Wednesday, 14 May 2014


பெரம்பலூர் மாவட்டத்தில் மே 17, 18 ஆகிய தேதிகளில் ஜாதி, வருமானம் மற்றும் இருப்பிடச் சான்றுகள் பெறுவதற்கான சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன என்றார் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது.
இதுகுறித்து அவர் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பெரம்பலூர் மாவட்டத்தில் வரும் 17-ம் தேதி முதல் ஜாதி, வருமானம், இருப்பிடச் சான்று மற்றும் முதல் பட்டதாரி சான்று ஆகியவை வருவாய்த் துறை மூலம் மின் ஆளுமைத் திட்டத்தின் கீழ் வழங்கப்படவுள்ளது.
இச்சான்றுகளை பெரம்பலூர், குரும்பலூர், குன்னம், லப்பைக்குடிக்காடு, கீழப்புலியூர், வெங்கலம், வாலிகண்டபுரம், பசும்பலூர், கொளக்காநத்தம், செட்டிகுளம், கூத்தூர் ஆகிய வருவாய் ஆய்வாளர் அலுவலகங்களிலும், தொடக்க வேளாண்மை வங்கிகளிலும் விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளலாம்.
மின் ஆளுமைத் திட்டத்தின் கீழ் 2013-14-ம் கல்வியாண்டில் 80,325 சான்றுகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், மாணவ, மாணவிகளுக்கு தேவைப்படும் சான்றுகளை உடனடியாக வழங்கும் வகையில், மே 17, 18 தேதிகளில் அனைத்து வருவாய் ஆய்வாளர் அலுவலகங்களிலும் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.
முகாம் நாள்களில் 10, 12-ம் வகுப்பு இறுதித் தேர்வு எழுதி, உயர்கல்வி பயிலச் செல்லவுள்ள மாணவ, மாணவிகள் தங்களுக்கு தேவையான ஜாதி, வருமானம், இருப்பிடம், முதல் பட்டதாரி சான்று ஆகியவற்றை சம்பந்தப்பட்ட வருவாய் ஆய்வாளர் அலுவலகங்களில் விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம்.

நன்றி-தினமணி.

0 comments:

Post a Comment