Friday, 22 August 2014


இந்தியா இந்து நாடு…இந்தியாவில் வசிப்பவர்கள் அனைவரும் இந்துக்களே..இஸ்லாம்—கிறிஸ்தவர்கள்..உள்ளிட்ட அனைத்து மதத்தினருக்கும் இது பொருந்தும்…இதுதான் ஆர்.எஸ்ஸின் அகிலபாரத தலைவர் திரு மோகன் ஜி பாகவத் அவர்கள் பேசியதன் சுருக்கம்..

இதை மோகன் ஜி இப்போதுமட்டும் சொல்லவில்லை..இதற்குமுன் பலமுறை பேசியிருக்கிறர்..ஆர்.எஸ்ஸில் மோகன் ஜி மட்டுமல்ல –பல தலைவர்கள் இதே கருத்தை பல இடங்களில் பேசியிருக்கிறார்கள்…

“நான் பிறப்பால் இஸ்லாமியன்..கலாச்சாரத்தால்..இந்து..”—என்று முன்னாள் மத்திய கல்வி மந்திரியும், அறிஞருமான முகம்மது கரீம் சாக்ளா கூறியுள்ளார்..

கோவாவின் தற்போதைய துணை முதல்வர் “நான் பிறப்பால் கிறிஸ்தவன்..பண்பாட்டால்..இந்து” என கூறியுள்ளார்..

கேரளாவில் ஆளும் காங்கிரஸ் மந்திரி, ஆரியத்தான் முகம்மது..”நாம் (முஸ்லீம்கள்) இந்நாட்டில், மதம் மாற்றப்பட்டு இஸ்லாமியர்கள் ஆனவர்கள்..இங்குள்ள மசூதிகள் எல்லாம் முன்பு கோவிலாக இருந்தவைகள்..இந்துக்கள் மிகவும் சகிப்புத்தன்மை கொண்டவர்கள்..அதனால்தான் நம் இங்கு வாழ முடிகிறது..””—நாம் பிறப்பால் முஸ்லீம்கள் ஆனலும் நமது கலாச்சாரம் “இந்துவே”—என பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளார்..

1947 பிரிவினைக்கு முன் இந்தியா..பிரிட்டனின் காலனி நாடாக இருந்தது..பிரிவினைக்குப் பின், பாகிஸ்தான் என்னும் இஸ்லாமிய குடியரசாகவும், இந்தியா என்னும் பாரதம் ..ஜனநாயக குடியராசாகவும் பிரகடன படுத்தப்பட்டது..

1971 இல் இந்திரா காந்தி, கத்தோலிக்க கிறிஸ்தவ சபையினர் உபயோகிக்கும், “மதசார்பற்ற—செக்குலர்”—என்ற புதிய—இந்தியாவிற்கு அன்னியப்பட்ட..வாக்கியத்தை சேர்த்து, “மதசார்பற்ற ஜனநாயக—சோசியலிச குடியராசாக” இந்தியாவை பிரகடனம் செய்தார்..

மோகன் ஜி அவர்களின் வார்த்தை காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் காதில் ஈயத்தை காய்ச்சி ஊற்றியது”—போல உள்ளது..வலிதாங்காமல் அவர்கள் அலறுகிறார்கள்..ஏதேதோ பிதற்றுகிறார்கள்..”ஆர்.எஸ்.எஸ். இந்தியாவை இந்து தேசமாக்க முயல்கிறது” என்கிறார்கள்..”பாஜகவின் சாயம் இப்போது வெளுத்து விட்டது..மதவாதம் தொடங்கி விட்டது..” என பிதற்றுகிறார்கள்..

கம்யூனிஸ்டுகள் ஒருபடி மேலே போய் “புதிய புரட்டு சரித்திரத்தை “ புகுத்த நினைக்கிறார்கள்..இந்திய அரசமைப்பு சட்டம் உருவானபோது இந்தியாவிற்கு மூன்று விதமான பெயர்கள் பரிசீலிக்கப்பட்டதாம்..அவை “இந்தியா..இந்துஸ்தானம்—பாரதம்” என்பவனவாம்…
அம்பேத்காரும் மற்றவரும் இந்துஸ்தானம் என்ற பெயரை ஒதுக்கித்தள்ளிவிட்டு, ”இந்தியா..என்னும் பாரதம்” என்ற பெயரை சூட்டினார்களாம்….இது எப்பிடி இருக்கு..

முதலில் அப்படிப்பட்ட விவாதமே வரவில்லை..மாறாக நாடு சுதந்திரம் அடைந்தபோது துவக்கப்பட்ட பல பொதுத்துறை நிறுவனங்களுக்கு “இந்துஸ்தான் “ என்று பெயர் சூட்டப்பட்டது..1..இந்துஸ்தான் மெஷின் டூல்ஸ்—2.இந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ்—3..இந்துஸ்தான் போட்டொ ஃபிலிம்ஸ்..

ஏன்..பன்னாட்டு கம்பெனியான “லீவர் பிரதர்ஸ்”—இந்துஸ்தான் லீவ்ர் என்றும், கிறிஸ்தவ பைபிள் சபை..”இந்துஸ்தான் பிபிளிகல் சொசைட்டி “ என்றும், பெயரை வைத்துக்கொண்டது கம்யூனிஸ்டுகளுக்கு தெரியவில்லை போலும்,,

எனவே “இந்து..இந்துத்வா…இந்துஸ்தன்..” என்பவை..ஒரு நிலப்பரப்பையும், கலாச்சாரத்தையும், வாழ்க்கை முறையையுமே குறிப்பிடுவனவாக இருந்தது..அது மதத்தை குறிப்பிடவில்லை..ஏனெனில், “இந்து” என்ற மதமே நம் பிரயோகத்தில், 18 ஆம் நூற்றாண்டு வரை இல்லை..
சிந்து நதிக்கு தெற்கே இருந்தவர்களை “சிந்தியர்” என்றும், அதுவே திரிந்து “ இந்தியர்” என ஆங்கிலேயர்களால் குறிக்கப்பட்டது.

இந்தியாவிலிருந்த கிறிஸ்தவர்—இஸ்லாமியர் அல்லாத, இந்திய மதங்களை அடையாளபடுத்த “இந்து மதம்” என குறிப்பட்டது ஆங்கிலேயர்கள்தாம்..
இந்து என்பது வாழ்க்கை முறை---”வழிபாட்டு முறை அல்ல”—”பண்பாடு—கலாச்சாரம்—நாகரீகத்தை குறிப்பது---மதத்தை அல்ல.. பின் ஏன் மோக்ன் ஜி அவர்கள் பேச்சு காங்கிரஸ் கம்யூனிஸ்ட்கள் வயிற்றில் புளியை கரைக்கிறது.?

பண்பாடு கலாச்சாரம் என்றால் கம்யூனிஸ்ட்களுக்கு என்னவென்று தெரியாது..ஏனெனில், அவர்களிடம்….அவ்ர்களின் கட்சியும் ..சித்தாந்தமும், எந்த..நல்ல..உயரிய பண்பாட்டையும் பதிக்கவில்லை—எனவே பண்பாடு பற்றி கம்யூனிஸ்ட்கள் அறியாததால், அவர்களுக்கு புரியும் வண்ணம், “வாழ்க்கை முறை’ என்பதை எடுத்துக்கொள்வோம்..

இந்தியாவில் வாழும் மதம்மாறிய பூர்வகுடிகளான, இஸ்லாமிய. கிறிஸ்தவர்கள், இந்நாட்டின் பல நல்ல அம்சங்களை, தங்கள் வாழ்க்கைமுறையில் பயன்படுத்டுகிறார்கள்..பின்பற்றுகிறார்கள்..

நாகூர் மசூதியில் கொண்டாடும் “சந்தனகூடூ திருவிழா”—வேளாகன்னி மற்றும் மதுரை செயிண்ட்மேரிஸ் ஆலயம் உள்ளிட்ட பல சர்ச்சுகளில் மேரிமாதா “ரத ஊர்வலத்தில் பவனி”—கேரளாவில் ஓணம் பண்டிகை—வங்காளத்தில் துர்க்காபூஜா கொண்டாடல்,--வீட்டின் முன் சாணம் தெளித்தல், கோலமிடல், நெற்றியில் திலகம் வைத்தல், பெண்கள் தாலிகட்டிக்கொள்ளுதல்,, புடவை, வளையல் அணிதல், தேங்காய் உடைத்து நற்காரியங்களை துவக்குதல், என்பவனவெல்லாம், இந்து வாழ்க்கைமுறையிலிருந்து, மற்ற மதத்தினர் எடுத்து கொண்டனர்.

.இப்படி இந்து வாழ்வியல் நெறிகளை பின்பற்றுபவர்களை “இந்து” என சொல்லுவதில் என்ன தவறு உள்ளது?

பாகிஸ்தன் டி.வி., மற்றும் ரேடியோவில், இந்தியாவை பற்றி குறிப்பிடும்போது, “இந்துஸ்தான்” இந்துஸ்தனிகள்,”, என்ற்தான் குறிப்பிடுகிறார்கள்.—இந்தியாவிலிருந்து ஹஜ் புனித யாத்திரை செல்லும் இஸ்லாமியர்களை, அரேபிய முஸ்லீம்கள், “இந்து—இந்துஸ்தனி” என்ற்தான் அழைக்கிறார்கள்..சீனா பயணம் மேற்கொண்ட டெல்லி இமாம் புகாரியை, “இந்து—முஸ்லீம்”—என்றுதான் வரவேற்றார்கள்..

ஆக உலகம் முழுதும் உள்ளவர்கள், இந்தியாவில் இருந்து எவர் வ்ந்தாலும், “ இந்து—இந்துஸ்தனி”—என குறிப்பிடும் போது மோகன் ஜி குறிப்பட்டதில் ஏன் காங்கிரசும், இடதுசாரிகளும் தவறு கண்டு பிடிக்கிறார்கள் என்பது புரியவில்லை..

மோகன் ஜி பேச்சுக்கு மோடி விளக்கம் தந்தாக வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் ( அப்படி ஒருவர் இருக்கிறரா?)ஞானதேசிகன், அறிக்கை விடுவது உளரலின் உச்சகட்டம்..

நாம் அடிக்கடி குறிப்பிடும் “இந்தோனேசியாவின்.-கருடா ஏர்லைன்ஸ்--,குபேரா பாங்க்---ராணி சுகர்ணோ புத்ரி---பாங்காக் விமானநிலையத்தின் முன் உள்ள மிகப்பெரிய “ பாற்கடலை கடையும் சிலை”—ஆண்டுமுழுதும் நடக்கும் “ராமாயண நாடகம்”—என “இஸ்லாத்தை தேசிய மதமாக” வைத்திருக்கும் நாடு, தன் மூதாதையர்களான இந்துக்களின் கலாச்சாரத்தை கைவிடாத காட்சியையே… மோகன் ஜி பாகவத் இந்தியாவிற்கும் பொருந்தும் வண்ணம் கூறியுள்ளார்.

இந்து வாழ்க்கை நெறியில் ஏற்கனவே முப்பத்தி முக்கோடி தேவர்கள் உண்டு…அவ்ர்களில் அடுத்தடுத்து ஒருவராக யேசுவையும் அல்லாவையும், ஏற்பதில் நமக்கொன்றும், ஆட்ஷேபம் இல்லை.

நம்மிடம் தெய்வ நம்பிக்கை உடையவனும் உண்டு, நாத்திகனும் உண்டு….கடவுளை கல்லாக பார்ப்பவனும் உண்டு, கடவுளை கல்லால்—செருப்பால்-- அடித்த கி.வீரமணி..ஈ.வெ.ராக்களும் உண்டு..காற்றையும் நீரையும் நெருப்பையும் நிலத்தையும், ஆகாயத்தையும் பஞ்சபூதங்களாக வழிபடுவதும் உண்டு..

இஸ்லாமியருக்கு குர்-ஆனும்---கிறிஸ்தவருக்கு பைபிள் மட்டுமே “வேத நூல் “ என்பது போல நம்மிடம் ஒரே ஒரு வேத நூல் மட்டுமே உண்டு என்னும் நிலை இங்கில்லை..ஒராயிரம் வேதங்கள் இங்குண்டு…புதிது புதிதாக தினசரி ஒன்று தோன்றினாலும் நாம் ஏற்றுக்கொள்ள தயார் என்னும் மனநிலை நமக்குண்டு..

இந்த பன்முகத் தன்மையே பாரதத்தின் சிறப்பு..இந்து தர்மத்தின் மாண்பு…இது இருந்ததால்தான் 3 ஜனாதிபதிகள்---30 கவர்னர்கள்---300 எம்.பிக்கள்—3000 எம் எல் ஏக்கள்—30 லட்சம் அரசு அதிகாரிகள் என முஸ்லீம்கள் இந்தியாவில் பதவி சுகத்தை அனுபவிக்க முடிந்தது..

இப்படி பதவி தந்து, பவிஷு தந்து, எல்லோரையும் அன்பாய் அரவணைக்கும் “இந்துத்வாவை” குற்றங்காண்பவர்கள் ஒன்றை மட்டும் புரிந்து கொள்ளவேண்டும்..
“இந்து மெஜாரிட்டியாக” இருக்கும்வரையே இந்நாட்டில் “மைனாரிட்டிகள்—பாதுகாப்பாக” இருக்க முடியும்..

“இந்துத்வா “ வலிமை பெற்று இருந்தால் மட்டுமே இந்நாட்டில் “மைனாரிட்டிகள் உரிமைகள்” காக்கப்படும்..

இது புரியாமல் குரல் கொடுப்போர் பாகிஸ்தான், வங்கதேசம், ஈரான்-ஈராக், சிரியா போன்ற நாடுகளில் முஸ்லீம்கள் படும் அவதிகள் போல இந்தியாவிலும் அவஸ்தை படவேண்டும் என்று விரும்புகிறார்களோ என நினைக்கத் தோன்றுகிறது…..

“இந்து—இந்துத்வா---இந்தியா—இந்துஸ்தான்..—” இவை அனைத்தும் ஒன்றுதான்…”இந்தியா—பாரதம்—இந்துஸ்தான் –இவற்றில் இருக்கும் அனைவரும் “இந்துக்கள்தான்”—

இதை ஏற்றால்---வாழ்வு----மறுத்தால்—தாழ்வு..வீழ்வு…
புரிய வேண்டியவர்களுக்கு புரிந்தால் சரி…

எஸ்.ஆர்.சேகர்

0 comments:

Post a Comment