அரசு கேபிள் டி.வி.க்கு கூடுதல் கட்டணம் வசூலித்தால் புகார் அளிக்கலாம் என்று பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது மற்றும் அரியலூர் மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) அ. கருப்பசாமி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் தனித்தனியே வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழக அரசின் கேபிள் டி.வி. ஆப்பரேட்டர்கள் அரசு நிர்ணயம் செய்த மாத சந்தா தொகையான ரூ. 70 மட்டுமே சந்தாதாரர்களிடமிருந்து வசூல் செய்வதை உறுதி செய்யும் வகையில், ரசீது புத்தகங்கள் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி நிறுவனத்தின் மூலம் அச்சிடப்பட்டு வழங்கப்பட்டுள்ளன.
எனவே, பிப்ரவரி மாதம் முதல் கேபிள் ஆப்பரேட்டர்கள் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம் அச்சிட்டு வழங்கியுள்ள ரசீது புத்தகத்தை கொண்டு, சந்தாதாரரிடமிருந்து மாதாந்திர சந்தா தொகை வசூலிக்க வேண்டும்.
இந்த நடைமுறையை பின்பற்றாத உள்ளுர் கேபிள் ஆப்பரேட்டர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி நிறுவனத்தின் இணைப்பு
பெற்றுள்ள அனைத்து வாடிக்கையாளர்களும், சந்தா தொகையாக ரூ. 70 மடடும் செலுத்தி ரசீதை பெற்றுக் கொள்ள வேண்டும்.
அரசு நிர்ணயித்துள்ள சந்தா தொகையைவிட, கூடுதலாக வசூல் செய்வது அல்லது உரிய ரசீது வழங்க மறுத்தால், பெரம்பலூர் அரசு கேபிள் டிவி தனி வட்டாட்சியரை 9498002581, அல்லது சென்னை அலுவலகத்தை 044-28221233 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்.
நன்றி-தினமணி.
0 comments:
Post a Comment