Saturday, 15 March 2014

vkalathur பெரம்பலூர் அடுத்த சமத்துவப்புரம் அருகே திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வ.களத்தூர் கைகாட்டி  பிரிவு ரோட்டில் குறுக்கே உயர் அழுத்த மும்முனை மின் கம்பி செல்கிறது.
 இந்த மின்கம்பி நேற்று முன்தினம் இரவு எதிர்பாராதவிதமாக திடீ ரென அறுந்து விழுந்தது. இதைக்கண்ட வாகன ஓட்டிகள், வாகனங்களை நிறுத்தினர். திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையின் இரு புறமும் ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து நின்றன. தகவல் அறிந்து அங்கு வந்த நெடுஞ்சாலை ரோந்து போலீசார் இதுகுறித்து மின் வாரியத்தினருக்கு தகவல் அளித்தனர். இதைத் தொடர்ந்து அவர்கள் உடனடியாக மின்விநியோகத்தை துண்டித்து விட்டு அப்பகுதிக்கு விரைந்து வந்து சீரமைப்புப் பணியில் ஈடுபட்டனர். நீண்ட போராட்டத்துக்குப் பின்னர் இழுத்துக்கட்டப்பட்டது. அதன்பின் போக்குவரத்து சீரடைந்தது.
இச்சம்பவத்தால் அப்பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகளும், பயணிகளும் பெரிதும் அவதிப்பட்டனர்.


0 comments:

Post a Comment