பெரம்பலூர் மாவட்டம், குன்னம் மற்றும் வேப்பந்தட்டை வட்டங்களில் வியாழக்கிழமை (பிப். 6) முதல் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட உள்ளன.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
2013-14-ம் ஆண்டு பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் சார்பில் பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டத்திற்குள்பட்ட ஒகளுர், நன்னை ஆகிய கிராமங்களிலும், வேப்பந்தட்டை வட்டத்திற்குட்பட்ட இனாம் அகரம் கிராமத்திலும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
நெல் கிரேடு "ஏ' குவிண்டால் ஒன்றுக்கு, கொள்முதல் விலையாக ரூ. 1,345, ஊக்கத் தொகையாக ரூ. 70 என, மொத்தம் ரூ. 1,415, பொதுரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு கொள்முதல் விலையாக ரூ. 1,310, ஊக்கத்தொகையாக ரூ. 80 என மொத்தம் ரூ. 1,360 குறைந்தபட்ச ஆதார கொள்முதல் விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
எனவே, பெரம்பலூர் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் அறுவைடையான நெல்லை விற்பனை செய்து விவசாயிகள் பயனடையலாம் என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி-தினமணி.
0 comments:
Post a Comment