பல இலட்சம் இந்துக்களை கொன்று குவித்து,
மதமாற்றி பல்லாயிரகணக்கான கோவில்களை இடித்து ஆற்றங்கரையை உடைத்து பஞ்சத்தை
ஏற்படுத்தி வெளிநாட்டுகாரர்களை பாரதத்தின் மீது படையெடுக்க அழைத்த
தேசத்துரோக அரசர்களான திப்பு சுல்தான் ஹைதர் அலிக்கு திண்டுக்கல்
மாவட்டத்தில் மணிமண்டபம் அமைக்க தமிழக அரசு அறிவித்தது. இந்த அறிவிப்பு
வந்தவுடன் மின்னல் வேகத்தில் அரசு அதிகாரிகள் செயல்பட்டனர். திண்டுக்கல்
நகரத்தினுள் மணிமண்டபம் கட்டும் முயற்சியை அப்பகுதி இந்துக்கள்
முறியடித்தனர். அதை தொடர்ந்து திண்டுக்கல் அகரம் பேரூராட்சியில் மணிமண்டபம்
அமைக்கும் முயற்சியை அரசு மேற்கொண்டது. தன்மானம் மிக்க இந்துக்கள் அரசின்
இந்த முயற்சியை முறியடித்தனர். சற்றும் மனம் தளராத அரசு அதிகாரிகள் திப்பு
ஹைதர் வேதாளத்தை விடாமல் பிடித்துக்கொண்டு ஆத்தூர் ஒன்றியம்
புதுகோடாங்கிப்பேட்டை என்ற இடத்தில் அமைக்க முடிவு செய்தனர். தொழுநோய்
மருத்துவமனைக்காக திரு. சபரி முத்து பிள்ளை அவர்கள் 50 ஆண்டுகளுக்கு முன்
அரசுக்கு கொடுத்த 5 ஏக்கர் நிலத்தில் இந்த திப்பு ஹைதர் கிருமிகளுக்கு
மணிமண்டபம் கட்டப்போகிறார்களாம்! 30 ஆண்டுகளுக்கு முன் இந்த தொழுநோய்
மருத்துவமனைக்கு மூடு விழா நடத்திய அரசு அந்த இடத்தில் ஒரு
பள்ளிக்கூடத்தையோ, ஒரு ஆரம்ப சுகாதார நிலையத்தையோ, பொதுக்கழிவறையையோ கூட
கட்டியிருக்கலாம். மக்கள் நலத்தை பேணிக்காக்க எந்த அவசரமும் காட்டாத அரசு
இந்த தொழுகை நோய்க்கு மணிமண்டபம் அமைக்க ஏன் இப்படி குதிக்கிறதோ?
தொழுநோய் மருத்துவமனைக்கு மூடுவிழா
நடத்திய பின் இந்த இடம் பொதுப்பணித்துறையின் கட்டுபாட்டின் கீழ் வந்தது.
இந்நிலையில் 10.10.2014 அன்று துப்புரவு பணியாளர்கள் அந்த இடத்தை சுத்தம்
செய்துள்ளார்கள். அப்பகுதி மக்கள் அதைப்பற்றி விசாரித்தப்போது அரிசி அல்லது
சிமெண்ட் குடோன் கட்டப்போவதாக கூறியுள்ளார்கள். 11.10.2014 அன்று காலையில்
இந்த இடத்தில் திப்பு ஹைதர் அலி மணிமண்டபம் கட்ட அரசு முடிவெடுத்துள்ளது
தெரிய வந்தது. அதிர்ச்சியடைந்த ஊர்மக்கள் , உடனேயே சம்பவ இடத்திற்குச்
சென்று எதிர்ப்பைத் தெரிவித்தனர். ஊர் மக்களின் எதிர்ப்பை கண்ட
பணியாளர்கள், வேலையை நிறுத்திவிட்டனர். 35 ஆண்டுகளாக அந்த இடத்தில் இருந்த
விநாயகர் சிலை காணாமல் போனதை உணர்ந்த கிராம மக்கள், உடனே மூன்று கற்களை
ஊன்றி முருகன், விநாயகர் மற்றும் கருப்பசாமியாக வழிபட்டனர்.
இந்நிலையில், அக்டோபர் மாதம் 2ம் தேதி
நடக்கவிருந்த கிராமசபை கூட்டம், ஆயுத பூஜை என்பதால் 12.10.2014 அன்று ஒத்தி
வைக்கப்பட்டிருந்தது. இந்தக் கூட்டத்தில், திப்பு ஹைதர் மணிமண்டபம் அமையக்
கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தக் கூட்டத்தில் ஊராட்சி
மன்ற தலைவர் திரு. இளங்கோவன், துணைத்தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் 8
பேர், சீவல்சரகு ஊராட்சி VAO , RI மற்றும் புதுகோடாங்கிப்பட்டி கிராம
மக்கள் கலந்து கொண்டனர்.
கிராம மக்கள் கொண்டு வந்த தீர்மானத்தில்,
திப்பு ஹைதர் அலி மணிமண்டபம் அமைந்தால், ஊர் பயங்கரவாதிகளின் கூடாரமாக
மாறிவிடும் என்றும், கோயில் திருவிழாக்களுக்கு பாதிப்பு ஏற்படும், பொது
அமைதி கெடும் என்றும் குறிப்பிடப்பட்டது.
இந்தப் போராட்டத்தின் தொடர்ச்சியாக,
13.10.2014 அன்று காலை நூற்றுக்கும் மேற்பட்ட புதுக்கோடாங்கிப்பட்டி கிராம
மக்கள் திண்டுக்கல் ஆட்சியரைச் சந்தித்து திப்பு ஹைதர் அலி மணிமண்டபம் அமைய
எதிர்ப்பு தெரிவித்து மனு கொடுக்க சென்றனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்
இல்லாத காரணத்தினால், அப்பொறுப்பில் இருந்த DRO மனுவைப் பெறுக்கொண்டு,
ரசீதும் கொடுத்துள்ளார். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த கிராம மக்கள்,
எக்காரணம் கொண்டும் திப்பு ஹைதர் மணிமண்டபத்தை வரவிடமாட்டோம் என்று
ஆவேசமாகக் கூறினர். இந்தப் போராட்டத்திற்கு அனைத்து உதவிகளையும் செய்து
ஊக்கப்படுத்திய இந்து முன்னணியின் திண்டுக்கல் நகரச் செயலாளர் திரு.சங்கர்
கணேஷ், ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மாவட்ட அமைப்பாளர் திரு.கிருஷ்ணராஜ், பாரதீய
ஜனதா கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் திரு.போஸ் ஆகியோரின் பணி
பாராட்டுக்குரியது.
இந்தப் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்திக்
கொண்டிருக்கும் கிராம மக்களுக்கும், இந்து அமைப்பினருக்கும் ஆதரவு
தெரிவித்து தோளுடன் தோள் சேர்ந்து போராடுவது நம் கடமையாகும்.
நன்றி- http://www.vsrc.in
0 comments:
Post a Comment