பெரம்பலூர் அருகே குரும்பலூரில் உள்ள பாரதிதாசன் பல்கலைக் கழக கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் திங்கள்கிழமை தொடங்கியது.
பெரம்பலூர் பாரதிதாசன் பல்கலைக் கழக கல்லூரியில் இளநிலைப்பாட பிரிவான பி.லிட் (தமிழ்), பி.ஏ ஆங்கிலம், வரலாறு, சுற்றுலா மற்றும் பயண மேலாண்மை, பி.பி.ஏ, பி.எஸ்.டபிள்யூ (சமூகப்பணி), பி.காம், பி.எஸ்.சி கணிதம், கணினி அறிவியல், நுண்ணுயிரியல், உயர் தொழில் நுட்பவியல், பி.சி.ஏ கணினி பயன்பாட்டியல், முதுநிலை பாட பிரிவான எஸ்.சி.ஏ முதுநிலை கணினிப் பயன்பாடு, எம்.எஸ்.டபிள்யூ (முதுநிலை சமூகப்பணி) ஆகிய பாடபிரிவுகள் கற்பிக்கப்படுகிறது.
இதில், 2014-2015ம் கல்வியாண்டிற்கான இளநிலை மற்றும் முதுநிலை வகுப்புக்களுக்குரிய சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் திங்கள்கிழமை தொடங்கியது. காலை 10 மணி முதல், மாலை 4 மணி வரை விண்ணப்பம் வழங்கப்படுகிறது. விண்ணப்பக் கட்டணமாக ரூ. 100ம், எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு இலவசமாக வழங்கப்படும். குறிப்பாக, ஒருவருக்கு ஒரு விண்ணப்பம் மட்டுமே வழங்கப்படும். இலவச விண்ணப்பம் பெற சாதிச் சான்றிதழின் அசல் மற்றும் நகலை சமர்பித்து பெற்றுக்கொள்ளலாம் என்றார் கல்லூரி முதல்வர் (பொ) காசிநாதன்.
நன்றி-தினமணி.
0 comments:
Post a Comment