இராமநாதபுரம் SP பட்டிணத்தில்
14.10.2014ம் தேதியன்று விசாரணைக்காக கைது செய்யப்பட்ட செய்யது முகமது என்ற
ரவுடி காவல்துறை விசாரணையின் போது காவல்துறை உதவி ஆய்வாளர் திரு. காளிதாஸை
கத்தியால் குத்தி கொல்ல முயன்றார். தன் உயிரை காப்பாற்றிக் கொள்ள
காவல்துறை உதவி ஆய்வாளர் துப்பாக்கியால் சுட்ட போது செய்யது முகமது இறந்து
விட்டார்.
இதைத் தொடர்ந்து SP பட்டிணத்தில்
இஸ்லாமியர்கள் பேருந்துகளில் இருந்த முஸ்லீம்களை மட்டும் பத்திரமாக இறங்கி
போகச்செய்து விட்டு இந்துக்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இராமநாதபுரம் மாவட்டத்தில் 144 தடை உத்திரவு இருக்கும்பொழுது முன் அனுமதி
பெறாமல் வேன்களில் கொடி கட்டி ஊர்வலமாக சென்று அரசு மருத்துவமனையின் முன்
ஆர்பாட்டமும் அராஜகமும் செய்துள்ளனர். இவை அனைத்தையும் எந்த நடவடிக்கையும்
எடுக்காமல் காவல்துறை வேடிக்கைப் பார்த்துக்கொண்டுள்ளது.
காவல்நிலையத்திலேயே ரவுடித்தனம் செய்து
உதவி ஆய்வாளரையே குத்தி கொல்ல முயன்ற ரவுடியை தற்காப்பிற்காக சுட்ட
காவல்துறை ஆய்வாளர் திரு. காளிதாஸ் அவர்கள் மீது சட்டப்படி விசாரணை
நடந்துக்கொண்டிருக்கும் சூழ்நிலையில், நீதி விசாரணை முழுவதுமாக முடியாத
நிலையில் காவல்நிலையத்தில் ரவுடித்தனம் செய்த செய்யது முகமதுவிற்கு அரசு
ரூ.5,00,000/- ம் கொடுக்கப்பட்டதை கண்டித்தும், அந்த பணத்தை திரும்ப பெற
கோரியும், இச் சம்பவத்தை காரணம் காட்டி அராஜகம் செய்து வரும் இஸ்லாமிய
அமைப்புகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரியும் இராமநாதபுரம் இந்து
முன்னணியின் சார்பில் திரு. கே. இராமமூர்த்தி, மாவட்ட செயலாளர் அவர்கள்
இன்று (17.10.2014) மாவட்ட காவல்துறை கண்கானிப்பாளர் திரு. மயில்வாகனனிடம்
மனு கொடுத்துள்ளார்.
இந்த கோரிக்கைகளை ஏற்று இஸ்லாமிய
அராஜகத்தை ஒடுக்கி சட்டத்தின் ஆட்சியை இராமநாதபுரத்தில் தமிழக அரசு நிலை
நிறுத்த வேண்டும். வழக்கம் போல் இஸ்லாமியர்களின் வன்முறையின் முன்
மண்டியிட்டு முஸ்லீம்களுக்கு சலுகைகளை வழங்கினால் அது பயங்கரவாதத்தை
ஊக்கப்படுத்தும். இராமநாதபுரம் மேலும் சீரழிந்து காஷ்மீராக மாறிவிடும்.
0 comments:
Post a Comment