Monday, 24 March 2014


பாரிவேந்தர் என்ற பச்சமுத்து.

பச்சமுத்துவின் SRM கல்வி நிறுவனமானது ஒரு அரசாங்கத்தை போல் இந்தியாவெங்கும் கிளைகள் பரப்பி பெரிய சாம்ராஜ்யமாக வளர்ந்து நிற்கிறது. ஹோட்டல், பஸ்,என்று மட்டுமல்லாமல் ஊடகத்துறையில் கூட புதியதலைமுறை , புதுயுகம் என்று கிளைகள் பரப்புகிறது.
ஒவ்வொரு தேர்தலின் போதும் இவரைப்போன்ற பெருநிறுவனங்கள் நடத்தும் முதலாளிகள் அரசியல்  கட்சிகளின் தேர்தல் செலவிற்கு கப்பம் கட்டவேண்டும் என்பது நமது அரசியலில் எழுதப்படாத விதி. மேலும் தேவைப்படும்போதெல்லாம் கட்ச்களுக்கு பணம் கொடுத்தாக வேண்டும். இதிலிருந்து தப்பிக்க ஒரேவழி அவர்களும் அரசியல்வாதிகளாகிவிட வேண்டியதுதான். MGR பலகலைகழகம் நடத்தும்  AC சண்முகம் அரசியலுக்கு வந்த காரணமும் இதுதான். இதுதான் பச்சமுத்தும் அரசியலுக்கு வர முக்கிய காரணமாக இருக்ககூடும்.  
அடிப்படை தொண்டனாக ஒரு அரசியல் கட்சியில் சேர்ந்து தலைவனாக ஆவதென்பது இன்றைய காலகட்டத்தில் முடியவே முடியாத ஒன்று. அதனால்தான் உடையார் சமூகத்தை முன்னிறுத்தி பச்சமுத்து IJK தொடங்க காரணமாக இருந்த்தது.
சரி,............ உடையார் சமூகத்தை முன்னிறுத்தி தனது தொழில் சாம்ராஜ்யத்தை காக்க வேண்டும் என்பது பச்சமுத்துவின் நோக்கமாக இருக்கும்போது , பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் வேட்பாளராக நிற்கும் அவரை  நாம் ஏன் வெற்றிபெறச் செய்ய வேண்டும்...?  
ஆ.ராசா மீது 2G அலைக்கற்றை ஊழல் குற்றச்சாட்டு கூறப்பட்டாலும் மிகவும் பின்தங்கிய பெரம்பலூர் மாவட்டத்தை குறிப்பாக பெரம்பலூரை பல திட்டங்கள் வந்தடைய காரணமாக இருந்தார் என்பது யாராலும் மறுக்கமுடியாத உண்மை. இதற்க்கு காரணமாக இருந்தது ராசாவிற்கு  அதிகார மட்டத்தில் இருந்த நெருக்கமும், அவர்களின் அரவணைப்பும்தான் என்பது நாம் அறிந்த ஒன்று. தற்போது பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியின் பாரதிய ஜனதா கூட்டணி வேட்பாளரும் IJK மற்றும் SRM நிறுவனங்களின் நிறுவனரான பாரிவேந்தர் என்றழைக்கப்படும் பச்சமுத்து , இந்தியாவின் அடுத்த பிரதமர் என்று எல்லோராலும் எதிர்பார்க்கப்படும் மோடிக்கு நெருங்கியவர் மட்டுமல்ல. இந்நாள், முன்னாள் அரசியல்வாதிகள் மற்றும் அதிகார வர்க்கத்திற்கு நெருக்கமானவர்.
SRM பல்கலைகழக எட்டாவது பட்டமளிப்பு விழாவில் ஜனாதிபதி
 
SRM பல்கலைகழக ஒன்பதாவது  பட்டமளிப்பு விழாவில் மோடி
பெரம்பலூர் தொகுதியின் தி.மு.க வேட்பாளர் சீமானூர் பிரபுவோ, அ.தி.மு.க. வேட்பாளர் மருதைராஜாவோ தமது கட்சிகளின் தலைவர்களுக்கு அடிமையாக மட்டுமே இருக்க முடியும். அவர்களின் பலம் அவ்வளவுதான். இவர்களால் தமது தொகுதிக்கு என்ன  வேண்டும் என அதிகார வர்க்கத்திடம் கேட்ககூட முடியுமா என்பது நேருவோ.. அம்மாவோ தான் முடிவு செய்ய வேண்டும்.
ஆனால் பச்சமுத்து IJK கட்சியை சார்ந்தவராக இருந்தாலும் அவர் BJP யின் சின்னமான தாமரை சார்பில்தான் நிறுத்தப்படுகிறார். நாளை வெற்றிபெற்றால் அவர் BJP MP யாகத்தான் கருதப்படுவார். எனவே கட்சித்தலைவரான ராஜ்நாத் சிங்கையோ மோடியையோ சந்தித்து, பெரம்பலூர் தொகுதி மக்களுக்கு அவர்கூறும் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டுகோள் வைக்கும் திறமை மற்றும் செல்வாக்கு கொண்டவர் பச்சமுத்து என்பது உண்மை.
இன்று மாநிலம் தொடங்கி குக்கிராமம் வரை ஒரு திட்டம் வருவதென்பது அதன் மக்கள் பிரதிநிதிகளின் மேல்மட்ட செல்வாக்கை பொறுத்தே அமைகிறது, அந்தவகையில் மற்ற வேட்பாளர்களை விட பச்சமுத்து பதவிக்கு வருவதற்கு முன்பே செல்வாக்கு மிக்கவர்.
இனி முடிவு செய்ய வேண்டியது நாம். நமக்கு MP யாக வருபவர் நேருவின் அடிமையா.. அம்மாவின் அடிமையா.......

0 comments:

Post a Comment