தமிழகத்தில் முக்கிய எதிர்கட்சியைப் போல ஆனது நோட்டா. மற்ற கட்சிகளை விட
அதிக அளவில் வாக்குகளை பெற்று, நோட்டா அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இந்தியாவில் முதன்முறையாக 'நோட்டா' பொத்தான், நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தான் அறிமுகமானது.
ஆனால் தேர்தல் ஆணையம் எதிர்பார்த்ததை விட அதிமான எண்ணிக்கையில் இந்திய மக்கள் நோட்டாவுக்கு தங்கள் வாக்குகளை வழங்கியுள்ளனர்.
வாக்குப்பதிவு இயந்திரத்தின் கடைசி பொத்தானாக, ’மேலே உள்ள யாரும் இல்லை’ (None Of The
Above) என்பதே நோட்டாவாகும். புதிய வாக்காளர்கள், இளைய தலைமுறை, கட்சிகள்
மீது பெரிய அளவில் அதிருப்தி கொண்டிருப்பவர்கள் ஆகியோர் வாக்களிக்காமல்
இருப்பதை உணர்ந்த தேர்தல் ஆணையம், இந்த பட்டியலில் வரும் மக்களின் சில
பகுதியினராவது நோட்டாவை பயன்படுத்துவார்கள் என்ற நோக்கத்தில் இதனை அறிமுகம்
செய்தது.
ஆனால், தேர்தல் ஆணையம் மட்டுமல்ல, அனைத்து தரப்பினரையும் ஆச்சர்யம் அடையச் செய்யும் அளவுக்கு நாடெங்கிலும் நோட்டா பதிவாகியுள்ளது.
நாட்டில் ஏற்கனவே கட்சிகள் எண்ண முடியாத அளவில் இருக்கும்போது, இந்த
பொத்தானுக்கு வேலை இல்லை என்று நினைத்தவர்கள் எல்லாம் வாயடைத்துள்ளனர்.
மாற்று கட்சி என்று கூறி கொண்டு, மக்களிடையே விழிப்புணர்வை
ஏற்படுத்துவதாகக் கூறிய கட்சிகளை எல்லாம் ஓரம் தள்ளிவிட்டு, பல
வாக்காளர்கள் நோட்டாவை தேர்வு செய்துள்ளனர் v.kalathur seithi .
-தி இந்து.
0 comments:
Post a Comment