பெரம்பலூரில்
ராணுவ ஆள் சேர்ப்பு முகாம் நடக்க உள்ளதை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்வது குறித்து ஆலோ சனை கூட்டம் பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.
இக்கூட்டத்தில் கலெக் டர் தரேஷ்அஹமது தலைமை வகித்தார். அப்போது அவர் பேசியதாவது: வரும் நவ. 19ம் தேதி முதல் 26ம் தேதி வரை இந்திய ராணுவத்துக்கு தேவையான ஆட்களை தேர்வு செய்யும் முகாம் பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெறுவது இம்மாவட்ட இளைஞர்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பாகும். இந்த ஆள்சேர்ப்பு முகாமில் கலந்துகொள்ள உள்ளவர்களை தேர்வு செய்ய அனைத்து பணிகளும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் சிறப்பாக ஏற்பாடுகள் செய்யப்படும்.
நகராட்சி மற்றும் உள்ளா ட்சி நிர்வாகங்களின் மூலமாக வருகை தரும் அனைத்து இளைஞர்களுக்கும் சுத்தமான குடிநீர், கழிப்பிட வசதி, விளை யாட்டு மைதானம் மற்றும் சுற்றியுள்ள இடங்களில் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட உள் ளது. மாவட்ட விளையாட்டு அரங்கத்தை சுற்றிலும் உள்ள இடங்கள் சுத்தம் செய்யப்பட்டு ஆள்சேர்ப்பு பணிகளுக்கு பயன்படுத்தப்பட உள்ளது. பாதுகாப்பு ஏற்பாடுகளில் போலீஸ் துறை யி னர், ஊர்க்காவல் படை யினர் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
முகாமில் சான்றிதழ் சரிபார்ப்பு, உடற்தகுதி, ஓட்டப்பந்தயம், மருத்துவ தகுதிகள் குறித்த தேர்வுகள் நடக்க உள்ளன. அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் காரைக்கால் உள்ளி ட்ட 15 மாவட்டங்களை சேர்ந்த தகுதியான ஆட்கள் ராணுவத்திற்கு தேர்வு செய்யப்பட உள்ளனர்.
பல்வேறு மாவட்ட இளைஞர்களின் சான்றிதழ் சரிபார்க்கும் பணிகளுக்காக அந்தந்த மாவட்டங்களை சேர்ந்த வருவாய்த்துறை மற்றும் கல்வித்துறை அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
திறமையும், ஆர்வமுள்ள இளைஞர்கள் முகாமில் பங்கேற்று, தேர்வு பெற்று இந்திய ராணுவத்தை வலுப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித் தார். இதில் டிஆர்ஓ., ராஜன் துரை, சப்.கலெக்டர் மதுசூதன்ரெட்டி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் துரைமுனுசாமி, ராணுவ அதிகாரி அனுதீப் சிங் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
-தினகரன்.
0 comments:
Post a Comment