Thursday, 21 August 2014


பெரம்பலூரில், மாவட்ட காவல் துறை சார்பில் விநாயகர் சிலை ஊர்வலம் நடத்துவது தொடர்பான கருத்தரங்கு புதன்கிழமை நடைபெற்றது.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சோனல் சந்திரா தலைமையில் நடைபெற்ற கருத்தரங்கில், பெரம்பலூர் மாவட்டத்தில் விநாயகர் சிலை வைத்தல், ஊர்வலம் மற்றும் கரைத்தல் தொடர்பான அனைத்துவிதமான பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும், ஊர்வலத்துக்கு பாதுகாப்பு அளிப்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
கூட்டத்தில், மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கே.ஆர். விஜயபாஸ்கர், துணைக் கண்காணிப்பாளர் ஆர். கோவிந்தராசு மற்றும் விழாக் குழுவினர் பங்கேற்றனர்.

- தினமணி.

0 comments:

Post a Comment