Sunday, 13 April 2014

திண்டுக்கல், பேகம்பூர் எருமைக்காரன் தெருவில் பழமை வாய்ந்த காளியம்மன் கோவில் உள்ளது. இந்தக் காளியம்மன் கோவிலுக்கு அருகில் விநாயகர் கோவில் ஒன்றும் உள்ளது. சமீபத்தில் விநாயகர் கோவிலுக்காக காளியம்மன் கோவிலுக்கு எதிர்புறம் தனக்கு சொந்தமாக இருக்கும் நிலம் ஒன்றினை தானமாகத் தர பக்தர் ஒருவர் முன்வந்துள்ளார்.அதன் அடிப்படையில் ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் ஏற்கனவே இருந்த மண்ணிலான விநாயகர் சிலையை அகற்றிவிட்டு புதிய கற்சிலையை பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேகம் செய்தனர்.
 policestation
ஆண்டுதோரும் பங்குனி மாதத்தில், காளியம்மன் கோவில் திருவிழா கோலாகலமாக நடப்பது வழக்கம்.இந்தாண்டும் இத்திருவிழா கொண்டாடப்பட்டு வரும் நிலையில், 12.04.2014 அன்று பேகம்பூர் பெரிய பள்ளிவாசல் ஜமாத்தைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்டவர்கள் ஒன்று கூடி விநாயகர் கோவில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள இடம் வக்ப் வாரியத்திற்குச் சொந்தமானது அதனால் உடனடியாக விநாயகர் சிலையை அகற்ற வேண்டும் என்று கூறி திண்டுக்கல் தெற்கு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன் அடிப்படையில் பேச்சுவார்த்தைக்காக இருதரப்பினரையும் போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்தனர். காவல்துறை ஆய்வாளர் பரவாச்சிதேவன், காவல்துறை துணை ஆய்வாளர் சரவணன் மற்றும் காவல்துறை துணை ஆய்வாளர் நசீம்பாஷா முன்னிலையில் இந்தப் பேச்சுவார்த்தை நடந்தது. இந்தப் பேச்சுவார்த்தையில் இந்துக்கள் நிலப் பத்திரங்களை போலீசாரிடம் காட்டி வாதாடியுள்ளனர். ஆனால் இந்த ஆவணங்களை ஏறெடுத்தும் பார்க்காத போலீசார் இஸ்லாமியர்கள் சார்பாகவே பேசி விநாயகர் சிலையை உடனடியாக அகற்ற வேண்டும் என்று உத்தரவிட்டு இந்துக்களை விரட்டியடித்தனர்.

dinidigual protest3
இந்த தகவல் அறிந்த இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்த நகரப் பொறுப்பாளர் திரு.சஞ்சீவி மற்றும் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த திரு.கண்ணன் மற்றும் இந்து முன்னணி பொறுப்பாளர்கள் சிலரும் உடனடியாக காவல் நிலையம் சென்று மீண்டும் ஒரு முறை இஸ்லாமியர்களுடன் அப்பகுதி கவுன்சிலர் மற்றும் தாசில்தார் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்துக்கள் தரப்பு வாதம் எதையும் ஏற்காமல் இஸ்லாமியர்களுக்கு ஆதரவாகவே நடந்து கொண்ட காவல் துறையினரும், அரசு அதிகாரிகளும் உடனடியாக விநாயகர் சிலையை அப்புறப்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டனர். இதற்கு அப்பகுதி வாழ் இந்து மக்கள் சம்மதிக்காமல் எங்கள் கோவிலை விட்டுக் கொடுக்க முடியாது என்று உறுதியுடன் கூறி சாலை மறியலில் ஈடுபட்டனர். பெண்கள் விநாயகர் சிலையை நெருங்க முடியாத வாறு மறித்து நின்று கொண்டனர். இச்சமயத்தில் பயங்கரவாத முஸ்லீம்கள் 200க்கும் மேற்பட்டோர் கையில் கம்புகளுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு கலவரச் சூழலை ஏற்படுத்தினர். அச்சமயத்தில் அங்கு கூடியிருந்த பயங்கரவாத முஸ்லீம்கள் திரு.சஞ்சீவி மற்றும் இந்து முன்னணி அமைப்பைச் சார்ந்தவர்களிடம் உங்கள் அனைவரையும் கழுத்தை அறுத்துக் கொலை செய்யாமல் விடமாட்டோம் என்று மிரட்டியதாக திரு. சஞ்சீவி கூறினார்.
 dinidigual protest1
பின்னர், உடனடியாக பெண் போலீசார் வரவழைக்கப்பட்டு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பெண்களை அடித்து உதைத்து கூட்டத்தை கலையச் செய்து விநாயகர் சிலையை அவ்விடத்தில் இருந்து பெயர்த்து எடுத்துச் சென்றுவிட்டனர். மேலும், இச்சம்பவம் தொடர்பாக 45 பேரை கைது செய்து அவர்கள் மீது வழக்கும் தொடுத்து நிபந்தனை ஜாமீனில் இரவு 11:00 மணிக்கு விடுவித்தனர். தற்சமயம் விநாயகர் சிலை போலீசார் வசம் உள்ளது.

இந்துக்கள் தங்களுக்கு சொந்தமான இடத்தில் அவர்கள் வழிபடுவதற்காக ஒரு கோவிலை புனரமைத்ததைக் கூட தாங்கிக் கொள்ள முடியாத பயங்கரவாத இஸ்லாமியர்கள் காவல்துறையினரைத் தங்கள் வசப்படுத்தி இந்த அராஜகத்தை நிகழ்த்தியுள்ளனர். இந்த சம்பவம் பயங்கரவாத சக்திகள் நம் நாட்டில் எந்தளவிற்கு பலம் பெற்றுள்ளது என்பதையே காட்டுகிறது. நடுநிலைத் தன்மையுடன் செயல்பட வேண்டிய காவல் துறையும், அரசு அதிகாரிகளும் அராஜகத்திற்குத் துணைப்போய் இந்துக்களுக்கு அநீதி இழைத்துள்ளது மிகவும் வருத்தத்திற்குரியது. கோவிலை விட்டுக்கொடுக்கக்கூடாது என்ற உறுதியுடன் போலீசார் மற்றும் பயங்கரவாத இஸ்லாமியர்களின் மிரட்டல்களை சிறிதும் பொருட்படுத்தாமல் போராடிய அப்பகுதி வாழ் இந்து மக்களுக்கு வேத விஞ்ஞான ஆராய்ச்சி மையம் தனது பாராட்டினைத் தெரிவித்துக் கொள்கிறது. 

நன்றி-http://vsrc.in/%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/item/230-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%BF/itemid-174?fb_action_ids=298002200355367&fb_action_types=og.likes

2 comments:

  1. வி.களத்தூர் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் உள்ள வக்பு சொத்துக்களை கோவில் என்ற பெயரில் ஆக்கிரமிப்பு செய்வதே இந்த காவி தீவிரவாதிகளின் பொலப்பா போச்சி ஏன்டா உங்களுக்கு வெக்கம் மானம் சூடு சொரணை இதுல எதுமே இல்லையட. அடுத்தவர்களின் சொத்தை அடுத்தவர்களின் வைத்தேரிச்ச்சலை வாங்கிக்கொண்டுதான் கோவில் கட்டவேண்டும் என்று உங்கள் மதம் போதிக்கிறதோ அல்லது அப்படிப்பட்ட கோவிலில் நீங்கள் வழிபாடு செய்தல் தான் உங்கள் வேண்டுதலை ஏற்று கொள்வேன் என்று உங்களின் கடவுள் கூறியது.

    உங்கள் மனதை புண்படுத்த வேண்டும் உங்கள் மதத்தை இழிவு படுத்த வேண்டும் என்பது எனது நோக்கமில்லை ஒரு பொது வலைத்தளம் நடத்தும் பொது அடுத்தவர்களின் மனதையும் ஒரு குறிப்பிட்ட மதத்தையும் குறிப்பிட்டு இழிவு படுத்துவதை தவிர்த்துகொள்ளுங்கள். ஏனெனில் உங்கள் மதமும் அன்பைத்தான் போதிக்கிறது என்பதை மறந்துவிடாதிர்கள். உங்களின் இந்த வலைதள சேவை என்றும் தொடரட்டும் யாரையும் புண்படுத்தாவண்ணம்.

    மனைதை புண்படுத்தும் கருத்தை வெளியிட்டதற்கு மன்னிக்கவும்.

    ReplyDelete
    Replies
    1. குறிப்பிட்ட நிலம் யாருக்கு சொந்தம் என்பது நில உரிமைக்கான ஆவணங்கள் வத்திருப்பவரையே சாரும். அந்தவகையில் இங்கு பிரச்சினைக்குரிய நிலம் தன்யாருக்கு சொந்தமானது என அரசு ஆவணங்கள் கூறும்போது அதை மறுக்க காவல்துறைக்கு யார் அதிகாரம் கொடுத்தது.
      எங்கள் வலைதளத்தின் நோக்கம் யாரையும் புண்படுத்துவது என்ற நோக்கம் கிடையாது. இந்துக்கள் எங்கு பாதிக்கப்பட்டாலும் அதற்கு எதிராக நியாயமான முறையில் குரல் கொடுப்பதே எங்கள் நோக்கம்.

      Delete