வ.களத்தூரில் வருடம்தோறும் பொங்கல் விளையாட்டுவிழா நான்கு நாட்கள் நடத்திவருகிறோம்.. ஆனால் இந்தமுறை நடத்த வ.களத்தூர் காவல் நிலையத்தில் ,காவல்துறை அனுமதி வழங்க விண்ணபித்தபோது , ஒரு நாள் மட்டுமே அனுமதி வழங்கமுடியும் எனகூறிவிட்டார்கள் . எனவே நமது சங்கத்தின் சார்பாக தமிழக முதல்வர் அவர்களுக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளோம் .............. அதன் விபரம்.
தமிழ்நாடு அரசு
முதலமைச்சரின் தனிப் பிரிவு
கோரிக்கை எண் 2014/762829/KF
கோரிக்கை தேதி 08/01/2014
பெயர் S SATHIYARAJ தந்தை / கணவர் பெயர் T SELVARAJ
முகவரி 4/45, Melatheru, V.KALATHUR, Veppanthattai, V.KALATHUR,
Perambalur-621117
Tamilnadu
கோரிக்கை முதன்மை பிரிவு காவல்துறை
கோரிக்கை மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்களுக்கு வணக்கம், நான் வ.களத்தூர் கிராமத்தில் வசித்து வருகிறேன். எங்கள் ஊரில் இளைஞர்களால் நடத்தப்படும் விவேகானந்தர் இளைஞர் நற்பணி மன்றத்தின் செயலாளராக உள்ளேன் .எங்கள் ஊரில் பொங்கலை முன்னிட்டு வருடம் தோறும் விளையாட்டு போட்டிகள் நடத்திவருகிறோம். வ.களத்தூர் காவல்துறை அனுமதியுடம் இப்போட்டிகளை நடத்திவருகிறோம் . வழக்கமாக போகிப்பண்டிகை, தைப்பொங்கல். மாட்டுப்பொங்கல் மற்றும் உழவர் திருநாள் ஆகிய நான்கு நாட்கள் விளையாட்டு போட்டிகள் நடத்துவது வழக்கம் . அதுபோல் இந்த வருடமும் போட்டிகளை நடத்த அனுமதி பெற வ.களத்தூர் காவல் நிலையத்தில் விண்ணப்பித்தோம். ஆனால் ஒரு நாள் மட்டுமே விளையாட்டு போட்டிகள் நடத்த அனுமதிக்க முடியும் என வ.களத்தூர் காவல்நிலைய அதிகாரிகள் கூறுகின்றனர். இதற்கு முன் நடத்தப்பட்ட விளையாட்டுப்போட்டிகளில் எவ்வித அசம்பாவிதமும் நடைபெற்றதில்லை. மேலும் ஒவ்வொரு முறையும் காவல்துறை அனுமதி பெற்றுதான் நான்கு நாங்களும் போட்டிகள் நடத்தப்பட்டன. ஆனால் இந்தவருடம் ஒருநாள் மட்டுமே நடத்த காவல்துறை அனுமதிப்பதால் எங்கள் ஊரில் பாரம்பரியமாக நடத்தப்பட்டு வந்த போட்டிகள் நடைபெறாமல் போவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக உள்ளன. இதனால் எங்கள் ஊரின் பண்பாட்டு பாரம்பரியம் ஒழிந்து போகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மாண்புமிகு முதல்வர் அம்மா அவர்கள் கருணையுடன் இந்த மனுவை பரிசீலித்து , நான்கு நாட்களும் போட்டி நடத்த உத்தரவிடுமாறு பணிவுடன்கேட்டுக்கொள்கிறேன்.
0 comments:
Post a Comment