பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் சூப்பர் 30 மூலம் பயிற்சி பெற்று
அரசுப் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் மற்றும் அவர்களது
பெற்றோர்களுடனான சந்திப்புக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பங்கேற்ற ஆட்சியர் மேலும் பேசியது:
மருத்துவம், பொறியியல் படிப்பு மட்டுமே கல்வியின் எல்லை என்று நினைத்து விடக்கூடாது. நாம் என்ன படித்தாலும் அந்தப் படிப்பு நமது சமுதாயத்திற்கு பயன்படக்சுடிய வகையில் இருக்க வேண்டும்.
அரசுப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகள் தனியார் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு நிகரான மதிப்பெண்களை பெற முடியும் என்று தன்னம்பிக்கையுடனும் விடாமுயற்சியுடனும் படித்து சிறந்த மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சிப் பெற்றுள்ளனர்.
இப்பயிற்சி மையத்தில் சேர்ந்து பயின்ற 30 மாணவ, மாணவிகளும் கிராமப் பகுதிகளைச் சேர்ந்த அரசுப் பள்ளிகளில் பயின்றவர்கள்.
அவர்கள் குடும்பத்தில், இந்த மாணவர்களே முதல் தலைமுறையாக கல்லூரிகளுக்கு செல்ல உள்ளனர்.
எனவே, அவர்களுக்கு அனைத்து வசதிகளும் உள்ளடக்கிய மாவட்டத் தலைநகரமான பெரம்பலூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிற்சி அளிக்கப்பட்டு, தேவையான அடிப்படை வசதி செய்து தரப்பட்டது.
அரசுப் பொதுத் தேர்வை எதிர்கொள்ள வசதியாக அனைத்துப் பாடங்களையும் உள்ளடக்கிய முழுமையான தேர்வு நடத்தப்பட்டது. மாணவ, மாணவிகளுக்கு கல்வி கற்றுத்தருவது மற்றுமன்றி, மன அழுத்தம் நீங்கி மகிழ்வுடன் கல்வியில் ஈடுபாடு செலுத்த கன்னியாகுமரி, நாகர்கோவில், சுசீந்திரம் மற்றும் திற்பரப்பு அருவி உள்ளிட்ட பகுதிகளுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டது.
மாணவ, மாணவிகளின் கல்வித் தரம் உயர, சமுதாயத்தில் தலைசிறந்த கல்வியாளர்கள், அரசு அலுவலர்கள் மூலம் சிறப்பு தன்னம்பிக்கை பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டன. மருத்துவ ரீதியாக மாணவர்களின் உடல்நிலையைப் பாதுகாக்க மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்பட்டன.
பாதையில் உள்ள முட்களையும், கற்களையும் வாழ்நிலை சிரமங்களையும் எதிர்கொண்டு சாதித்துள்ளனர்.
எனவே, அரசுப் பள்ளி மாணவர்கள் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனை புரிய வேண்டும் என்றார் அவர்.
நிகழ்ச்சியில் சூப்பர் 30 ஒருங்கிணைப்பாளர் நா. ஜெயராமன், பள்ளித் தலைமை ஆசிரியர் ஜெயராமன் உள்ளிட்ட ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள், அவர்களது பெற்றோர் பங்கேற்றனர்.
நன்றி- தினமணி, jeeva.vasanth

0 comments:
Post a Comment