பொதுத்தேர்தலில் பாரதீய ஜனதா அமோக வெற்றிபெற்று அறுதி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பதற்கு மகிழ்ச்சியை தெரி வித்தும், வரவேற்றும் பெரம்பலூரில் பா.ஜ.க. வினர் வெடிவைத்து பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி னர் v.kalathur seithi .
பாரதீய ஜனதா வெற்றி
நடந்து முடிந்துள்ள பாராளு மன்றத்தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி கூட்டணி அறுதி பெரும்பான்மையுடன் மத்தியில் ஆட்சியை பிடித்துள் ளது.
பாரதீய ஜனதா கட்சியின் அமோக வெற்றியை வரவேற்று மாவட்ட பா.ஜ.க. தலைவர் சி.சி.ஆர்.சந்திரசேகர் தலைமையில் பெரம்பலூரில் கடை வீதியில் வெடிவைத்து தங்களது மகிழ்ச்சியை வெளிப் படுத்தினர்.
ஊர்வலமாக
பிறகு அங்கிருந்து கட்சித் தொண்டர்கள் கொடிஏந்தி ஊர்வலமாக வந்து டவுன் பஸ்நிலையத்தில் வெடிவைத்து பொதுமக்கள், ஆட்டோ வாகனங்களில் பயணம் செய் வோருக்கு லட்டுகள் வழங்கினர்.
மேலும் பா.ஜ.க.வெற்றியை கொண்டாடும் வகையில் டவுன்பஸ்நிலையத்தில் இருந்து ஊர்வலமாக வந்து காமராஜர்வளைவு, சங்குப் பேட்டை, புறநகர் பஸ்நிலையம் உள்பட 5 இடங்களில் வெடி வைத்து ம்,நரேந்திரமோடியை பிரதமராக தேர்ந்தெடுக்கும் வகையில் இந்த மாபெரும் வெற்றியை தந்துள்ள நாடு முழுவதும் உள்ள வாக்காளர் களுக்கு நன்றி தெரிவித்தும் பொதுமக்களுக்கு பா.ஜ.க. வினர் இனிப்புகள் வழங்கி னர்.
இந்த நிகழ்ச்சியில் நகரத் தலைவர் குரு.ராஜேஷ், மாவட்ட பொதுசெயலாளர் பாஸ்கர், பொருளாளர் சிவ சங்கர், பெரம்பலூர் ஒன்றியத்¢ தலைவர் தனபால், வேப்பந்தட்டை ஒன்றியத் தலைவர் பாலவெங்கடேஷ், வேப்பூர் ஒன்றியத்தலைவர் சீனிவாசன், மாவட்ட வரவேற்புக்குழுத்தலைவர் முத்துக்கமல், மாவட்ட துணை தலைவர்கள் வாசு தேவன், கண்ணன், நகர இளை ஞர் அணித்தலைவர் ராஜா ராம், மாவட்ட சிறுபான்மை யினர் மாவட்ட நிர்வாகிகள் சித்திரவேல், ஜார்ஜ்புஷ் விவசாய அணி மாநில பொதுச்செயலாளர் ஜீவா சிவக்குமார், மாவட்ட பாஜ.க. பொதுச்செயலாளர் டி.பாஸ்கர், அமைப்புச் செயலா ளர் எம்.ராமசாமி, மாவட்ட வர்த்தக பிரிவு தலைவர் ஈஸ்வர் மணி உள்பட பலர் கலந்துகொண்டனர் - தினத்தந்தி.
0 comments:
Post a Comment