Saturday, 19 April 2014

மத்தியில் நிலையான ஆட்சி அமைய தாமரை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்றார் பெரம்பலூர் மக்களவைத் தொகுதி வேட்பாளர் பாரிவேந்தர் (எ) டி.ஆர். பச்சமுத்து.
v.kalathur வ.களத்தூரில் பாரிவேந்தர்.

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை ஒன்றியத்திற்குள்பட்ட அனுக்கூர், அ.குடிக்காடு, வி.ஆர்.எஸ். புரம், வல்லாபுரம், தேவையூர், ரஞ்சன்குடி, மங்கலம், சின்னாறு, எறையூர். நெறிக்குறவர் காலனி, அயன்பேரையூர், தைக்கால், திருவாளந்துறை, அகரம், மில்லத் நகர், வண்ணாரம்பூண்டி, வி.களத்தூர், பசும்பலூர், வெள்ளுவாடி காலனி, காரியானூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் சனிக்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்ட அவர் மேலும் பேசியது:
தமிழகத்தில் அரசு மதுக் கடைகளை அதிகளவில் திறந்து வைத்ததே திராவிடக் கட்சிகளின் சாதனையாகும்.
 மது விற்பனைக்கு இலக்கு நிர்ணயித்து விவசாயிகள், இளைஞர், தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களின் வாழ்வாதாரத்தையும் கெடுத்துவிட்டனர்.
தமிழகத்தில் பாஜக தலைமையில் அமைக்கப்பட்டுள்ள கூட்டணி, சட்டப்பேரவை தேர்தலிலும் தொடரும். திமுக, அதிமுகவுக்கு மாற்று அணி இல்லாமல், அவர்களுக்கே மாறி,மாறி வாக்களித்த வாக்காளர்கள், இந்த தேர்தலில் தாமரை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும்.
மத்தியில் நிலையான, நேர்மையான, ஊழலற்ற ஆட்சி அமையவும், மக்கள் நலத் திட்டங்களை உடனடியாக நிறைவேற்றவும் தாமரை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்றார் அவர்.
தேமுதிக மாவட்டச் செயலர் துரை. காமராஜ், பாமக மாவட்டச் செயலர் செந்தில்குமார், பாஜக மாவட்டத் தலைவர் சி. சந்திரசேகரன், மதிமுக மாவட்டச் செயலர் செ. துரைராஜ், தேமுதிக வேப்பந்தட்டை ஒன்றியச் செயலர் துரை. சிவாஐயப்பன், மாவட்டத் துணைச் செயலர் கங்காதரன், பொதுக்குழு உறுப்பினர் அழகுதுரை, செயற்குழு உறுப்பினர் செல்லப்பிள்ளை, அணி செயலர்கள் இளையராஜா, சிதம்பரம், மாவட்டப் பொருளாளர் சீனி. வெங்கடேசன், மாவட்ட துணைச் செயலர் கண்ணுசாமி, ஐஜேகே மாநில அமைப்பு செயலர் காமராஜ், வழக்குரைஞர் பிரிவு மாநிலச் செயலர் பி. அன்புதுரை உள்பட பலர் பங்கேற்றனர்.

0 comments:

Post a Comment