பெரம்பலூர்: வேப்பந்தட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப படிவங்கள் வழங்கும் பணியை கலெக்டர் தரேஸ் அஹமது தொடங்கிவைத்தார். விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கொடுக்க 26ம் தேதி கடைசி நாளாகும்.
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையில் தமிழக அரசு உத்தரவின்படி நடப்பாண்டு முதல் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்கி நடைபெறவுள்ளது. இதனைத்தொடர்ந்து 2014-2015ஆம் கல்வி ஆண்டின் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் படிவங்கள் வழங்கும் பணி வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியஅலுவலகத்தில் நேற்று முன்தினம் நடந்தது. இதில் பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் தரேஸ்அஹமது கலந்துகொண்டு விண்ணப்பங்கள் விநியோகிக்கும்பணியை தொடங்கி வைத்தார்.
வேப்பந்தட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் (இருபாலர்) சேர்வதற்கான விண்ணப்ப படிவங்கள் தற்பொழுது வழங்கப்பட்டு வருகிறது. ஒரு விண்ணப்பத்தின் விலை ரூ.27. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குயின மாணவ, மாணவிகளுக்கு விண்ணப்பங்கள் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் பிஏ தமிழ், பிஏ ஆங்கிலம், பிஎஸ்சி கணிதம், பி.எஸ்சி கம்ப்யூட்டர்சயின்ஸ்,
பி.காம்ஆகியப் பாடப் பிரிவுகள் உள்ளன. தற்சமயம் வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அரசு கலைமற்றும் அறிவியல் கல்லூரி இயங்கி வருகிறது.
விண்ணப் படிவங்கள் வருகிற 26ம்தேதிவரை வழங்கப்படும்.
பெறப்பட்டுள்ள விண்ணப்பங்களை பூர்த்திசெய்து 26ம் தேதிக்குள் வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இக்கல்லூரிக்கென செயல்படுத்தப்படும் தனிப்பிரிவில் சமர்பிக்க வேண்டும் என கல்லூரியின் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் வேப்பந்தட்டை வட்டார வளர்ச்சிஅலுவலர்கள் பாரதிதாசன், தமிழரசி, உள்ளிட்ட அலுவலர்கள் கலந்துகொண்டனர
நன்றி-தினகரன்.
0 comments:
Post a Comment