Monday, 20 March 2017



பெரம்பலூர் 4ரோடு மின்நகரில் வசிப்பவர் துரைசாமி. மின்வாரியத்தில் உதவி நிர் வாக அலுவலராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி மகாலட்சுமி. இவர்களின் 2வது மகன்தான் சதீஸ்குமார். எம்சிஏ படித்து சென்னையில் சாப்ட்வேர் இன்ஜினியராகப் பணிபுரிந்து வந்தார். 2013 ஜூன் 5ம்தேதி கொளத்தூர் பஸ்டாப்பில் நண்பருடன் நடந்து சென்றபோது இருசக் கர வாகனம் மோதி கீழே விழுந்து தலை யில் அடிபட்டு கோமா நிலைக்குச் சென் றார்.
பதறியடித்தபடி சென்னைக்கு ஓடிய பெற்றோர் மகனை காப்பாற்ற சென்னை யிலும் திருச்சியிலும் என 7மாதங்கள் மருத்துவ மனையிலேயே வைத்திருந்து சிகிச்சை மேற்கொண்டும் நினைவு திரும்ப வில்லை. மருத்துவத்தின் அனைத்து வழிமுறைகளையும் பின்பற்றி விட்டோம். இனி ஆண்டவன் நினைத்தால் மட்டுமே சதீஸ்குமாரை நினைவு திரும்பச் செய்ய முடியும் எனக்கூறி மருத்துவர்களும் கைவிரித்து விட்டனர். இதனால் 4வரு டங்களாக வீட்டிலுள்ள ஒரு அறையை மருத்துவ மனையைப்போல் ஆக்கி மகனை பாதுகாத்து வரும் பணிகளை பெற்றோர்கள் சளைக்காமல் செய்து வருகின்றனர்.

கழுத்துவழியாக மெட்டல் டியூப் பொருத்தி சுவாசம், மூக்குவழியாக திரவ உணவு, இடுப்பு வழியாக சிறுநீர் வெளியேற்றம் இவையெல்லாம் பராமரிப்பது தாய் மகா லட்சுமிதான். 4ஆண்டு கோமா நிலையில் இருப்பதே முற்றிலும் தெரியாதபடிக்கு தினமும் உடலை டவல் பாத் முறையில் சுத்தம் செய்வது, தலை முடியை டிரிம் செய்வது அனைத்தும் பாசமுள்ள தாய்க்குப் பழகிவிட்டது. தனக்கு வழங்கும் பழச்சாரின் சுவை தெரியாதது மட்டுமல்ல தான் உயிரோடு இருப்பதையே அரிய முடியாதபடியும், தாயின் ஸ்பரிசத்தை உணர முடியாத நிலையிலும் தான் சதீஸ்குமார் படுக்கையில் உள்ளார்.
அவருக்கு பிரசர் பரிசோதிக்கவும், உட லின் வெப்பத்தைப் பரிசோதிக்கவும் வீட்டிலேயே வசதி செய்து, மகன் தும்மி னால்கூட துடித்துப் போகும் தாயின் துணையுடன் பாதுகாப்பாக பராமரிக்கப் பட்டு வருகிறார். விபத்து இழப்பீடு கோரிய வழக்கு விசாரணைக்கு பெரம்பலூர் நீதி மன்றத்திற்கு ஸ்ட்ரெக்சரில் கொண்டு செல்லப்பட்ட சதீஸ்குமாரைப் பார்த்து, தனது இருக்கையை விட்டுக் கீழிறங்கி வந்த மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி நஸீமா பானு, தாயின் பணிகளை நினைத் துக் கண்கலங்கியுள்ளார்.
அந்தக் கண்ணீரின் அர்த்தம் அவரது தீர்ப்பிலும் தீர்க்கமாய் தெரிகிறது.காணும் கடவுளைப் போன்ற மருத்துவர்களும் கைவிட்ட நிலையில், வாழும் வயதுடைய சதீஸ்குமாரை வைத்துக் கொண்டு, ஐம்பது வயதுகளைக் கடந்துவிட்ட பெற்றோர்க ளின் அளப்பரிய தியாகத்தைக் கருத்தில் கொண்டு, எந்த நீதிபதியும் இதுவரை சொல்லாதபடிக்கு ரூ1கோடியே 4 லட் சத்து 16 ஆயிரத்தை இழப்பீட்டுத் தொகை யாக இன்சூரன்ஸ் நிறுவனம் வழங்க அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
31வயது இளைஞனை 3மாதக் குழந்தை யாக பாவிக்க பாசமுள்ள தாயால் மட்டுமே முடியும். ஆண்டவன் மனதுவைத்தால் தான் சதீஸ்குமார் நினைவு திரும்புவார் என்கிறது மருத்துவத் துறை. மனது வைக் காமலா மகாலட்சுமியை தாயாகக் கொடுத் திருப்பார்.

0 comments:

Post a Comment