Wednesday, 5 February 2014

சென்னை குன்றத்தூரில் திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்ததால் காதலி வீட்டு முன் காதலன் தீக் குளித்து தற்கொலை செய்துக் கொண்டார்.
 இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
 பெரம்பலூர் சின்னகடை வீதியைச் சேர்ந்தவர் இளையராஜா (24). இவர் சென்னை ஆழ்வார்திருநகரில் தங்கியிருந்து, அங்குள்ள பெட்ரோல் பங்க்கில் வேலை செய்து வந்தார். இளையராஜாவும், அந்த பெட்ரோல் அருகே உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்த குன்றத்தூர் அருகே உள்ள தெற்கு மலையம்பாக்கத்தைச் சேர்ந்த சுகன்யாயாவும் (21) காதலித்து வந்தாராம்.
 இதற்கு சுகன்யாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து, கார்த்திக் என்பவருக்கு சுகன்யாவை சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து வைத்தனர். இதற்கிடையே சுகன்யாவின் கணவர் கார்த்திக் ஒரு சாலை விபத்தில் 5 மாதங்களுக்கு முன்பு இறந்தார். இதன் பின்னரும் இளையராஜா, சுகன்யாவை காதலிப்பதாக கூறி வந்தாராம்.
 இதையடுத்து சுகன்யாவின் பெற்றோர் இளையராஜாவுக்கு அவரை திருமணம் செய்து சம்மதம் தெரிவித்தனராம். இதைத் தொடர்ந்து இருவருக்கும் திருமணம் செய்து வைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றன.
 இதனிடையே சுகன்யாவின் நடத்தையின் மீது சந்தேகப்பட்டு இளையராஜா பேசியதாக தெரிகிறது. இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டதாம். மேலும் சுகன்யா, தான் இளையராஜாவை திருமணம் செய்ய முடியாது என கூறிவிட்டாராம்.
 இதனால் மன வெறுப்படைந்த இளையராஜா, செவ்வாய்க்கிழமை இரவு சுகன்யா வீட்டுக்குச் சென்றார். அங்கு சுகன்யாவிடம் சிறிது நேரம் இளையராஜா தகராறு செய்ததாக கூறப்படுகிறது.
 பினனர் சுகன்யா வீட்டு முன் வந்த இளையராஜா, தான் வைத்திருந்த பெட்ரோலை உடல் மீது ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதில் பலத்த காயமடைந்த இளையராஜா, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
 அங்கு அவர் சிறிது இறந்தார். இது குறித்து குன்றத்தூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்

நன்றி-தினமணி.

0 comments:

Post a Comment