Saturday, 17 May 2014

தமிழகத்தில் முக்கிய எதிர்கட்சியைப் போல ஆனது நோட்டா. மற்ற கட்சிகளை விட அதிக அளவில் வாக்குகளை பெற்று, நோட்டா அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்தியாவில் முதன்முறையாக 'நோட்டா' பொத்தான், நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தான் அறிமுகமானது. ஆனால் தேர்தல் ஆணையம் எதிர்பார்த்ததை விட அதிமான எண்ணிக்கையில் இந்திய மக்கள் நோட்டாவுக்கு தங்கள் வாக்குகளை வழங்கியுள்ளனர். வாக்குப்பதிவு இயந்திரத்தின்...
தமிழகத்தில் பாஜக கூட்டணி மிகப் பெரிய வெற்றியைப் பெற முடியாமல் போனதற்கு விஜயகாந்த், ராமதாஸ் இருவரின் அணுகுமுறையே அடிப்படைக் காரணம் என காந்திய மக்கள் கட்சித் தலைவர் தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்: " மோடி ஆதரவலையும், காங்கிரசுக்கு எதிரான சூறாவளியும் சேர்ந்துதான் தனிப்பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சி அமைக்கும் வாய்ப்பை உருவாக்கியுள்ளது. மதச்சார்பின்மையும்...
v.kalathur வ.களத்தூரில் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக வின்  வெற்றியை கழக கிளை பொறுப்பாளர் காவ்யா ரவி தலைமையில் கொடியேற்றி பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள்.. ...

Friday, 16 May 2014

பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் ஆர்.பி. மருதராஜா 2,13,048 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். பெரம்பலூர் மக்களவைத் தொகுதிக்கான வாக்கு எண்ணும் பணிகள் பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் நர்சிங் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 22 சுற்றுகளாக நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில், ஆர்.பி. மருதராஜா (அதிமுக) - 4,62,693, ...
பெரம்பலூர் பாராளு மன்ற தொகுதியில் 1,518 மையங்களில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை நடைபெற்றது. இதில் தபால் வாக்குகளில் பா.ஜ.க. வேட்பாளர் பாரிவேந்தர் (எ) பச்சமுத்து 1,596 வாக்குகள் பெற்றார். பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி பெரம்பலூர் பாராளு மன்ற தேர்தலில் பெரம்பலூர் (தனி), திருச்சி மாவட்டத்தில் உள்ள துறையூர் (தனி), முசிறி, மண்ணச்சநல்லூர், லால்குடி, கரூர் மாவட்டத்தில் உள்ள குளித்தலை ஆகிய 6 சட்டசபை...
பொதுத்தேர்தலில் பாரதீய ஜனதா அமோக வெற்றிபெற்று அறுதி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பதற்கு மகிழ்ச்சியை தெரி வித்தும், வரவேற்றும் பெரம்பலூரில் பா.ஜ.க. வினர் வெடிவைத்து பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி னர் v.kalathur  seithi . பாரதீய ஜனதா வெற்றி நடந்து முடிந்துள்ள பாராளு மன்றத்தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி கூட்டணி அறுதி பெரும்பான்மையுடன் மத்தியில் ஆட்சியை பிடித்துள் ளது. பாரதீய ஜனதா கட்சியின்...
1984க்குப் பிறகு, முப்பதாண்டு இடைவெளிக்குப் பின்னால், தனிப் பெரும்பான்மையுடன் ஒரு கட்சி ஆட்சி அமைக்கிறது என்பதே மிகப் பெரிய ஆறுதல். 16ஆவது மக்களவை மேலும் பல புதிய சரித்திரங்களைப் படைக்க இருக்கிறது. சுதந்திரத்திற்குப் பிறகு பிறந்த தலைமுறையின் தலைமையில் அமைய இருக்கும் முதல் மத்திய அரசு இதுவாகத்தான் இருக்கும். இதற்கு முன்னால் பதவி வகித்த பிரதமர்கள் அனைவருமே அடிமை இந்தியாவில் பிரிவினைக்கு முன்பு...
புதுடில்லி:பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட, எட்டே மாதங்களில், எதிர்க்கட்சியாக இருந்த, பா.ஜ.,வை, தனி பெரும்பான்மை பலத்துடன், மத்திய ஆட்சியில் அமரச் செய்துள்ளார், குஜராத் முதல்வர் நரேந்திர மோடி. இதன் மூலம் நிலையான ஆட்சி மத்தியில் கைகூடியுள்ளது. நாடு முழுவதும் வீசிய, 'மோடி அலை'யில், காங்கிரஸ் காணாமல் போய் விட்டது. 16வது லோக்சபாவில், எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட பெற முடியாத மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது....

Thursday, 15 May 2014

சிறுவாச்சூர் மதுரகாளியம்மனின் தேர்த்திருவிழா இன்று கோலாகலமாக நடைபெற்றது... பட உதவி- vasantha jeeva. ...

Wednesday, 14 May 2014

பெரம்பலூர்தொழிலாளர் நலத்துறை ஆய்வாளர் (பொறுப்பு) விஸ்வநாதன் விடுத்துள்ள அறிக்கையில் கூறிஇருப்பதாவது:– தமிழ்நாடு அரசு தொழிலாளர் துறையில் தொழிலாளர் அலுவலர், தொழிலாளர் உதவி ஆய்வாளர் பதவிகளுக்கு தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் நடத்தப்படும் பி.ஏ. மற்றும் எம்.ஏ. (தொழிலாளர் மேலாண்மை) மற்றும் முதுகலை மாலைநேர பட்டயப்படிப்பான பி.ஜி. எல்.ஏ. மற்றும் தொழிலாளர் சட்டங்களும், நிர்வாகவியல் சட்டமும்...
பெரம்பலூர் மாவட்டத்தில் மே 17, 18 ஆகிய தேதிகளில் ஜாதி, வருமானம் மற்றும் இருப்பிடச் சான்றுகள் பெறுவதற்கான சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன என்றார் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது. இதுகுறித்து அவர் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: பெரம்பலூர் மாவட்டத்தில் வரும் 17-ம் தேதி முதல் ஜாதி, வருமானம், இருப்பிடச் சான்று மற்றும் முதல் பட்டதாரி சான்று ஆகியவை வருவாய்த் துறை மூலம் மின் ஆளுமைத் திட்டத்தின்...
பெரம்பலூர் அருகே உள்ள புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீமதுரகாளியம்மன் கோயில் தேரோட்டம் வியாழக்கிழமை (மே 15) நடைபெறுகிறது. விழாவையொட்டி, கடந்த 29-ம் தேதி பூச்சொரிதல் விழா நடைபெற்றது. அதைத்தொடர்ந்து, மே 6-ம் தேதி இரவு 12 மணியளவில் பெரியசாமி மலையில் செல்லியம்மனுக்கு காப்பு கட்டுதலும், அதிகாலை 4 மணியளவில் மதுரகாளியம்மனுக்கு காப்பு கட்டுதலும், தொடர்ந்து, நாள்தோறும் இரவு அன்ன வாகனம், சிம்ம வாகனம்,...
பெரம்பலூர்: வேப்பந்தட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப படிவங்கள் வழங்கும் பணியை கலெக்டர் தரேஸ் அஹமது தொடங்கிவைத்தார். விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கொடுக்க 26ம் தேதி கடைசி நாளாகும். பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையில் தமிழக அரசு உத்தரவின்படி  நடப்பாண்டு முதல் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்கி நடைபெறவுள்ளது. இதனைத்தொடர்ந்து 2014-2015ஆம்...

Tuesday, 13 May 2014

பெரம்பலூர் அருகே குரும்பலூரில் உள்ள பாரதிதாசன் பல்கலைக் கழக கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் திங்கள்கிழமை தொடங்கியது. பெரம்பலூர் பாரதிதாசன் பல்கலைக் கழக கல்லூரியில் இளநிலைப்பாட பிரிவான பி.லிட் (தமிழ்), பி.ஏ ஆங்கிலம், வரலாறு, சுற்றுலா மற்றும் பயண மேலாண்மை, பி.பி.ஏ, பி.எஸ்.டபிள்யூ (சமூகப்பணி), பி.காம், பி.எஸ்.சி கணிதம், கணினி அறிவியல், நுண்ணுயிரியல், உயர் தொழில் நுட்பவியல்,...
பெரம்பலூர் ஆத்தூர் சாலையிலுள்ள எசனை காட்டுமாரியம்மன் திருக்கோயில் திருவிழா கடந்த 4ம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.  அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் அன்னம், ரிஷபம், சிம்மம் உள்ளிட்ட வாகனங்களில் சாமி திருவீதியுலா நடந்தது. இதனைத்தொடர்ந்து நேற்று அக்னிசட்டி ஏந்துதல், அலகு குத்துதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இன்று தேரோட்டம் நடைபெற்றது. நன்றி - வசந்த ஜீவா ...

Monday, 12 May 2014

பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் சூப்பர் 30 மூலம் பயிற்சி பெற்று அரசுப் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோர்களுடனான சந்திப்புக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்ற ஆட்சியர் மேலும் பேசியது: மருத்துவம், பொறியியல் படிப்பு மட்டுமே கல்வியின் எல்லை என்று நினைத்து விடக்கூடாது. நாம் என்ன படித்தாலும் அந்தப் படிப்பு நமது சமுதாயத்திற்கு...
புதுடில்லி: நாடு முழுவதும் கடந்த ஒன்றரை மாத தேர்தல் பணிகள் மற்றும் ஓட்டுப்பதிவு இன்று மாலையுடன் முடிந்தது. இதனையடுத்து டைம்ஸ்நவ், ஹெட்லைன்ஸ் டுடே, ஐ.பி.என்.லைவ், என்.டபுள்யூ எஸ், சி வோட்டர் ஆகியோர் தங்களின் கருத்துக்கணிப்புக்களை வெளியிட்டனர். இதில் மத்தியில் பா.ஜ., தலைமையில் அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று ஹெட்லைன்ஸ் டுடே தெரிவித்துள்ளது. இதன்படி 272 க்கும் மேல் 11 தொகுதிகள் கூடுதல்...
ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க உச்ச நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு திமுக தலைவர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து ஞாயிற்றுக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: பிராணிகள் நல அமைப்புகள் தொடர்ந்த வழக்கில் ஜல்லிக்கட்டு போட்டிக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. தமிழர்களின் நீண்ட நெடிய பாரம்பரியம் மிக்க பண்பாட்டின் அடையாளமாக வீர...
நாகை மாவட்டத்தில் தனியார் ஆக்கிரமிப்பிலிருந்து ஹிந்துக் கோயில்களின் சொத்துகளை மீட்காவிட்டால், தொடர்புடைய இடங்களில் இந்து மக்கள் கட்சி சார்பில் காவிக் கொடி கட்டப்படும் என்று அக்கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் கூறினார். இதுகுறித்து நாகையில் அவர் ஞாயிற்றுக்கிழமை அளித்த பேட்டி: நாகை மாவட்டத்தில் பழமை வாய்ந்த புகழ் பெற்ற கோயில்கள் ஏராளம் உள்ளன. இந்தக் கோயில் சொத்துகள் தனியார் மற்றும் பிற மதத்தினரின்...

Sunday, 11 May 2014

v.kalathur வ.களத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி..  v.kalathur  வ.களத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆங்கில வழிக்கல்விக்கு ஆறு மற்றும் ஏழாம் வகுப்புக்கான சேர்க்கை நடைபெற்றுவருகிறது. இதற்க்கான அறிவிப்பை தலையாசிரியர் பள்ளியின் நோடீஸ் பலகையில் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். ஆங்கில வழிகல்வி சேர்க்கைக்கான அறிவிப்பு.  வ.களத்தூர் பகுதி பெற்றோர்கள் தம் குழந்தைகளை தமிழ் வழியில் படிக்க விரும்பினால்,...
வண்ணாரம்பூண்டியில் மதுரை ஶ்ரீ மீனாட்சி அம்மன் கோயில் 3ஆம் ஆண்டு குடமுழுக்கு திருவிழா இனிதே நடைபெற்றது .. நன்றி- suresh.ayyasamy...