Monday, 14 October 2013

           
                  நம் ஊரில் RSS துவங்கி இரு தலைமுறைக்கு மேல் ஆகிறது. இன்று உலகம் முழுவது நம் ஊர் இருக்கும் நிலை போன்றுதான்  உளளது. நமது ஊர் மற்றும்  நாட்டை பொறுத்த அளவில்   RSS ன் தேவை இன்றியமையாதது என்பது நாம் அறிந்ததே. பல்வேறு சூழ்நிலைகளில் நம்மோடு இருக்கும் இந்த அமைப்புக்கு இன்று எண்பத்து எட்டாவது பிறந்த நாள்.


ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக் சங்கம் (R.S.S.)இன்று தனது 88வது ஆண்டில்...... பாரத நாட்டின் உயிர்த்துடிப்பான இந்து சமுதாயத்தை ஒற்றுமைப்படுத்தி தீண்டாமையை அகற்றி பாரதத்தை உலகின் குருவாக திகழ்வைக்க துவக்கப்பட்ட இயக்கமே ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக் சங்கம் என்னும் ஆர்.எஸ் .எஸ். 1925ல் பிறவி தேசபக்தரான டாக்டர் .ஹெட்கேவாரால் நாகபுரியில் விஜயதசமி அன்று துவக்கப்பட்டது .சீன போரில் நமது இராணுவத்துடன் இணைந்து போர்முனையில் உதவி செய்ததால் ஆர்.எஸ் .எஸ் -ஐ தவறாக நினைத்துக்கொண்டிருந்த அன்றைய பிரதமர் நேரு ,உண்மையை உணர்ந்து ,சங்கத்தை 1963 ஜனவரி 26 குடியரசு தினவிழா அணி வகுப்பில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்தார்.இன்று வரை வேறு எந்த ஒரு தனியார் இயக்கமோ அமைப்போ குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்றதில்லை. 1965 பாகிஸ்தான் போரின் போது தலைநகர் டெல்லியில் சாலை போக்குவரத்து கட்டுப்பாடு , காவல் துறைப்பணி முழுவதையும் இருபது நாட்களுக்கு அன்றைய பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி ஆர்.எஸ் .எஸ் வசம் ஒப்படைத்தார் . அத்தகைய சீரிய பணி செய்த இயக்கம்.1975 - நெருக்கடிநிலை சமயத்தில் பல கட்சிகளும் ,அமைப்புகளும் ,தலைவர்க ம் முடங்கிப் போன சமயத்தில் சர்வாதிகார மத்திய அரசை எதிர்த்து நாடு முழுவதும் சங்க சகோதரர்கள் சத்தியாகிரகப் போர் செய்தனர். ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பல மாதம் சிறை சான்று பல கொடுமைகளை ஏற்று ,சர்வாதிகார ஆட்சியை நீக்கி தேசத்தை மீண்டும் மக்களாட்சிக்கு திருப்பிய இயக்கம் .1995 தேச விரோதிகளால் தூண்டி விடப்பட்டு ஜாதி வெறியினால் தென் மாவட்டங்கள் ரணகளமான சமயத்தில் சமுதாய நல்லிணக்கக் கூட்டத்தையும் , பாதயாத்திரையும் நடத்தி சமுதாய இசைவை ஏற்படுத்தியது. 2004 ஆழிப் பேரலையாம் சுனாமி தாக்கி போது உடனடியாக அவர்களுக்கு நேசக்கரம் நீட்டி வாழ்வில் ஒளியை ஏற்றியது .தேசம் முழுவதும் கல்வி ,மருத்துவம் ,பண்பாடு பொருளா சா ஒன்றரை லட்சம் சேவா காரியங்கள் செய்து வரும் அமைப்பு .விமான ,ரயில் விபத்து ,லாத்தூர்,குஜராத் பூகம்பம் போன்ற போரிடர்களின் போது நேசக்கரம் நீட்டி உடனடி சேவை செய்தது. தேசம் முழுவதும் அறுபதாயிரம் ஊர்களில் தனது கிளைகளைக் கொண்டது  மற்றும் 50 க்கும் மேற்ப்பட்ட நாடுகளில் இந்துக்களை ஒருங்கிணைக்கும் பணியை செய்து வருகிறது. தினசரி உடற்பயிற்சி மனப்பயிற்சி தர்ம நெறி குறித்த போதனைகள் ஒழுக்கம் தேச பக்தி கட்டுப்பாடு போன்றவற்றை போத நலன், பேரிடர் மீட்பு பணிகள், பொது நல பணிகள் போன்றவற்றில் பெரும் பங்கெடுத்து செயல் பட்டு வருகிறது.

0 comments:

Post a Comment