எனக்கு இன்று பூஜை |
விஜயதசமி |
விஷ்ணுவின் ஏழாவது அவதாரமான ராமவதாரத்தில், பத்து தலைகள் கொண்ட ராவணனின் தலைகளை கொய்து வெற்றிகொண்ட, தச-ஹரா என்று அழைக்கப்படும் நாள் தசரா ..............
தசரா |
இவ்வாறு பலவிதமாக கொண்டாடப்படும் வெற்றிநாளானஆயுதபூஜை, நமது வ.களத்தூரில் நாளை சிறப்பாக கொண்டாடமக்கள் ஏற்பாடு செய்து வருகின்றனர்.
கடைகளில் வாழை மரம் கட்டி, மாவிலை தோரணம் தொங்குகிறது, சந்தனமும் குங்குமமும், கல்லா பெட்டிமுதல்,எடைகல்வரை மனம் கமழுகிறது. வாகனங்கள் புதிது போல் அலங்கரிக்கப்பட்டு வலம் வருகின்றன . மாணவர்கள் தங்கள் பாட புத்தகங்களுக்கு பொட்டு வைத்து பூஜைக்கு தயாராகிவருகின்றனர். எல்லாவற்றிற்கும் மேலாக அடிப்படையில் விவசாயத்தை தொழிலாக கொண்ட நம் உறவுகள், உழவுக்கருவிகளான கலப்பை, மண்வெட்டி , அரிவாள் போன்ற அனைத்து கருவிகளுக்கும் நாளை மட்டும் ஒருநாள் விடுமுறை விட்டு வணங்கப்போகிறார்கள் . பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு முதன் முதலாக கல்வியை 'அ' என்ற எழுத்தை நெல்லில் கைபிடித்து எழுத கற்றுகொடுக்க ஆவலோடு காத்திருக்கிறார்கள். ..............
"அ................அம்மா............." |
வாருங்கள் வ.களத்தூர் உறவுகளே............. நம் ஆயுதத்துக்கு திருவிழா கொண்டாடுவோம்.
0 comments:
Post a Comment