Saturday, 23 August 2014


அன்புடைய வ.களத்தூர் சொந்தங்களே,

நமது விவேகானதர் இளைஞர் மன்றம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு மாலைநேர டியுசன் செண்டர், உங்களைபோன்ற நல உள்ளங்களின் நிதியுதவியால் நடத்தப்பட்டு வருகிறது தாங்கள் அறிந்ததே...

தற்போது அறுபது மாணவ மாணவிகளுக்கு தொண்டு மனப்பான்மை உள்ளம் கொண்ட மூன்று ஆசிரியைகளைக் கொண்டு சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. தினந்தோறும் மாலை நடைபெறும் இந்த டியுசன் சென்டரில் சனிக்கிழமை தோறும் சிறப்பு வகுப்பு நடத்தப்பட உள்ளது .

நமது குழந்தைகளுக்கு இந்து தர்மத்தின் சிறப்பு மற்றும் பெருமைகளை புகட்ட" இந்து சமய பண்பாட்டு வகுப்பு" நேற்று துவக்கி வைக்கப்பட்டது . நமது இந்து தர்ம பெருமைகளை சிறு வயது முதலே அறிந்தால்தான் பிற்காலத்தில் அவர்கள் கடவுள் நம்பிக்கை கொண்டவர்களாக , நமது சனாதன தர்மம் காப்பவர்களாக இருப்பார்கள் என்பது அனுபவப்பூர்வமான உண்மை.

தனியார் பள்ளிகளில் படித்தாலும் நமது குழந்தைகள் எதிர்காலத்தில் "லவ் ஜிஹாத்" போன்றவற்றில் சிக்கி சீரழியாமல் இருக்க இந்த பண்பாட்டு வகுப்பு உதவும் என்பது உறுதி...

சனிக்கிழமை தோறும் நமது விவேகானந்தர் மன்றம் சார்பில் நடத்தப்படும் இந்து சமய பண்பாட்டு வகுப்பில் கற்க நமது குழந்தைகளை அனுப்பி பயன்பெறுவோம்...
பெரம்பலூரில் நேற்று இஸ்கான் சார்பில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது ...


நன்றி- வசந்த ஜீவா

Friday, 22 August 2014


(22 Aug) சென்னை: பயங்கரவாதத்திற்கு பயிற்சி அளித்து வெளிநாடுகளுக்கு அனுப்பும் அளவிற்கு தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு நிலை இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என இந்து முன்னணி நிறுவனர் ராம.கோபாலன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
தமிழ்நாட்டில் முன்னாள் துணை பிரதமர் அத்வானி ரதயாத்திரையின் போது வைக்கப்பட்ட பைப் வெடிகுண்டிலிருந்து, திருவள்ளூர் கிழக்கு மாவட்டத் தலைவர் பாடி சுரேஷ்குமார் படுகொலை வரை முஸ்லீம் பயங்கரவாதிகளால் நிகழ்த்தப்பட்ட படுகொலைகள், பயங்கரவாத செயல்கள் குறித்து விரைந்து விசாரிக்க தனி நீதிமன்றத்தை ஏற்படுத்தி தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளதை இந்து முன்னணி வரவேற்கிறது, பாராட்டுகிறது.

 இதுவரையில் நடைபெற்ற அனைத்து படுகொலைகளிலும், முஸ்லீம் பயங்கரவாத செயல்களிலும்கூட குற்றவாளிகள் முழுமையாக தண்டிக்கப்படவில்லை. 20 ஆண்டுகளாக தேடப்பட்ட குற்றவாளிகள் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்கள். அப்படியானால் அந்த வழக்குகள் இன்னமும் முடியவில்லை என்பது இதிலிருந்து புலானாகிறது. ஜாமீனில் வெளிவந்த முஸ்லீம் பயங்கரவாதிகள் மீண்டும் குற்றச் செயல்களில் ஈடுபடுகிறார்கள், அல்லது தலைமறைவாகி வெளிநாடுகளுக்குத் தப்பித்துச் செல்கிறார்கள் என்பதை நீதிமன்றமும், காவல்துறையும் கவனத்தில் கொள்ள இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது. கடந்த மூன்று ஆண்டுகளில் முஸ்லீம் மத அடிப்படைவாதிகளின் ஆதரவு தளமும், பயங்கரவாதிகள் செயல்பாடுகள் முன்பைவிட அதிக அளவில் பெருகியுள்ளன. பொது இடங்களில் முஸ்லீம்கள் வன்முறையை தூண்டிவிடுவதை காவல்துறை கைகட்டி வேடிக்கை பார்க்கிறது. அதற்கு பல உதாரணங்கள் இருக்கின்றன.

இத்தகைய நடவடிக்கைகளை மூடி மறைக்க படுகொலை செய்யப்பட்ட இந்து தலைவர்கள் மீது வீண் பழி சுமத்தி, திட்டமிட்ட கொலைக்கு நியாயம் கற்பிப்பது வேடிக்கையானது. மத்திய, மாநில அரசுகள் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பை, ஆதரவு நடவடிக்கைகளை தடை செய்ய வேண்டும். நமது நாட்டிற்கு எதிராகவும், நமது இறையாண்மைக்கு எதிராகவும் அதன் நடவடிக்கைகள் இருக்கின்றன. அப்படியிருக்கையில் அதற்கு ஆதரவாளர்களை திரட்டுவது, அங்கு நடக்கும் பிரச்னைக்கு இங்கிருந்து ஆட்களை அனுப்புவதை அரசு கண்காணித்து தடுக்க வேண்டும். இங்கிருந்து ஈராக் நாட்டிற்கு முஸ்லீம் மதத்தைச் சேர்ந்த இரு பிரிவினர் நூற்றுக்கணக்கானவர்கள் சென்றுள்ளனர் என்பது கவலை அளிக்கிறது.

பயங்கரவாதத்திற்கு பயிற்சி அளித்து வெளிநாடுகளுக்கு அனுப்பும் அளவிற்கு தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு நிலை இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். முஸ்லீம் பயங்கரவாதிகளுக்கு துணை போகிறவர்கள், பாதுகாப்பு கொடுப்பவர்கள், நிதி உதவி செய்பவர்கள், விசாரணைக்கு இடையூறு விளைவிக்க குற்றவாளிகளுக்கு சாதகமாக பேசியும், குற்றத்தை நியாயப்படுத்தியும் திசை திருப்பும் முஸ்லீம் அமைப்புகள் மீதும் நடவடிக்கை எடுக்காமல் தமிழக அரசின் நடவடிக்கை முழுமை பெறாது, பலன் தராது என்பதை இந்து முன்னணி தெரிவித்துக்கொள்கிறது என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

-நியூஸ் ஹன்ட் 

இந்தியா இந்து நாடு…இந்தியாவில் வசிப்பவர்கள் அனைவரும் இந்துக்களே..இஸ்லாம்—கிறிஸ்தவர்கள்..உள்ளிட்ட அனைத்து மதத்தினருக்கும் இது பொருந்தும்…இதுதான் ஆர்.எஸ்ஸின் அகிலபாரத தலைவர் திரு மோகன் ஜி பாகவத் அவர்கள் பேசியதன் சுருக்கம்..

இதை மோகன் ஜி இப்போதுமட்டும் சொல்லவில்லை..இதற்குமுன் பலமுறை பேசியிருக்கிறர்..ஆர்.எஸ்ஸில் மோகன் ஜி மட்டுமல்ல –பல தலைவர்கள் இதே கருத்தை பல இடங்களில் பேசியிருக்கிறார்கள்…

“நான் பிறப்பால் இஸ்லாமியன்..கலாச்சாரத்தால்..இந்து..”—என்று முன்னாள் மத்திய கல்வி மந்திரியும், அறிஞருமான முகம்மது கரீம் சாக்ளா கூறியுள்ளார்..

கோவாவின் தற்போதைய துணை முதல்வர் “நான் பிறப்பால் கிறிஸ்தவன்..பண்பாட்டால்..இந்து” என கூறியுள்ளார்..

கேரளாவில் ஆளும் காங்கிரஸ் மந்திரி, ஆரியத்தான் முகம்மது..”நாம் (முஸ்லீம்கள்) இந்நாட்டில், மதம் மாற்றப்பட்டு இஸ்லாமியர்கள் ஆனவர்கள்..இங்குள்ள மசூதிகள் எல்லாம் முன்பு கோவிலாக இருந்தவைகள்..இந்துக்கள் மிகவும் சகிப்புத்தன்மை கொண்டவர்கள்..அதனால்தான் நம் இங்கு வாழ முடிகிறது..””—நாம் பிறப்பால் முஸ்லீம்கள் ஆனலும் நமது கலாச்சாரம் “இந்துவே”—என பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளார்..

1947 பிரிவினைக்கு முன் இந்தியா..பிரிட்டனின் காலனி நாடாக இருந்தது..பிரிவினைக்குப் பின், பாகிஸ்தான் என்னும் இஸ்லாமிய குடியரசாகவும், இந்தியா என்னும் பாரதம் ..ஜனநாயக குடியராசாகவும் பிரகடன படுத்தப்பட்டது..

1971 இல் இந்திரா காந்தி, கத்தோலிக்க கிறிஸ்தவ சபையினர் உபயோகிக்கும், “மதசார்பற்ற—செக்குலர்”—என்ற புதிய—இந்தியாவிற்கு அன்னியப்பட்ட..வாக்கியத்தை சேர்த்து, “மதசார்பற்ற ஜனநாயக—சோசியலிச குடியராசாக” இந்தியாவை பிரகடனம் செய்தார்..

மோகன் ஜி அவர்களின் வார்த்தை காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் காதில் ஈயத்தை காய்ச்சி ஊற்றியது”—போல உள்ளது..வலிதாங்காமல் அவர்கள் அலறுகிறார்கள்..ஏதேதோ பிதற்றுகிறார்கள்..”ஆர்.எஸ்.எஸ். இந்தியாவை இந்து தேசமாக்க முயல்கிறது” என்கிறார்கள்..”பாஜகவின் சாயம் இப்போது வெளுத்து விட்டது..மதவாதம் தொடங்கி விட்டது..” என பிதற்றுகிறார்கள்..

கம்யூனிஸ்டுகள் ஒருபடி மேலே போய் “புதிய புரட்டு சரித்திரத்தை “ புகுத்த நினைக்கிறார்கள்..இந்திய அரசமைப்பு சட்டம் உருவானபோது இந்தியாவிற்கு மூன்று விதமான பெயர்கள் பரிசீலிக்கப்பட்டதாம்..அவை “இந்தியா..இந்துஸ்தானம்—பாரதம்” என்பவனவாம்…
அம்பேத்காரும் மற்றவரும் இந்துஸ்தானம் என்ற பெயரை ஒதுக்கித்தள்ளிவிட்டு, ”இந்தியா..என்னும் பாரதம்” என்ற பெயரை சூட்டினார்களாம்….இது எப்பிடி இருக்கு..

முதலில் அப்படிப்பட்ட விவாதமே வரவில்லை..மாறாக நாடு சுதந்திரம் அடைந்தபோது துவக்கப்பட்ட பல பொதுத்துறை நிறுவனங்களுக்கு “இந்துஸ்தான் “ என்று பெயர் சூட்டப்பட்டது..1..இந்துஸ்தான் மெஷின் டூல்ஸ்—2.இந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ்—3..இந்துஸ்தான் போட்டொ ஃபிலிம்ஸ்..

ஏன்..பன்னாட்டு கம்பெனியான “லீவர் பிரதர்ஸ்”—இந்துஸ்தான் லீவ்ர் என்றும், கிறிஸ்தவ பைபிள் சபை..”இந்துஸ்தான் பிபிளிகல் சொசைட்டி “ என்றும், பெயரை வைத்துக்கொண்டது கம்யூனிஸ்டுகளுக்கு தெரியவில்லை போலும்,,

எனவே “இந்து..இந்துத்வா…இந்துஸ்தன்..” என்பவை..ஒரு நிலப்பரப்பையும், கலாச்சாரத்தையும், வாழ்க்கை முறையையுமே குறிப்பிடுவனவாக இருந்தது..அது மதத்தை குறிப்பிடவில்லை..ஏனெனில், “இந்து” என்ற மதமே நம் பிரயோகத்தில், 18 ஆம் நூற்றாண்டு வரை இல்லை..
சிந்து நதிக்கு தெற்கே இருந்தவர்களை “சிந்தியர்” என்றும், அதுவே திரிந்து “ இந்தியர்” என ஆங்கிலேயர்களால் குறிக்கப்பட்டது.

இந்தியாவிலிருந்த கிறிஸ்தவர்—இஸ்லாமியர் அல்லாத, இந்திய மதங்களை அடையாளபடுத்த “இந்து மதம்” என குறிப்பட்டது ஆங்கிலேயர்கள்தாம்..
இந்து என்பது வாழ்க்கை முறை---”வழிபாட்டு முறை அல்ல”—”பண்பாடு—கலாச்சாரம்—நாகரீகத்தை குறிப்பது---மதத்தை அல்ல.. பின் ஏன் மோக்ன் ஜி அவர்கள் பேச்சு காங்கிரஸ் கம்யூனிஸ்ட்கள் வயிற்றில் புளியை கரைக்கிறது.?

பண்பாடு கலாச்சாரம் என்றால் கம்யூனிஸ்ட்களுக்கு என்னவென்று தெரியாது..ஏனெனில், அவர்களிடம்….அவ்ர்களின் கட்சியும் ..சித்தாந்தமும், எந்த..நல்ல..உயரிய பண்பாட்டையும் பதிக்கவில்லை—எனவே பண்பாடு பற்றி கம்யூனிஸ்ட்கள் அறியாததால், அவர்களுக்கு புரியும் வண்ணம், “வாழ்க்கை முறை’ என்பதை எடுத்துக்கொள்வோம்..

இந்தியாவில் வாழும் மதம்மாறிய பூர்வகுடிகளான, இஸ்லாமிய. கிறிஸ்தவர்கள், இந்நாட்டின் பல நல்ல அம்சங்களை, தங்கள் வாழ்க்கைமுறையில் பயன்படுத்டுகிறார்கள்..பின்பற்றுகிறார்கள்..

நாகூர் மசூதியில் கொண்டாடும் “சந்தனகூடூ திருவிழா”—வேளாகன்னி மற்றும் மதுரை செயிண்ட்மேரிஸ் ஆலயம் உள்ளிட்ட பல சர்ச்சுகளில் மேரிமாதா “ரத ஊர்வலத்தில் பவனி”—கேரளாவில் ஓணம் பண்டிகை—வங்காளத்தில் துர்க்காபூஜா கொண்டாடல்,--வீட்டின் முன் சாணம் தெளித்தல், கோலமிடல், நெற்றியில் திலகம் வைத்தல், பெண்கள் தாலிகட்டிக்கொள்ளுதல்,, புடவை, வளையல் அணிதல், தேங்காய் உடைத்து நற்காரியங்களை துவக்குதல், என்பவனவெல்லாம், இந்து வாழ்க்கைமுறையிலிருந்து, மற்ற மதத்தினர் எடுத்து கொண்டனர்.

.இப்படி இந்து வாழ்வியல் நெறிகளை பின்பற்றுபவர்களை “இந்து” என சொல்லுவதில் என்ன தவறு உள்ளது?

பாகிஸ்தன் டி.வி., மற்றும் ரேடியோவில், இந்தியாவை பற்றி குறிப்பிடும்போது, “இந்துஸ்தான்” இந்துஸ்தனிகள்,”, என்ற்தான் குறிப்பிடுகிறார்கள்.—இந்தியாவிலிருந்து ஹஜ் புனித யாத்திரை செல்லும் இஸ்லாமியர்களை, அரேபிய முஸ்லீம்கள், “இந்து—இந்துஸ்தனி” என்ற்தான் அழைக்கிறார்கள்..சீனா பயணம் மேற்கொண்ட டெல்லி இமாம் புகாரியை, “இந்து—முஸ்லீம்”—என்றுதான் வரவேற்றார்கள்..

ஆக உலகம் முழுதும் உள்ளவர்கள், இந்தியாவில் இருந்து எவர் வ்ந்தாலும், “ இந்து—இந்துஸ்தனி”—என குறிப்பிடும் போது மோகன் ஜி குறிப்பட்டதில் ஏன் காங்கிரசும், இடதுசாரிகளும் தவறு கண்டு பிடிக்கிறார்கள் என்பது புரியவில்லை..

மோகன் ஜி பேச்சுக்கு மோடி விளக்கம் தந்தாக வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் ( அப்படி ஒருவர் இருக்கிறரா?)ஞானதேசிகன், அறிக்கை விடுவது உளரலின் உச்சகட்டம்..

நாம் அடிக்கடி குறிப்பிடும் “இந்தோனேசியாவின்.-கருடா ஏர்லைன்ஸ்--,குபேரா பாங்க்---ராணி சுகர்ணோ புத்ரி---பாங்காக் விமானநிலையத்தின் முன் உள்ள மிகப்பெரிய “ பாற்கடலை கடையும் சிலை”—ஆண்டுமுழுதும் நடக்கும் “ராமாயண நாடகம்”—என “இஸ்லாத்தை தேசிய மதமாக” வைத்திருக்கும் நாடு, தன் மூதாதையர்களான இந்துக்களின் கலாச்சாரத்தை கைவிடாத காட்சியையே… மோகன் ஜி பாகவத் இந்தியாவிற்கும் பொருந்தும் வண்ணம் கூறியுள்ளார்.

இந்து வாழ்க்கை நெறியில் ஏற்கனவே முப்பத்தி முக்கோடி தேவர்கள் உண்டு…அவ்ர்களில் அடுத்தடுத்து ஒருவராக யேசுவையும் அல்லாவையும், ஏற்பதில் நமக்கொன்றும், ஆட்ஷேபம் இல்லை.

நம்மிடம் தெய்வ நம்பிக்கை உடையவனும் உண்டு, நாத்திகனும் உண்டு….கடவுளை கல்லாக பார்ப்பவனும் உண்டு, கடவுளை கல்லால்—செருப்பால்-- அடித்த கி.வீரமணி..ஈ.வெ.ராக்களும் உண்டு..காற்றையும் நீரையும் நெருப்பையும் நிலத்தையும், ஆகாயத்தையும் பஞ்சபூதங்களாக வழிபடுவதும் உண்டு..

இஸ்லாமியருக்கு குர்-ஆனும்---கிறிஸ்தவருக்கு பைபிள் மட்டுமே “வேத நூல் “ என்பது போல நம்மிடம் ஒரே ஒரு வேத நூல் மட்டுமே உண்டு என்னும் நிலை இங்கில்லை..ஒராயிரம் வேதங்கள் இங்குண்டு…புதிது புதிதாக தினசரி ஒன்று தோன்றினாலும் நாம் ஏற்றுக்கொள்ள தயார் என்னும் மனநிலை நமக்குண்டு..

இந்த பன்முகத் தன்மையே பாரதத்தின் சிறப்பு..இந்து தர்மத்தின் மாண்பு…இது இருந்ததால்தான் 3 ஜனாதிபதிகள்---30 கவர்னர்கள்---300 எம்.பிக்கள்—3000 எம் எல் ஏக்கள்—30 லட்சம் அரசு அதிகாரிகள் என முஸ்லீம்கள் இந்தியாவில் பதவி சுகத்தை அனுபவிக்க முடிந்தது..

இப்படி பதவி தந்து, பவிஷு தந்து, எல்லோரையும் அன்பாய் அரவணைக்கும் “இந்துத்வாவை” குற்றங்காண்பவர்கள் ஒன்றை மட்டும் புரிந்து கொள்ளவேண்டும்..
“இந்து மெஜாரிட்டியாக” இருக்கும்வரையே இந்நாட்டில் “மைனாரிட்டிகள்—பாதுகாப்பாக” இருக்க முடியும்..

“இந்துத்வா “ வலிமை பெற்று இருந்தால் மட்டுமே இந்நாட்டில் “மைனாரிட்டிகள் உரிமைகள்” காக்கப்படும்..

இது புரியாமல் குரல் கொடுப்போர் பாகிஸ்தான், வங்கதேசம், ஈரான்-ஈராக், சிரியா போன்ற நாடுகளில் முஸ்லீம்கள் படும் அவதிகள் போல இந்தியாவிலும் அவஸ்தை படவேண்டும் என்று விரும்புகிறார்களோ என நினைக்கத் தோன்றுகிறது…..

“இந்து—இந்துத்வா---இந்தியா—இந்துஸ்தான்..—” இவை அனைத்தும் ஒன்றுதான்…”இந்தியா—பாரதம்—இந்துஸ்தான் –இவற்றில் இருக்கும் அனைவரும் “இந்துக்கள்தான்”—

இதை ஏற்றால்---வாழ்வு----மறுத்தால்—தாழ்வு..வீழ்வு…
புரிய வேண்டியவர்களுக்கு புரிந்தால் சரி…

எஸ்.ஆர்.சேகர்

கேரளாவில் காங்கிரஸ் தலைமையிலான அரசு, படிப்படியாக மதுவிலக்கு கொள்கையை நடைமுறைப்படுத்தப்பட உள்ளதன் முன்னோட்டமாக, மாதத்தின் முதல் நாள் மற்றும் அனைத்து ஞாயிற்றுக் கிழமைகளிலும் மதுபானக் கடைகளை மூட திட்டமிட்டுள்ளது.
படிப்படியாக மதுபானக் கடைகளை மூடி, அடுத்த ஆண்டில் இருந்து நட்சத்திர ஹோட்டல்களில் மட்டும் மதுபானக் கடைகளை நடத்த உம்மன் சாண்டி தலைமையிலான அரசு முடிவெடுத்து அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில், சுதந்திர தினம் உள்பட  தற்போது மதுபானக் கடைகளுக்கு விடுமுறை தினத்தை ஆண்டுக்கு குறைந்தது 52 ஆக மாற்ற அரசு திட்டமிட்டிருப்பது பல்வேறு சமூக ஆர்வலர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

-தினமணி.
46 பெண்களை பாதுகாப்பாக திருப்பினுப்பிய ஒழுக்க சீலர்கள்!
இந்தியாவில் தடைசெய்யப்படாத அமைப்பு!
விளையாட்டாக சிறுவர்கள் செய்த சாகசம்!
இவர்களால் இந்தியாவிற்கு அச்சுறுத்தல் இல்லை
யார் இவர்கள்?
போட்டிபோட்டுக்கொண்டு ஊடகங்களும் அரசுகளும் தானாக தாயத்து கட்டிக்கொண்டு ஆடுகிறார்களே?
இந்த விளையாட்டு பனியனை நன்றாக கவனியுங்கள்!
isis tshirt
இதில் நாங்கள் ISIS அதாவது ஈராக் சிரியா இஸ்லாமிய நாட்டுடன் உள்ளோம் என்ற வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது.
இந்த ISIS அமைப்பு சிரியா மற்றும் ஈராக் நாட்டின் அரசுக்கு எதிராக ஆயுதம் ஏந்தி போராடி வரும் ஒரு அடிப்படைவாத முஸ்லீம் பயங்கரவாத கும்பல். இந்த கும்பல் மதத்தின் பேரால் பல்லாயிரக்கணக்கான பெண்களை, குழந்தைகளை, முதியவர்களை கொன்றதோடு நடுத்தெருவிலே மக்களை சுட்டுக்கொன்று குவித்து அந்த பயங்கர படங்களை வலைத்தளங்களில் வெளியிட்டு இஸ்லாமிய கடமை இதுதான் என்று பிரச்சாரம் செய்து வருகிறது.
abu bagdadi
ISIS அமைப்பு அபு பக்கர் அல் பக்தாதி என்ற பயங்கரவாதியின் தலைமையில் செயல்பட்டு வருகிறது. சிரியாவையும், ஈராக்கின் சில பகுதிகளையும் கைப்பற்றிய இந்த பயங்கரவாத அமைப்பு அபு பக்கர் அல் பக்தாதியை caliph அதாவது அகில உலக இஸ்லாமிய சாம்ராஜ்ஜியத்தின் தலைவர் என்று அறிவித்துள்ளது. உலகம் முழுவதும் ஒரே இஸ்லாமிய சாம்ராஜ்ஜியமாக மாற வேண்டும் என்பதை குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டு வரும் இந்த ISIS அமைப்பு தாருல் இஸ்லாம் அதாவது இஸ்லாமிய உலகம் என்ற வரைபடத்தை வெளியிட்டு அந்த பகுதிகள் அனைத்தையும் இஸ்லாமிய நாடாக்குவோம் என்று சூளுரைத்துள்ளது.
isis map
இந்த பயங்கரவாத அமைப்பின் வரைபடம் நம் பாரத நாட்டை குரஸன் என்ற பெயரில் அழைத்து, இஸ்லாமியர் சட்டத்தால் நிர்வகிக்கும் அடிப்படைவாத இஸ்லாமிய நாடாக அடையாளம் காட்டியுள்ளது.
இப்படிப்பட்ட பயங்கரவாத பிரிவினைவாத அமைப்பின் பெயரில் டிசர்ட்டுகளை அணிவது விளையாட்டுத்தனம் என்று சொல்லி நம் நாட்டின் ஒருமைப்பாடோடு விளையாடுகிறது இஸ்லாமிய அமைப்புகள்.
"46 இந்தியப் பெண்களை நகம் படாமல் பத்திரமாக இந்தியாவிற்கு அனுப்பி வைத்த ஒழுக்கசீலர்கள் என்பதை அங்கீகரித்து தொண்டியை சேர்ந்த இஸ்லாமிய இளைஞர்கள் ISIS டிசர்ட்டுகள் அணிந்தார்கள்" – என்று இராமநாதபுரம் காவல்துறை கண்காளிப்பாளர் மயில்வாகனன் கூறியதாக ஆகஸ்ட் 6, 2014 அன்று “தி ஹிந்து” பத்திரிக்கை செய்தி வெளியிட்டிருந்தது.
isis the hindu

இப்படி ISIS அமைப்பின் ஒழுக்கத்தை மெச்சுபவர்கள் அவர்கள் வீட்டுப்பெண்களை இன்னொருவர் பிடியில் 15 நாட்கள் தங்கவைத்து விட்டு ஒரு நகம்கூட படாமல் திருப்பியனுப்பி வைத்தார்கள் என்று கடத்தல்காரர்களை கொண்டாடுவார்களா?
அகில உலக இஸ்லாமிய அடிப்படைவாத ஆட்சியை நிறுவத்துடிக்கும் ISIS பயங்கரவாதிகளை இந்தியாவில் பிரபலப்படுத்தத் துடிக்கும் கும்பலை தப்ப வைக்க ”இந்த நகம்படாத பெண்கள்” கதையை முன்னிறுத்தும் தவறைச் செய்தது இந்து பத்திரிக்கையா? அல்லது இராமநாதபுரம் காவல்துறை கண்காணிப்பாளாரா? காவல் துறை கண்காணிப்பாளர் சொல்லி இந்து பத்திரிக்கை எழுதியிருந்தால் இந்த அதிகாரி பயங்கரவாதியைத் தப்பவைக்கும் தேசத்துரோக குற்றத்தைச் செய்தவராகிறார். இந்து பத்திரிக்கையே இப்படி எழுதியிருந்தால் இந்து பத்திரிக்கையை கண்டித்து இராமநாதபுரம் SP மயில்வாகனன் ஏன் ஒரு அறிக்கையை கூட விடவில்லை. அப்படியென்றால் இந்த ISIS வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பவர் இராமநாதபுரம் SP மயில்வாகனன் தானே?
ISIS தடைசெய்யப்படாத அமைப்பு அதனால் எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்று முஸ்லீம்கள் பேஸ் புக் (Face book) பக்கங்களில் பதிவிட்டனர். இதே கருத்தை பல இஸ்லாமிய அமைப்புகளும் தங்களுக்கு தாங்களே அறிவுஜீவிகள் என்று பட்டம் சூட்டிக்கொண்ட வீண் ஜம்பங்களும் டிவி சேனல்களிலும் பத்திரிக்கைகளிலும் தம்பட்டம் அடித்தன.
fb sangairidwan
இந்த இஸ்லாமிய பயங்கரவாதத்தை கண்டித்து மேடைகளிலே இந்து அமைப்பைச் சார்ந்தவர்கள் பேசினால் இந்து இயக்கங்களை தடை செய், பிரிவினைவாதம் தலைத்தூக்குகிறது என்றெல்லாம் ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் பின்னால் எரியும் தீ இவர்கள் பின்னால் கொழுந்துவிட்டு எரிவதுபோல் கத்துபவர்கள் மனசாட்சி உள்ளவர்களாக இருந்திருந்தால் என்ன செய்திருக்கவேண்டும்?
இந்தியாவை ஆக்கிரமித்து இஸ்லாமிய நாடாக மாற்றும் ISIS அமைப்பை தடை செய்!
இதன் ஆதரவாளர்களை கைது செய்!
என்றல்லவா சொல்லியிருக்கவேண்டும். இதற்கு மாறாக இது தடைசெய்யப்படாத அமைப்பு என்று சொல்லி இந்த சதியை ஆதரிப்பது தேசத்துரோகம் தானே! இந்த ISIS பனியன்களை அணிந்து கொண்டு தொண்டி மசூதிமுன் காட்சியளித்த இளைஞர்களின் புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் பதிவிட்ட சங்கை ரிதுவான் என்பவர் இந்த ISIS ஆதரவாளர்களை ”தொண்டியிலிருந்து புறப்பட்ட சூறாவளி” என்று குறிப்பிட்டிருந்தார்.
sangai ridwan
sangai ridwan fb thondi
சூறாவளி என்ற சொல் பத்திரமாக பெண்களை பாதுகாப்பதற்கோ இருக்கும் இடத்தில் தொந்தரவே இல்லாமல் வீசும் தென்றலுக்கு உவமையாகவோ சொல்லப்படுவதில்லை. ஒரு மாபெரும் அழிவை ஏற்படுத்தி பலத்தின் மூலம், பலாத்காரத்தின் மூலம் ஒன்றை அழித்து மற்றொன்றை நிலைநாட்டும் சக்தியாகத்தான் குறிப்பிடப்படும். பயங்கரவாதத்தை பரப்புவோம் என்று முஸ்லீம்களே ஒப்புக்கொண்டபின் அதற்கு சப்பைக்கட்டு கட்டும் மீடியாக்களும் அரசு அதிகாரிகளும் ”நடு”நிலை நாயகர்களும் பிரிவினைவாதிகளை விட கொடியவர்கள்.
இந்த ISIS பயங்கரவாத குழுவிற்காக நம் தமிழகத்திலிருந்து சிரியாவிற்கும் ஈராக்கிற்கும் முஸ்லீம்களை பயிற்சிகொடுத்து பிரிவினைவாத முஸ்லீம் அமைப்புகள் அனுப்பி வருகிறது. கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையைச் சேர்ந்த ஹாஜா பக்ருதின் - ”சிரியாவில் இந்த பயங்கரவாத போராட்டத்தில் பலரை கொன்று குவிக்க கிடைத்த வாய்ப்பின் மூலம் தனது வாழ்க்கையின் லட்சியம் நிறைவேறியதாக” - தன் பெற்றோரிடம் தொலைப்பேசியில் உரையாடியதை 21 ஜூலை 2014 தேதியிட்ட டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிக்கை வெளியிட்டுள்ளது.
isis cuddalore indian express
http://timesofindia.indiatimes.com/india/Tamil-Nadu-youth-joins-ISIS-family-recalls-his-journey-into-insurgency/articleshow/38771536.cms
இது போலவே கடலூரைச் சேர்ந்த குல் முகமது மரைக்காச்சி மரைக்காயரின் ஈராக் போர் பங்கெடுப்பை 25 மார்ச் 2014 அன்று தி ஹிந்து வெளியிட்டது.
 chennai youth fighting isis hindu
http://www.thehindu.com/news/national/chennai-youth-fighting-in-syria-jihad/article5827857.ece
இதுபோலவே கோவை, சென்னை,குமரி மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்களை சிரியாவிற்கு போரிட காஜா மொய்தீன் என்பவர் அனுப்பத் திட்டமிட்டிருந்ததை ஆகஸ்ட் 14 2014 அன்று மாலைமலர் வெளியிட்டது. கண்ணுக்குத் தெரியாமல் எத்தனை காஜா மொய்தீன்கள்! எத்தனை மரைக்காயர்கள்! எத்தனை லெப்பைகள்! எத்தனை ராவுத்தர்கள்! எத்தனை பட்டாணிகளோ?
malaimalar isis part2malaimalar isis part1
 http://www.maalaimalar.com/2014/08/14131252/send-youths-siriya-and-get-mil.html
ISIS பயங்கரவாத அமைப்பு அதற்காகப் பயிற்சிக் கொடுத்து பயங்கரவாதிகளை தமிழகம் அனுப்பிக் கொண்டு இருக்கிறது என்று எழுதும் இந்தப் பத்திரிக்கைகள் டிசர்ட் விவகாரம் வரும்போது சால்ஜாப்பு வார்த்தைகளை சொல்லி செய்தி வெளியிடுவது பயங்கரவாதிகளை தப்பவைப்பதுடன் இந்த அமைப்புகளை மேலும் வலுப்பெற மறைமுக உதவி செய்வதுபோல் உள்ளது. சுமார் 100 ஆண்டுகளுக்கு முன் துருக்கியில் இஸ்லாமிய மத தலைமைப் பீடத்தை நடத்திவந்த caliph,  அந்த நாட்டு மக்களாலேயே தூக்கியெறிப்பட்டார். அவரை மீண்டும் caliph ஆக நியமிக்க வேண்டும் என்றுச் சொல்லி பாரதத்திலிருந்து பல முஸ்லீம்கள் வடக்கு நோக்கி சென்றனர். இஸ்லாமிய உலகம் அமைப்போம் என்ற கோஷத்துடன் ஆப்கானிஸ்தான் அமீரை பாரத்தின் மீது படையெடுத்து வர கடிதம் எழுதினார் மெளலானா முகமது அலி மற்றும் சௌவுகத் அலி. இந்தப் போராட்டத்தில் ஆங்கிலேயரை வெற்றிக்கொள்ள முடியவில்லை என்றவுடன் கேரளத்தில் ஆயிரக்கணக்கான அப்பாவி இந்துக்கள் கொல்லப்பட்டனர். பெண்கள் கற்பழிக்கப்பட்டனர். சொத்துக்கள் சூறையாட்டப்பட்டன. ஆயிரக்கணக்கான இந்துக்கள் மதமாற்றப்பட்டனர். உலகவரலாற்றின் கோரமான கலவரங்களில் ஒன்றான இந்தக் கலவரம் ”மாப்ளா கலவரம்’’ என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.
 Moplah Riots in Kerala
இந்தக் கலவரத்தின்போது அதற்கு 100 ஆண்டுகள் முன்பு ஆப்கானிஸ்தான் மன்னனை பாரதத்தின் மீது படையெடுத்து வரச் சொல்லி அவனுக்கு உதவ தயாராக இருப்பதாகக் கடிதம் எழுதிய திப்பு சுல்தான் உதாரண புருஷனாக சித்தரிக்கப்பட்டான். இன்று ISIS அமைப்புக்கு ஆள் சேர்க்கும் அமைப்புகளும், அதன் ஆதரவு அமைப்புகளும் இதே திப்புசுல்தானை நாயகனாக கருதி அவனுக்கு மணிமண்டபம் அமைக்க கோரிக்கை வைக்கிறது. இதை ஓட்டுக்காக மண்டியிடும் அரசும் அரசியல் கட்சிகளும் முன்னின்று செய்து வருகின்றன.
ISIS டிசர்ட் விவகாரத்தில் இஸ்லாமிய கோரிக்கையை வைத்து கலவரம் செய்யும் எந்த முஸ்லீம் அமைப்பும், மதச்சார்பின்மை, மனித உரிமை பேசும் அமைப்புகளும்  இந்த முஸ்லீம் இளைஞர்களை கண்டிக்கவில்லை. ஆனால் தமிழக அரசோ எந்த முஸ்லீம் அமைப்பும் ISIS அமைப்புக்கு ஆதரவாக இல்லை என்று அறிவித்துள்ளது.
பர்மாவில் முஸ்லீம்கள் தாக்கப்பட்டதற்காக மும்பையில் போராட்டம் நடத்தப்பட்டு நம் நாட்டு போர் நினைவுச்சின்னம் தாக்கப்பட்டது. ஏற்கனவே நம் அரசால் தடைசெய்யப்பட்டபிறகும், “Innocence of muslims” என்ற திரைப்படத்தின் பெயரால் சென்னை அமெரிக்கத் தூதரகம் தாக்கப்பட்டு மவுண்ட்ரோடு கலவர பூமியானது, இலங்கையில் ஒரு மசூதி இடிக்கப்பட்டதற்காகவும், ஒரு முஸ்லீம் கொல்லப்பட்டதற்காகவும் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்பட்டது, விஸ்வரூபம் திரைப்படத்திற்காக திரையரங்கில் குண்டு வீசப்பட்டது.
chennai usconsulate attack amar-jawan-jyoti-b-14-08-20
இப்படியெல்லாம் பாதிக்கப்பட்ட இஸ்லாமியர்களுக்காக பொங்கியெழும் இஸ்லாமிய அமைப்புகள் பல்லாயிரக்கணக்கான முஸ்லீம்கள் சிரியா, ஈராக், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், நைஜீரியா போன்ற நாடுகளில் கொல்லப்படும்போது ஏன் பொங்கி எழவில்லை? உண்மையாக ஒரு இஸ்லாமியனுக்காக அவர்கள் போராடுகிறார்கள் என்றால் அதிமாக முஸ்லீம்களை கொன்ற ISIS அமைப்பை ஆதரிக்கும் முஸ்லீம் இளைஞர்களுக்காக ஏன் வக்காலத்து வாங்க வேண்டும்? ”இந்தப்போராட்டம் இஸ்லாமியரின் உரிமை போராட்டம் என்பதல்ல.
ISILkillingfields
உலகு தழுவிய இஸ்லாமிய சர்வாதிகாரத்தை ஏற்படுத்தும் அடிப்படைவாத பிரிவினைவாத நாசக்கார போராட்டம்” - என்பது இதிலிருந்து திட்டவட்டமாகிறது. ஹஜ் யாத்திரைக்காக அரசாங்கத்திலிருந்து நிதியுதவி பெற்று ஊரெல்லாம் ஹஜ் ஹவுஸ் கட்டும் முஸ்லீம்கள் மெக்காவிலிருக்கும் காபாவை தகர்ப்போம் என்று ISIS கருத்து வெளியிட்டவுடன் ISISக்கு எதிராக ஏன் போராட்டம் நடத்தவில்லை. கருப்பு நாள் என்று ஆண்டுதோறும் டிசம்பர் 6 ஐ அனுசரிக்கும் இந்த பாபரின் வாரிசுகளுக்கு ISIS காபாவை இடிப்பது ஏற்புடையதா?
kaba

http://www.huffingtonpost.com/2014/07/01/isis-destroy-kaaba-mecca_n_5547635.html#
பாரதத்திலிருந்து இளைஞர்கள் ISISற்காக போரிடச்செல்வதும் அதன் பயற்சிக்களங்களும் ஆதரவு பிரச்சாரங்களும் நம் நாட்டில் இருப்பது அனைத்துப் பத்திரிக்கைகளிலும் வெளிவந்த பின்னும் பாரதத்தில் ISISஆல் அச்சுறுத்தல் இல்லை என்று மத்திய அரசு தெரிவித்ததை ஆகஸ்ட் 13, 2014 தேதியிட்ட தினமலர் வெளியிட்டுள்ளது. 
isis dinamalar nofear

http://www.dinamalar.com/news_detail.asp?id=1045072
10 ஆண்டுகால பலவீனமான ஆட்சியிலிருந்து ஒரு பாதுகாப்பான ஆட்சிவரும் என்ற ஏக்கத்துடன் வாக்களித்த நம் நாட்டு மக்களுக்கு இந்த அறிக்கை பேரிடியாக அமைந்துள்ளது. இந்தப் பார்வையை மத்திய அரசு மாற்றிக்கொள்ளவேண்டும், மாற்றிக்கொள்ளும் என்று நம்புவோமாக!
இந்த நம்பிக்கைக்கு சற்று ஆறுதலாக ஆகஸ்ட் 20, 2014 தேதியிட்ட தினமலரில் கனடா நாட்டை சேர்ந்த ஒரு பயங்கரவாதி ISISல் இளைஞர்கள் சேர அறைகூவல் விடுக்கும் வீடியோ படம் தமிழ் வாசகங்களுடன் வெளியிட்டிருந்ததைச் சுட்டிக்காட்டி தமிழக அரசை தீவிரமாக விசாரிக்க மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது. இவ்வளவு நடந்தும் ISIS நடவடிக்கை தமிழகத்தில் தீவிரமாக இல்லை என்ற நிலைப்பாட்டை தமிழக அரசு தளர்த்தியதாகத் தெரியவில்லை. ஓட்டுக்காக நாட்டை விற்கும் இழிச்செயலை அரசு செய்யலாமா?
isis video tn dinamalar 20 8 2014
http://epaper.dinamalar.com/PUBLICATIONS/DM/DINAMALAR/2014/08/20/ArticleHtmls/20082014006009.shtml?Mode=1
உலக வர்த்தக மையத்தை தகர்க்கவும், மும்பையில் தாக்குதல் நடத்தவும், ஐரோப்பியாவில் இரயில் நிலையங்களைத் தகர்க்கவும், பாரதப் பாராளுமன்ற கட்டடத்தைத் தாக்கவும் உலகம் முழுவதும் சதிச்செயல்களில் ஈடுபட பயங்கரவாதிகளை உருவாக்கும் தொழிற்சாலையாக பாகிஸ்தான்,   ஆப்கானிஸ்தான் விளங்கியதால் இன்று இந்த இருநாடுகளும் உலக நாடுகளால் கரும்புள்ளியாக கருதப்படுகிறது. இந்த நாடுகளில் தாலிபான்களின் காட்டாச்சியே  நடைபெறுகிறது. இந்தப் பயங்கரவாத விளைநிலங்களை தாலிபான் நாடு என்று அழைக்கிறார்கள். இன்று தமிழகத்திலிருந்து சிரியாவிற்கும் ஈராக்கிற்கும் பயங்கரவாதிகள் பயிற்சி பெற்றுச் செல்கிறார்கள் என்றால் இங்கு நடப்பது தமிழன் ஆட்சியா? தாலிபன் ஆட்சியா?

Thursday, 21 August 2014


இந்து என்பது மதம் அல்ல, அது கலாச்சார அடையாளம் என்று மத்திய மந்திரி வெங்கையா நாயுடு கருத்து தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், ‘‘இந்தியா என்பது இந்துக்கள் நாடு, இந்துத்வா என்பது அதன் அடையாளம்” என்று கருத்து தெரிவித்திருந்தார். அதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது.

இந்நிலையில் இன்று இந்து என்பது மதம் என்ற கருத்தல்ல, இது கலாச்சாரத்தின் அடையாளம் என்று மத்திய மந்திரி வெங்கையா நாயுடு விளக்கம் அளித்தார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘‘இந்து என்ற வார்த்தை மதத்தை குறிக்கிறது என்றால் தி இந்து, இந்துஸ்தான் டைம்ஸ் என்ற பத்திரிகைகள், இந்திய அக்பார் இந்துஸ்தான், இந்துஸ்தான் மெஷின் டூல்ஸ், இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிடெட், இந்துஸ்தான் ஷிப்யார்ட் என ஏன் பெயர் வைக்கப்பட்டது?.

இதேபோல் என்னால் 125 உதாரணங்களை கொடுக்க முடியும். இந்த பெயர்கள் எல்லாம் மோடியோ நானோ அல்லது மற்ற தலைவர்களோ வைக்கவில்லை. இது நம்முடைய பாரம்பரியம்.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக சுதந்திர தினத்தன்று நாம் ஜெய் ஹிந்த் என்றுதான் சொல்கிறோம். ஆனால், இந்து என்ற வார்த்தையை கூறும்போதெல்லாம் சர்ச்சைகளை உருவாக்க முயற்சிக்கிறார்கள்.” என்றார்.

-மாலைமலர்.

பெரம்பலூரில், மாவட்ட காவல் துறை சார்பில் விநாயகர் சிலை ஊர்வலம் நடத்துவது தொடர்பான கருத்தரங்கு புதன்கிழமை நடைபெற்றது.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சோனல் சந்திரா தலைமையில் நடைபெற்ற கருத்தரங்கில், பெரம்பலூர் மாவட்டத்தில் விநாயகர் சிலை வைத்தல், ஊர்வலம் மற்றும் கரைத்தல் தொடர்பான அனைத்துவிதமான பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும், ஊர்வலத்துக்கு பாதுகாப்பு அளிப்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
கூட்டத்தில், மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கே.ஆர். விஜயபாஸ்கர், துணைக் கண்காணிப்பாளர் ஆர். கோவிந்தராசு மற்றும் விழாக் குழுவினர் பங்கேற்றனர்.

- தினமணி.