பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் ஆய்வுக்கு செல்லும்போது லஞ்சம் கேட்பதாக கூறி இன்று காலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கிவரும் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியின் அலுவலகத்தை தனியார் பள்ளி நிர்வாகிகள் முற்றுக்கை இட்டனர்.
ஆய்வின் பொது ரூ.25000/- லஞ்சம் கேட்பதும் , மட்டன் பிரியாணி வாங்கி கொடுக்க வேண்டும் என்பதும் எழுதப்படாத விதியாக இருப்பதாக கூறும் தனியார் பள்ளி நிர்வாகிகள் பிற மாவட்டங்களுக்கு மாறுதல் பெற்றும் அரசு பள்ளி ஆசிரியர்கள் ரூ.பத்தாயிரம் கொடுத்தால் தான் பணி விடுவிக்கப்படுவதாக கூறுகின்றனர்.
நல்ல முறையில் மாவட்ட ஆட்சித்தலைவர் நிர்வாகத்தை நடத்துகிறார் என்று மக்களால் கூறப்படும் நிலையில் இது போல் லஞ்சம் தலைவிரித்தாடுவது வருந்தத்தக்கது.
தனியார் பள்ளி நிர்வாகிகளால் வெளியிடப்பட்ட கிசு கிசு செய்தி. |
பட உதவி-வசந்த ஜீவா.
0 comments:
Post a Comment