நாயன்மார் ஆழ்வாரின் மண்
நயவஞ்சகத்தால் ஈவேராவின் மண் அண்ணாவின் மண் என்று மாறும் சூழ்நிலையில் விடி
வெள்ளியாக முளைத்து தமிழ் மண்ணின் மான்பை காத்து நாயன்மார்களையும்
ஆழ்வார்களையுமே தமிழகம் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று கர்ஜித்த வீரத்துறவி
ஐயா இராமகோபாலன் அவர்களின் பிறந்த நாள் இன்று(15.10.2014). பாரத நாட்டின்
பண்பாட்டிற்கும் பாரம்பரியத்திற்கும் அச்சுறுத்தலாக இருக்கும் கிறிஸ்தவ
இஸ்லாமிய கம்யூனியச அரக்கர்களை இந்து ஒற்றுமை என்ற கோதண்டத்தினால் தகர்க்க
பாஞ்சஜன்யத்தை ஊதிய நம் கலியுக ராமகோபலானின் 88வது பிறந்த நாள் விழா இன்று
15.10.2014 அசோக்நகர் ஆஞ்சநேயர் கோவிலில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.
அவரது பிறந்தநாளையொட்டி கோவிலில் காலை
முதல் கணபதி ஹோமம், ஆயுஷ்ய ஹோமம், மிருத்ஞ்ஜய ஹோமம் மற்றும் சுதர்சன ஹோமம்
ஆகியவை வெகு சிறப்பாக நடைபெற்றது. ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும்
அலங்காரங்கள் நடைபெற்றது. விஜய் டிவி புகழ் திருமதி. சிந்துஜா சந்திரமெளலி
பக்தி பாடல்கள் மற்றும் தேசப்பக்தி பாடல்களை பாடினார்.
இந் நிகழ்ச்சியில் குமுதம் ஜோதிடம்
ஆசிரியர். தேச பக்தர் திரு. A.M. இராஜகோபால் அவர்கள் கலந்துக் கொண்டு
சிறப்பித்தார். இந்து முன்னணி பொறுப்பாளர்களும் பொதுமக்களும் திரளாக கலந்து
கொண்டு சிறப்பித்தனர்.
இதில், வேத விஞ்ஞான ஆராய்ச்சி மையத்தின்
உறுப்பினர்களும் கலந்து கொண்டு வீரத்துறவி ஐயா இராமகோபாலன் அவர்களின்
பொற்பாதங்கள் பணிந்து ஆசிப்பெற்றனர்.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரும் வீரத்துறவி ஐயா இராமகோபாலன் அவர்களை போலவே தாங்களும் இந்து சமுதாயப் பணியில் தொடர்ச்சியாக மனந்தளராமல் ஈடுபட அவரிடம் ஆசி வேண்டினர்.
நன்றி- VSRC
0 comments:
Post a Comment