள்விலை, பெட்ரொல் விலை
என்பன உட்பட விலைவாசி உயர்வு, பணவீக்கம், டாலருக்கு எதிரான ரூபாயின்
மதிப்பு வீழ்ச்சி, உள்நாடு வியாபார விவசாய எதிர்ப்பு மசோதக்கள்,
சட்டங்கள், அமைச்சர் பெருமக்களின் அலட்சியப் போக்கு, அகங்கார வார்த்தைகள்
என பல்வேறு விஷயங்கள் அலசப்பட்டாலும் அவற்றிற்கான அடிப்டையிலான நான்கு
முக்கிய காரணங்களை யாரும் முன்வைத்ததாகத் தெரியவில்லை. கண்ணை மறைத்துவிட்ட
அந்த நான்கு முக்கிய காரணங்களை கண் முன் நிறுத்துவதே இக்கட்டுரையின்
நோக்கம்.
1. NAC எனப்பட்ட National Advisory Committee..
அரசு எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதை வலியுறுத்துவதற்காக சோனொயாவின்
தலைமையில் அரசாங்கம் அங்கீகரித்து உருவாகப்பட்ட அமைப்பு. எளிதில்
சொல்வதானால் மன்மோகன் தனக்குத் தானே வைத்துக் கொண்ட ஆப்பு. இந்தக்
கமிட்டியில் உள்ள எந்த உறுப்பினர்களும் நேரடியாக பொது மக்கள் தொடர்பு
கொண்டவர்கள் இல்லை. பல மக்கள் விரோத மசோதாக்களுக்கு இவர்களே காரணம். இந்த
கமிட்டியில் ஒருவரான டீஸ்தா டெதல்வார்ட் குஜராத் கலவரத்தில் மோடி மீது அதிக
பொய் பிரச்சாரம் செய்து உச்ச நீதிமன்றத்தால் கண்டனத்துக்கு உள்ளானவர்.
பொய் காட்சி, பொய் சாட்சி உருவாக்கி அம்பலப்படுத்தபட்டவர். இதில் உள்ள ஜான்
தயால் தான் மோடிக்கு அமெரிக்க விசா மறுப்பு வழங்க காரணமானவர். ” ”
prevention
of targetted communaல் violance bill ” இவர்களால் உருவானதுதான்.
இவர்களின் அழிச்சாட்டியங்களையெல்லாம் தேர்ந்தெடுக்கப்பட்ட எம் பி களும்எம்
எல் ஏக் களும் இதர கட்சித் தலைவர்களும் நியாயப்படுத்த வேண்டியதாயிற்று.
சோனியாவின் அந்நிய தேச வேர்களும் இந்திய அறியாமையும் அவரை என்றுமே இந்த
தேசத்தை நேசிப்பவராக மாற்றவில்லை. எனவே, இந்த தேசத்தின் புராதனத்தையோ,
மாண்பையோ அவர் என்றுமே புகழ்துரைத்ததில்லை. இந்த வெறுப்பே அவரை
இத்தேசத்திற்கு எதிராக சிந்திக்க வைக்கஇவர்களுக்குக் போதுமானதாக
இருந்ததது. தேசத்தை புரிந்த அமைச்சர்கள் இருந்தாலும் கூட அவர்களும்
தேர்ந்தெடுக்கப்படாத இந்த நிழல் அமைச்சரவையான என். ஏ.சி.க்குத்தான்
அடிபணியும் நிலை. ஆக, சோனியாவின் இந்த shadow
cabinet தான் தோல்விக்கு முதல் காரணம்.
2. இரண்டாவது முக்கிய காரணம் பொதுமக்களோடு சற்றும்
தொடர்பில்லாத, அவர்களது அத்தியாவசியத் தேவைகளை சற்றும் புரிந்து
கொள்ளாமல் அவர்களை அவமதித்து வந்த
திட்டக் கமிஷன் துணைத்
தலைவர் அலுவாலியா. கிராமப்புறத்தில் நாளொன்றுக்கு ரூபாய் 26ம் நகர்
புறத்தில் ரூ 32 ம் சம்பாதித்தாலே போதும் அவர்கள் வறுமைக் கோட்டுக்கு மேல்
உள்ளவர்கள் என இவர் அறிவிக்க…, ஆமாம் ஆமாம் ஒரு ரூபாய்க்கு முழுசாப்பாடு
கிடைக்கிறது, 5 ரூபாய்க்கு கிடைக்கிறது, 12 ரூபாய்க்கு கிடைக்கிறது
என்றெல்லாம் நியாயப்படுத்தினார்களே அப்போதே காங்கிரஸ் கட்சி மக்களிடம்
இருந்து அந்நியப் படுத்தப்பட்டு விட்டது. கழிப்பறை இல்லாத நாடு என்று
காங்கிரஸ் கட்சி அமைச்சர்களே ஓங்கிப் பிரச்சாரச் செய்துவந்த போது, சுமார்
70 லட்சம் செலவில் திட்ட கமிஷன் அலுவலுகத்திற்கு மட்டுமே என கழிப்பறை
கட்டியதுதான் இவர் சாதனை.
3. மக்களோடு தொடர்பற்ற NAC, மக்களோடு தொடர்பற்ற திட்ட கமிஷன், என இந்த வரிசையில்
மக்களோடு தொடர்பற்ற பிரதமர்
மூன்றாவது, முக்கிய காரணம். எந்த நிலையிலும், பிரதமர் மன்மோகன்சிங்
அதிகாரம் படைத்தவராக ஆகிவிடக் கூடாது என்று காங்கிரஸ் கட்சி பார்த்துக்
கொண்டது. எனவே அவரையும் பொதுமக்களோடு தொடர்பற்றவாராகவே இருத்திவந்ததது.
2004 ல் அவர் பிரதமர் ஆக்கப்பட்ட சூழல் வேறாக இருந்தாலும் அதன் பின் வந்த
காலங்களில் அவரோடு மக்கள் தொடர்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கலாம். 2009
பொது தேர்தலில் அவரைப் போட்டி இட வைத்திருக்கலாம். சோனியா அம்மையாரோ, அவரது
என் ஏ சி யோ மட்டுமல்ல, காங்கிரஸ் கட்சியின் அனைத்துத் தலைவர்களும் அவர்
பலவீனமற்றவாராக இருப்பதையே விரும்பினர். தேசத்தைப் பாதுகாக்கும் பொறுப்பில்
உள்ள ஊடகங்கள் வரை பலவீனாமான பிரதமைரைத் தான் விரும்பின. அப்படியானால்
தானே நீரா ராடியா முதல் பர்காதத் வரை அரசில் புரோக்கர் செய்ய முடியும்.
நன்றி உணர்வுள்ள பிரதமரும் ” இரண்டு பவர் செண்டர் ” தேவையில்ல…அது
அவர்களாகவே இருக்கட்டும் ” என மனம் திறந்ததை அவரது முன்னாள் ஊடக ஆலோசகர்
சஞ்சய் பாரு தனது
accidental prime minister
புத்தகத்தில் தெரிவித்துள்ளார். 2009 பொதுத் தேர்தலின் போது அத்வானி தனது
பிரச்சாரத்தில் தொடர்ந்து மன்மோகன்சிங் தான் இதுவரை உள்ள பிரதமர்களில்
மிகவும் பலவீனமானவர் எனக் கூறி வந்த போது அதை தனிநபர் விமர்சனமாகக் கருதி
வாக்காளர்கள் பாஜகை நிராகரித்ததோடு அத்வானியையும் கண்டித்தனர். ஆனால் 2009
ற்குப் பிறகு சமூக ஊடகங்கள் பிரபலமான நிலையில் அத்வானி கூறிய உண்மை
வெளிப்பட்டது. ஒரே ஒரு முறை அனைத்து பத்திரிகை ஆசிரியர்களையும் அவர்
பேட்டிக்காக சந்தித்ததே மாபெரும் செய்தி ஆயிற்று. தொடர்ந்து அது போல்
சந்திப்பேன் என அவர் கூறினாலும் அதன்பின் அது போன்று ஒரு சந்திப்பு
நடைப்பெறவே இல்லை. இதன் காரணாங்களா பலவீனமான, செயல்தன்மையற்ற, மக்களோடு
தொடர்பற்ற பிரதமர் மீதான கோபம் இந்த அரசு வெளியேறப்பட மூன்றாவது, முக்கிய
காரணம் ஆயிற்று.
4. கிராமப்புறங்களில் ஒரு பழமொழி உண்டு. ” சும்மா போற
ஓணான எடுத்து மடில உட்டுட்டு குத்துதே..குடையுதேன சொன்ன மாதிரி ”
என்பார்கள். சிறுபாண்மை ஓட்டுக்காக ” இந்த நாட்டின் இயற்கை வளங்களிம் முதல்
உரிமை மதச் சிறுபாண்மையினருக்கே ” என்ற பிரதமர், ஹிந்துகளை
பயங்கரவாதிகளாகக் காட்ட எண்ணி ஜோடிக்கப்பட்ட வழக்குகள் ( இன்று வரை
அவற்றில் ஒன்று கூட நீருபிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது ),
அமைச்சர் சிதம்பரத்தின் ” காவி பயங்கரவாதம் ” என்ற அரிய கண்டு பிடிப்பு,
அந்நிய நாட்டு ஊடகங்களிடம் ” உலகு தழுவிய ஜிகாதிய பயங்கரவாதம் அல்ல,
தேசமெங்கும் பரவியுள்ள பெரும்பாண்மை பயங்கரவாதமே இந்தியாவிற்கு ஆபத்து ” என
ஜிகாதிகளுக்கு நற்சான்று வழங்கி ஹிந்துமக்களை பயங்கரவாதியாக சித்தரித்த
ராகுல், எல்லாவற்றிற்கும் மேலாக ” இந்தத் தேர்தல் பாஜக வுக்கும்
காங்கிரஸிக்குமான தேர்தல் அல்ல, ஆர் எஸ் எஸிக்கும் காங்கிரஸூக்குமான
தேர்தல் எனக் கூறி ” இதோடு ஆர் எஸ் எஸ் ஒழிந்தது, ஹிந்து தேசியம் பேசுவோர்
ஒழிந்தனர் ” எனப் பல்வேறு நடவடிக்கைகளால், அன்றாட அரசியலிலும் தேர்தல்
அரசியலிலும் தலையிடாத
ஆர்..எஸ்.எஸ். இயக்கத்தை தேர்தல் களத்தில் இறக்கியது
தோல்விக்கான நான்காவது பெரும் காரணம். அண்ணால் காந்தியும், ஏன் நேருவும்
இந்திராவும் கூட தேசத்திற்கு அவசியம் தேவையான இயக்கம் என்று உணர்ந்து
உரைக்கப்பட்ட ஆர் எஸ் எஸ் இயக்கத்தை ஒழிக்க நினைத்தவர்கள் ஒழிந்து போய்
இருக்கிறார்கள். இதுதான் உண்மை.
நன்றி-
http://www.tamilhindu.com