வங்கக் கடலில் உருவான குறைந்த
காற்றழுத்தத் தாழ்வு நிலை தொடர்ந்து நீடிப்பதால், தமிழகத்தில் மேலும் சில
நாள்களுக்கு மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்து.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ளது. இதனால், மாநிலம்
முழுவதும் கடந்த இரண்டு நாள்களாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில்,
வங்கக் கடலில் இலங்கை- தமிழக கடற்கரையில் நிலை கொண்டுள்ள குறைந்த
காற்றழுத்தத் தாழ்வு நிலை அதே இடத்தில் நீடிக்கிறது.
இதன் காரணமாக நமது வ.களத்தூரிலும் கடந்த மூன்று நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்று முழுவதும் வாணம்
மேகமூட்டத்துடன் தூறலாக இருந்தது. இரவு முதல் சிறிது கூடுதலாக மழைபெய்து
வருகிறது.
0 comments:
Post a Comment