Saturday, 12 October 2013

எனக்கு இன்று பூஜை
                சிவன், விஷ்ணு மற்றும் பிரம்மா மூவரும் தங்கள் சக்தியை ஒருங்கிணைத்து உருவாக்கிய பலத்தோடு மற்ற கடவுள்களும் தங்கள் ஆயுதத்தை கொடுத்து உருவாக்கிய மிகப்பெரிய சக்தி அதாவது துர்க்கையம்மன், தன் சிம்ம வாகனத்தில் ஒன்பது இரவு பகல் (நவராத்திரி)  போர்புரிந்து, மகிஷாசூரனை தசமி அன்று வெற்றிகொண்ட நாள் விஜயதசமி  ......................... 
விஜயதசமி

 விஷ்ணுவின் ஏழாவது அவதாரமான ராமவதாரத்தில், பத்து தலைகள் கொண்ட ராவணனின் தலைகளை கொய்து வெற்றிகொண்ட, தச-ஹரா என்று அழைக்கப்படும்  நாள்  தசரா ..............
தசரா


           இவ்வாறு பலவிதமாக கொண்டாடப்படும் வெற்றிநாளானஆயுதபூஜை, நமது வ.களத்தூரில் நாளை சிறப்பாக கொண்டாடமக்கள் ஏற்பாடு செய்து வருகின்றனர்.
             கடைகளில் வாழை மரம் கட்டி,  மாவிலை தோரணம் தொங்குகிறது, சந்தனமும்  குங்குமமும், கல்லா பெட்டிமுதல்,எடைகல்வரை மனம் கமழுகிறது. வாகனங்கள் புதிது போல் அலங்கரிக்கப்பட்டு வலம் வருகின்றன . மாணவர்கள் தங்கள் பாட புத்தகங்களுக்கு பொட்டு வைத்து பூஜைக்கு தயாராகிவருகின்றனர். எல்லாவற்றிற்கும் மேலாக அடிப்படையில் விவசாயத்தை தொழிலாக கொண்ட நம் உறவுகள்,  உழவுக்கருவிகளான கலப்பை, மண்வெட்டி , அரிவாள் போன்ற அனைத்து கருவிகளுக்கும் நாளை மட்டும் ஒருநாள் விடுமுறை விட்டு வணங்கப்போகிறார்கள் . பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு முதன் முதலாக கல்வியை  'அ' என்ற எழுத்தை நெல்லில் கைபிடித்து எழுத கற்றுகொடுக்க ஆவலோடு காத்திருக்கிறார்கள். ..............
"அ................அம்மா............."



வாருங்கள் வ.களத்தூர் உறவுகளே............. நம் ஆயுதத்துக்கு திருவிழா கொண்டாடுவோம்.

Thursday, 10 October 2013


1. வ.களத்தூர் நடு  மற்றும் தெற்குத்தெரு (வார்டு எண் 1)
வாக்குசாவடி எண் மற்றும் முகவரி:எண்-9௦ ஊராட்சி ஒன்றிய பெண்கள் நடுநிலைப்பள்ளி –வடக்கு மெத்தை கட்டிடம் , வண்ணாரம்பூண்டி. 
 http://elections.tn.gov.in/PDF/dt17/ac147/ac147090.pdf

2.வ.களத்தூர் வடக்கு தெரு (வார்டு 1 ), மில்லத் நகர் (வார்டு நான்கு ), போஸ்டாபீஸ் தெரு (வார்டு 2) மற்றும் ஆக்ராகாரத் தெரு (வார்டு 3)
வாக்குசாவடி எண் மற்றும் முகவரி: எண்-91, ஊராட்சி ஒன்றிய பெண்கள் நடுநிலைப்பள்ளி , வடக்கு மெத்தை கட்டிடம் ,தெற்கு பகுதி , வண்ணாரம்பூண்டி. 
http://elections.tn.gov.in/PDF/dt17/ac147/ac147091.pdf


3.வ.களத்தூர் – அக்ரஹாரத்தெரு (வார்டு 3)
வாக்குசாவடி எண் மற்றும் முகவரி : எண்-92, ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளி , வடக்கு பார்த்த ஓட்டு கட்டிடம் , வண்ணாரம்பூண்டி.
http://elections.tn.gov.in/PDF/dt17/ac147/ac147092.pdf


4.மேலத் தெரு (வார்டு நான்கு), மேட்டுச் சேரி ( வார்டு 5) மற்றும் போஸ்டாபீஸ் தெரு ( வார்டு 2)
 வாக்கு சாவடி எண் மற்றும் முகவரி: எண்-93, ஊராட்சி ஒன்றிய பெண்கள் நடுநிலைப்பள்ளி, தென்வடல் மெத்தை கட்டிடம் ,மேற்கு பார்த்தது, வன்ன்னாரம்பூண்டி.
http://elections.tn.gov.in/PDF/dt17/ac147/ac147093.pdf


5.மில்லத் நகர் (வார்டு நான்கு) , காமராஜ் நகர் ( வார்டு நான்கு) மற்றும் தெற்கு தெரு (வார்டு நான்கு).
வாக்கு சாவடி எண் மற்றும் முகவரி: எண்-(தொண்ணுற்று நான்கு)  ஊராட்சி ஒன்றிய பெண்கள் நடுநிலைப்பள்ளி , ஆஸ்பெஸ்டாஸ் கட்டிடம், வண்ணாரம்பூண்டி.
http://elections.tn.gov.in/PDF/dt17/ac147/ac147094.pdf

6.வ.களத்தூர் பள்ளிவாசல் வீதி (வார்டு 1,2)
 வாக்கு  சாவடி எண் மற்றும் முகவரி: எண்-95, ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளி ,ஆஸ்பெஸ்டாஸ் கட்டிடம் , வண்ணாரம் பூண்டி .
http://elections.tn.gov.in/PDF/dt17/ac147/ac147095.pdf


7.வண்ணாரம்பூண்டி ரேசன் கடை தெரு (வார்டு நான்கு), மில்லத் நகர் (வார்டு நான்கு) மற்றும் வண்ணாரம்பூண்டி காலனி (வார்டு 5). வாக்கு சாவடி எண் மற்றும் முகவரி: எண்: 96, ஊராட்சி ஒன்றிய பெண்கள் நடுநிலை பள்ளி , கற்போம் கற்பிப்போம் கட்டிடம், வண்ணாரம்பூண்டி. 
http://elections.tn.gov.in/PDF/dt17/ac147/ac147096.pdf


8.ராயப்பா நகர், வள்ளியூர் மற்றும் இந்த்ரா நகர் (வார்டு 6)
வாக்கு சாவடி எண் மற்றும் முகவரி: எண்- 97, ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி , கிழக்கு பார்த்த ஓட்டு கட்டிடம்.
http://elections.tn.gov.in/PDF/dt17/ac147/ac147097.pdf
      மேற்காணும் முகவரியில் உங்களால் பார்க்க முடியவில்லை எனில் நேரடியாக இணையதள முகவரியை google தேடலில் தேடலாம்.