பெரம்பலூர், : சிறுமத்தூர் ஊராட்சிக்கு உட் பட்ட நமையூர் நடுத்தெரு வில் குடிநீருடன் சாக்கடை நீர் கலந்து வருவதை தடுக்கக்கோரி கலெக்டரிடம் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
பெரம்பலூர் மாவட் டம், குன்னம் தாலுகா, பேரளி கிராமத்தைச் சேர்ந்த பொது மக்கள் நேற்று கலெக்டர் தரேஸ்அஹமதுவிடம் அளித்துள்ள கோரிக்கை மனுவில் தெரிவித்திருப்பதாவது :
பேரளி கிராமத்தில் 20ஆண்டுகளுக்கு முன்பு 1994ல் ஆதிதிராவிடர் மற்றும் அருந்ததியினர் இனத்தவர்களுக்கு வழங்கப்பட்ட 223 மனைப்பட்டாக்களில் அவரவருக்கு ஒதுக்கப்பட்ட மனைகளில் வீடுகட்ட சென்றபோது, நிலத்தின் உரிமையாளர், தனக்கான நிவாரணத்தொகை இன்னமும் வழங்கப்படவில்லை எனக்கூறி தடுத்துவிட்டார். இதுகுறித்து பலஅதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை. 20 ஆண்டுகளாகப் போராடி வரும் எங்களுக்கு வழங்கப்பட்ட நிலத்தில் வருகிற 17ம்தேதி வீடுகட்ட உள்ள தால், எங்களுக்குத் தேவை யான பாதுகாப்புகளை வழங்கிட உத்தர விடவேண் டும் அல்லது இருதரப்பின ரை அழைத்து அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என அந்த மனு வில் தெரிவித்துள்ளனர்.
இதேபோல பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் ஒன்றியம், நமையூர் கிராமப் பொதுமக்கள் அளித்துள்ள கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளதாவது :
வேப்பூர் ஒன்றியம், சிறுமத்தூர் ஊராட்சிக்குட்பட்ட நமையூர் நடுத்தெருவில் இருபுறமும் கழிவுநீர் வடிக்கால் கடந்த ஓராண்டிற்கு முன்பு கட்டப்பட்டது. இதில் தென்புறம் கழிவு நீர்வாய்க்கால் முழுமையாகக் கட்டி முடிக்கப்பட்டு கழிவுநீர் தேங்காமல்ஓடி அருகில் உள்ள ஓடையில் சேரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் வடபுறம் வாய்க்கால் முழுமையாக கட்டிமுடிக்கப்படாமல் உள்ளது. இதனால் கழிவுநீர்செல்ல வழியில்லாமல் தேங்கி, வாய்க்கால் அருகிலுள்ள குடிநீர் குழாயில் சேர்வதால் குடிநீரில் சாக்கடைநீர் கலந்து வருகிறது.
எனவே சுகாதாரக் கேடு ஏற்பட்டு தொற்றுநோய் பரவும்அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து வேப்பூர் ஊராட்சிஒன்றிய அலுவலர்களிடமும் பலமுறை புகார்கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே நமையூர் நடுத்தெருவில் கட்டப் படாமல்உள்ள கழிவுநீர் வாய்க் கலை முழுமையாகக்கட்டி கழிவுநீர் தேங்காமல் வெளியேற்றி சுகாதார சீர்கேடு ஏற்படா வண்ணம் தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டு மென அந்த கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளனர்.
மனுவினைப் பெற்றுக்கொண்ட கலெக்டர் தரேஸ்அஹமது உரிய நடவடிக்கை எடுக்க சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
-தினகரன்.
0 comments:
Post a Comment