Saturday, 18 October 2014

பெரம்பலூரில்ராணுவ ஆள் சேர்ப்பு முகாம் நடக்க உள்ளதை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்வது குறித்து ஆலோ சனை கூட்டம் பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.இக்கூட்டத்தில் கலெக் டர் தரேஷ்அஹமது தலைமை வகித்தார். அப்போது அவர் பேசியதாவது: வரும் நவ. 19ம் தேதி முதல் 26ம் தேதி வரை இந்திய ராணுவத்துக்கு தேவையான ஆட்களை தேர்வு செய்யும் முகாம் பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெறுவது இம்மாவட்ட இளைஞர்களுக்கு...
விசுவக்குடி நீர்த்தேக்கத் திட்டத்துக்கான மறு மதிப்பீட்டின் படி கூடுதலாக ரூ. 14.7 கோடி பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என்றார் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது.பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், கல்லாறு ஒடையின் குறுக்கே ரூ. 19 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் விசுவக்குடி நீர்த்தேக்கத் திட்ட பணிகளை வெள்ளிக்கிழமை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட அவர் மேலும் கூறியது:கல்லாறு ஒடையின்...
இராமநாதபுரம் SP பட்டிணத்தில் 14.10.2014ம் தேதியன்று விசாரணைக்காக கைது செய்யப்பட்ட செய்யது முகமது என்ற ரவுடி காவல்துறை விசாரணையின் போது காவல்துறை உதவி ஆய்வாளர் திரு. காளிதாஸை கத்தியால் குத்தி கொல்ல முயன்றார். தன் உயிரை காப்பாற்றிக் கொள்ள காவல்துறை உதவி ஆய்வாளர் துப்பாக்கியால் சுட்ட போது செய்யது முகமது இறந்து விட்டார். இதைத் தொடர்ந்து SP பட்டிணத்தில் இஸ்லாமியர்கள் பேருந்துகளில் இருந்த முஸ்லீம்களை...

Wednesday, 15 October 2014

நாயன்மார் ஆழ்வாரின் மண் நயவஞ்சகத்தால் ஈவேராவின் மண் அண்ணாவின் மண் என்று மாறும் சூழ்நிலையில் விடி வெள்ளியாக முளைத்து தமிழ் மண்ணின் மான்பை காத்து நாயன்மார்களையும் ஆழ்வார்களையுமே தமிழகம் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று கர்ஜித்த வீரத்துறவி ஐயா இராமகோபாலன் அவர்களின் பிறந்த நாள் இன்று(15.10.2014). பாரத நாட்டின் பண்பாட்டிற்கும் பாரம்பரியத்திற்கும் அச்சுறுத்தலாக இருக்கும் கிறிஸ்தவ இஸ்லாமிய கம்யூனியச...
வ.களத்தூரில் நாளை சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெற உள்ளது. நேற்று தமிழக தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்ட புதிய வரைவுவாக்காளர் பட்டியல் தொடர்பான கூட்டத்தில் நம் பெயர் வாக்காளர்பட்டியலில் உள்ளதா எனவும் அறியலாம். வ.களத்தூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி வளாகத்தில் நாளை  17- 10-2014 வெள்ளிக்கிழமை காலை 11 மணி அளவில் நடைபெற உள்ளத...
தமிழக தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்ட வாக்காளர் பட்டியலில் வ .களத்தூர் வாக்காளர்பட்டியல் வார்டு வாரியாக விபரம் உங்களின் கவனத்திற்கு......... இந்த பட்டியல் pdf கோப்பில் உள்ளது... மேலும் தேர்தல் ஆணைய இணையதள  இணைப்பும் கொடுக்கப்பட்டுள்ளது... இணைப்பில் சொடுக்கி (click) செய்து பார்க்கவும்.......... 1.வ.களத்தூர் (வ.கி) மற்றும் வ.களத்தூர் (ஊ)  ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி (பெண்கள்) வண்ணாரம்பூண்டி வடக்குபகுதி வடக்கு மெத்தை கட்டிடம் வ.களத்தூர்.1-நடுத்தெரு வார்டு 12-தெற்கு தெரு வார்டு...
போலீஸ் உதவி ஆய்வாளர் ஒருவரை போலீஸ் நிலைய விசாரனையின் போதே பல வழக்குகளில் தொடர்புடைய ஒரு ரவுடி கத்தியால் குத்தி இருக்கிறார். அந்த எஸ்.ஐ தன்னை தற்பாதுகாத்துக்கொள்ளும் பொருட்டு ரவுடியை துப்பாக்கியால் சுட்டிருக்கிறார். அதனால் அந்த ரவுடி இறந்தார். இறந்தவர் முஸ்லீம் என்பதால் எல்லா முஸ்லிம் அமைப்புகளும் ஒன்று கூடி போகும் வரும் பேருந்துகளை நிறுத்தி ஹிந்துக்களை மட்டும் அடித்து விரட்டியுள்ளனர்....
பெரம்பலூரில் கடை யின் பின்பக்க தகர கதவை வளைத்து மளிகை கடையில் ரூ.1½ லட்சத்தை மர்ம மனிதர்கள் கொள்ளை யடித்து சென்ற னர். மளிகை கடையில் கொள்ளை பெரம்பலூர் பாரதிநகரை சேர்ந்தவர் முருகேசன் (வயது 35). இவர் பெரம்பலூர் புறநகர் பஸ் நிலையம் அருகே வெங்கடாஜலபதி நகரில் மளிகை கடை நடத்தி வருகிறார். மளிகை கடையை ஒட்டி சிறிய அறையும் உள்ளது. நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்த பின்னர் முருகேசன் கடையை பூட்டிவிட்டு...

Tuesday, 14 October 2014

பெரம்பலூர்,: பெரம்பலூர் ஐஓபி சார்பாக புகைப்படம் மற்றும் வீடியோ எடுப்பதற்கான இலவசப் பயிற்சிபெற தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம் என பயிற்சி மைய இயக்குநர் பார்த்தசாரதி அறிவித்துள்ளார்.  இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பெரம்பலூரில் உள்ள ஐஓபி கிராமிய சுயவேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் வரும் 16ம்தேதி முதல் புகைப்படம் எடுத்தல் மற்றும் வீடியோ எடுப்பதற்கான பயிற்சி இலவசமாக அளிக்கப்படவுள்ளது....
பெரம்பலூர், : சிறுமத்தூர் ஊராட்சிக்கு உட் பட்ட நமையூர் நடுத்தெரு வில் குடிநீருடன் சாக்கடை நீர் கலந்து வருவதை தடுக்கக்கோரி கலெக்டரிடம் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். பெரம்பலூர் மாவட் டம், குன்னம் தாலுகா, பேரளி கிராமத்தைச் சேர்ந்த பொது மக்கள் நேற்று கலெக்டர் தரேஸ்அஹமதுவிடம் அளித்துள்ள கோரிக்கை மனுவில் தெரிவித்திருப்பதாவது : பேரளி கிராமத்தில் 20ஆண்டுகளுக்கு முன்பு 1994ல் ஆதிதிராவிடர் மற்றும்...
இராமநாதபுரம் மாவட்டம் சுந்தரபாண்டியன் பட்டினத்தில் (SP பட்டினம்) அரும்பூரைச் சேர்ந்த கிறிஸ்தவ தேவேந்திர குலத்தைச் சார்ந்த சியோன் என்பவரின் மகன் அருள்தாஸ் டூ வீலர் மெக்கானிக் கடை நடத்தி வருகிறார். இன்று(14.10.2014) மதியம் சுமார் 2 மணியளவில் SP பட்டிணத்தைச் சேர்ந்த சையத் முகமது என்பவர் பழுதுபார்க்க கொடுக்கப்பட்ட அவரது நண்பரின் டூ வீலரை அருள்தாஸின் கடைக்குச் சென்று கேட்டார். வண்டியை என்னிடம்...
இளநிலை உதவியாளர் உள்ளிட்ட 5 ஆயிரம் பணியிடங்களுக்கு குரூப்–4 தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க நவம்பர் 12–ந் தேதி கடைசி நாள். 5 ஆயிரம் பணியிடங்கள் இது குறித்து தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய செயலாளர் விஜயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தொகுதி 4–ல் அடங்கிய கீழ்க்காணும் பதவிகளுக்கு...
பல இலட்சம் இந்துக்களை கொன்று குவித்து, மதமாற்றி பல்லாயிரகணக்கான கோவில்களை இடித்து ஆற்றங்கரையை உடைத்து பஞ்சத்தை ஏற்படுத்தி வெளிநாட்டுகாரர்களை பாரதத்தின் மீது படையெடுக்க அழைத்த தேசத்துரோக அரசர்களான திப்பு சுல்தான் ஹைதர் அலிக்கு திண்டுக்கல் மாவட்டத்தில் மணிமண்டபம் அமைக்க தமிழக அரசு அறிவித்தது. இந்த அறிவிப்பு வந்தவுடன் மின்னல் வேகத்தில் அரசு அதிகாரிகள் செயல்பட்டனர். திண்டுக்கல் நகரத்தினுள் மணிமண்டபம்...

Monday, 13 October 2014

பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் ஆய்வுக்கு செல்லும்போது லஞ்சம் கேட்பதாக கூறி இன்று காலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கிவரும் மாவட்ட முதன்மை  கல்வி அதிகாரியின் அலுவலகத்தை தனியார் பள்ளி நிர்வாகிகள் முற்றுக்கை இட்டனர். ஆய்வின் பொது ரூ.25000/- லஞ்சம் கேட்பதும் , மட்டன் பிரியாணி வாங்கி கொடுக்க வேண்டும் என்பதும் எழுதப்படாத விதியாக இருப்பதாக கூறும் தனியார் பள்ளி...

Sunday, 12 October 2014

ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் சார்பில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில், துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி கலந்து கொண்டார். ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் சார்பில் நேற்று மாலை டில்லியில் புத்தக வெளியீட்டு விழா ஒன்று நடந்தது. "என்சைக்ளோபீடியா ஆப் ஹிந்துயிசம்" என்ற அந்த புத்தகத்தை ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் மற்றும் ஹமீத் அன்சாரி ஆகியோர் இணைந்து வெளியிட்டனர். ...