Tuesday, 14 October 2014


பெரம்பலூர்,: பெரம்பலூர் ஐஓபி சார்பாக புகைப்படம் மற்றும் வீடியோ எடுப்பதற்கான இலவசப் பயிற்சிபெற தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம் என பயிற்சி மைய இயக்குநர் பார்த்தசாரதி அறிவித்துள்ளார்.  இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பெரம்பலூரில் உள்ள ஐஓபி கிராமிய சுயவேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் வரும் 16ம்தேதி முதல் புகைப்படம் எடுத்தல் மற்றும் வீடியோ எடுப்பதற்கான பயிற்சி இலவசமாக அளிக்கப்படவுள்ளது. இப்பயிற்சியில் சேர்ந்திட விரும்பும் நபர் 18வயதிற்கு மேற்பட்டவராகவும், 35 வய திற்குக் குறைவானவராகவும் இருத்தல் வேண்டும். குறைந்தபட்சம் 8ம்வகுப்பு படித்த வராக இருத்தல் வேண்டும். பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவராக இருத்தல் வேண் டும். சுயதொழில் தொடங்குவதில் ஆர்வம் உள்ளவராக இருத்தல் வேண்டும். வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

 இந்தப்பயிற்சி தொடர்ந்து 21 நாட்களுக்கு தினமும் காலையில் 10மணிக்குத் தொடங்கி மாலை 5மணிவரை அதிநவீன உபகரணங்களைக் கொண்டு, சிறந்த புகைப் பட, வீடியோ கலைஞர்களைக்கொண்டு நடைபெறும். பயிற்சி காலத்தில் பயிற்சி பெறுவோருக்கு மதிய உணவு இலவசமாக வழங்கப்படும். பயிற்சி முடித்தவுடன் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பயிற்சிக்கான சான்றிதழ் வழங்கப்படும். இந்தச் சான்றிதழ் அரசால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழாகும்.
பயிற்சியில் சேர்ந்து பயன்பெற விரும்புவோர் பெரம்பலூர் ரங்கா நகரில்உள்ள ஐஓபி கிராமிய சுயவேலைவாய்ப்பு பயிற்சி மையத்தின் இயக்குனரிடம் தங்களது பெயர், வயது, விலாசம், கல்வித்தகுதி ஆகியவற்றைக் குறிப்பிட்டு விண்ணப்பிக்க வேண்டும்.

 குடும்பஅட்டை, வாக்காளர் அடையாள அட்டை, பள்ளியின் மாற்றுச் சான்றிதழ் ஆகியவற்றின் நகல், 4 பாஸ்போர்ட்அளவு போட்டோ ஆகியவற்றையும் விண்ணப்பத் துடன் இணைத்து அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மேலும் விபரங்களை அறிந்துகொள்ள ஐஓபி கிராமிய சுயவேலைவாய்ப்புப் பயிற்சிமையம், ரங்காநகர், ஆத்தூர்ரோடு, பெரம்பலூர், தொலைபேசி எண் 04328-277896 என்ற முகவரியில் நேரிலோ, தொலைப் பேசியிலோ தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார்.

-தினகரன்.

0 comments:

Post a Comment