Wednesday, 15 October 2014


பெரம்பலூரில் கடை யின் பின்பக்க தகர கதவை வளைத்து மளிகை கடையில் ரூ.1½ லட்சத்தை மர்ம மனிதர்கள் கொள்ளை யடித்து சென்ற னர்.

மளிகை கடையில் கொள்ளை

பெரம்பலூர் பாரதிநகரை சேர்ந்தவர் முருகேசன் (வயது 35). இவர் பெரம்பலூர் புறநகர் பஸ் நிலையம் அருகே வெங்கடாஜலபதி நகரில் மளிகை கடை நடத்தி வருகிறார். மளிகை கடையை ஒட்டி சிறிய அறையும் உள்ளது. நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்த பின்னர் முருகேசன் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென் றார்.

பின்னர் நேற்று காலை வழக்கம்போல் முருகேசன் கடையை திறக்க வந்தார். அவர் கடையை திறந்து பார்த்தபோது பின்பக்க தகர கதவு வளைக் கப்பட்டு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் பணம் இருந்த இரும்பு கல்லா பெட்டியை பார்த்தபோது அது திறந்து கிடந்தது. அதன் அருகே 10 ரூபாய் நோட்டுகள் கொண்ட ஒரு கட்டு கிடந்தது. இதையடுத்து அந்த பெட்டியில் வைத்திருந்த ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் கொள்ளையடிக்கப் பட்டிருப்பது அவருக்கு தெரிய வந்தது.

போலீசார் விசாரணை

இதுகுறித்து முருகேசன் பெரம்பலூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீ சார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், நள்ளிரவில் மர்ம மனிதர்கள் பின்பக்க தகர கதவை வளைத்து கடைக்குள் புகுந்து, கல்லா பெட்டியில் இருந்த பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து விரல்ரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வந்து கைரேகை களை பதிவு செய்த னர்.

பெரம்பலூரில் சமீப காலமாக கொள்ளை சம் பவங் களு ம் , தெருவில் நடந்து செல்லும் பெ ண்களிடம் நகை பறிப்பு சம்பவங்களும் அதிகமாக நடந் து வருகின்றன. புறநகர் பஸ் நிலையம் எதிரே உள்ள ஓட்ட லில் ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் கொள்ளை அடிக்கப்பட்டது. வடக்கு மாதவி சாலையில் ஒரு ஆசிரியையிடமும், துறைமங் கலம் புதுக்காலனியில் ஒரு பெண்ணிடமும், ரோவர் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் நகைகளை மர்ம மனிதர்கள் பறித்து சென் றனர்.

கூடுதல் போலீசார்நியமிக்க கோரிக்கை

பெரம்பலூர் போலீஸ் நிலை யத்தில் குறைவான எண்ணி க்கையிலேயே போலீசார் உள்ளனர். இதனால் கொள் ளையர்கள் நோட்டம் விட்டு, திட்டம்போட்டு அடிக்கடி தங்களது கைவரிசையை காட்டி வருகின்றனர். இதனை தடுக்க கூடுதல் போலீ சாரை நியமிக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின் றனர்.

-தினத்தந்தி.

0 comments:

Post a Comment