வேலூர் கஸ்பா பகுதியை சேர்ந்தவர்
பூங்காவனம். இவருக்கு 5 மகள்கள். இவரது இரண்டாவது மகள் விஜயகுமாரி. இவர் மன
அழுத்த நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றிருந்தார். விஜயகுமாரி ஷீ
கம்பெனியில் வேலைப் பார்த்து வந்துள்ளார். இவருடன் வேலை பார்த்த தோழியின்
மூலம் சர்ச் தொடர்பு கிடைக்கப்பெற்று அடிக்கடி சர்ச் சென்றுவந்துள்ளார்.
இது அவரது அம்மாவிற்கு தெரியவந்த போது அவர்கள் விஜயகுமாரியை
கண்டித்துள்ளார். இதன் பிறகு விஜயகுமாரி தன் வீட்டிற்கு தெரியாமல்
போய்வருவதை வழக்கமாகிக் கொண்டுள்ளார். இந்நிலையில் கடந்த மார்ச் 12.03.2014
அன்று வேலைக்குச்செல்வதாக கூறிச் சென்ற விஜயகுமாரி வீடு திரும்பவில்லை. பல
இடங்களில் தேடி அலைந்தபெற்றோர்கள் விஜயகுமாரிக்கு உள்ள சர்ச் தொடர்பால்
அங்கும் சென்று விசாரித்துள்ளனர். அப்பொழுது சர்ச்சில் உள்ளவர்கள்
விஜயகுமாரியை சென்னை தாம்பரம் பெந்தகோஸ்தே சபை சர்ச்க்கு அனுப்பியுள்ளோம், 2
நாட்கள் கழித்து வந்து விடுவார் என்று கூறியுள்ளனர். ஆனால் 13 நாட்கள்
கழித்தே விஜயகுமாரி வேலூர் திரும்பியுள்ளார். வேலூர் வந்தபின்பும்
சர்ச்சிலியே இருந்துள்ளார். குடும்பத்தினர் சென்று அழைத்தும் விஜயகுமாரி வர
மறுத்துவிட்டார். சர்ச் நிர்வாகத்தினரும் அராஜகப்போக்குடன் விஜயகுமாரியை
வீட்டிற்கு அனுப்ப மறுத்துவிட்டனர்.
இச்சூழ்நிலையில் விஜயகுமாரியின் பெற்றோர்
காவல்நிலையத்தில் புகார் கொடுக்கச் சென்றுள்ளனர். அங்கு விஜயகுமாரியின்
குடும்பத்தினரை அலட்சியப்படுத்தி அதே சமயத்தில் கிறிஸ்தவர்களை மிகவும்
மரியாதையாக நடத்தி அவர்கள் சார்பாக காவல் துறையினர் பேசியதாகவும்
விஜயகுமாரியின் சகோதரி நம்மிடையே கூறினார்கள். காவல்நிலையத்தில்
விஜயகுமாரியின் குடும்பத்தினர் சொல்வதற்கு செவி மடுக்காமல் “விஜயகுமாரி
மேஜர் ஆனதால் அவர்களுக்கு முடிவு எடுக்கும் உரிமை உள்ளது” என்ற பாதிரியின்
வாதத்தை ஏற்று விஜயகுமாரியை மீண்டும் கிறிஸ்தவர்களுடன் அனுப்பி விட்டனர்.
இச்சம்பவம் அறிந்த இந்து முன்னணி கோட்ட பொறுப்பாளர் திரு. மகேஷ்
காவல்நிலையம் வந்து விஜயகுமாரியின் குடும்பத்தினருக்காக வாதிட்டுள்ளார்.
பிரச்சினையை சமாளிக்கவேண்டும் என்பதற்காக புகார் மனு மீது பெண்ணை காணவில்லை
என்று ஒரு வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் அனுப்பிவிட்டனர்.
போலீசாரின் இந்த நடவடிக்கையில் திருப்தி இல்லாததால் சர்ச் முற்றுகை
போராட்டத்தை நடத்துவது என்ற முடிவுக்கு வந்தாக என்று திரு. மகேஷ் கூறினார்.
26.03.2014 அன்று இந்து முன்னணி அமைப்பினர், விஜயகுமாரியின் குடும்பத்தினருடன் சேர்ந்து சர்ச் முற்றுகை போராட்டம் நடத்தினர். பிரச்சினை தீவிரமடைவதை கண்ட காவல்துறை ஆய்வாளர், விஜயகுமாரியை 26.03.2014 மதியத்திற்குள் கோர்ட்டில் ஆஜர்படுத்துவதாக வாக்குறுதியளித்து போராட்டத்தை கைவிடுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். இப்போராட்டத்தின் போது பெந்தகோஸ்தே சர்ச்சின் ஊழியரான ஜேக்கப் “நீங்கள் என்ன போராட்டம் நடத்தினாலும், யாரிடம் சென்று புகார் கொடுத்தாலும் உங்களால் விஜயகுமாரியை இங்கிருந்து அழைத்து செல்ல முடியாது. இதே போல், இங்கு வந்த யாரும் இதுவரை திரும்பி சென்றதில்லை” என்று கூறி விஜயகுமாரியின் குடும்பத்தினரை பயமுறுத்தியதாக விஜயகுமாரியின் சகோதரி கூறினார்.
இதற்குள் விஜயகுமாரியை கிறிஸ்தவர்கள்
சென்னைக்கு அனுப்பிவிட்டிருந்தனர். இதனால் காவல்துறையினரால் அவர்கள்
கூறியபடி மதியத்திற்குள் கோர்ட்டில் ஆஜர்படுத்த முடியவில்லை.
காவல்துறையினர் ஒரு குழுவை சென்னைக்கு அனுப்பி விஜயகுமாரியை வேலூருக்கு
அழைத்து வந்து 26.03.2014 இரவு JM2 வது மாஜிஸ்ரேட் திரு.மும்மூர்த்தி
அவர்களின் இல்லத்தில் ஆஜர்படுத்தினர். மாஜிஸ்ரேட் விஜயகுமாரியை அரசு
காப்பகத்தில் வைத்து பாதுகாத்து 27.03.2014 அன்று கோர்ட்டில் ஆஜர்படுத்த
உத்தரவிட்டார். ஆனால் விஜயகுமாரியை அரசு காப்பகத்திற்கு அனுப்பாமல்
காவல்துறையினரின் உதவியுடன் கிறிஸ்தவர்கள் நீதிபதியின் உத்தரவையும்
பொருட்படுத்தாமல் சர்ச்சுக்கே அழைத்துச் சென்றதாக என்று திரு. மகேஷ்
கூறினார்.
27.03.2014 அன்று விஜயகுமாரி JM2 வது
மாஜிஸ்டிரேட் திரு.மும்மூர்த்தி அவர்கள் முன்னிலையில் கோர்ட்டில்
ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவர் முழுவதுமாக மதம் மாற்றப்பட்டதற்கு
அடையாளமாக வெள்ளை சேலையில் கைகளில் பைபிளுடன் வந்தார். விஜயகுமாரியின்
குடும்பத்தினர் புகார் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தனர். அதில் விஜயகுமாரி
மனநிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற மருத்துவச் சான்றுகளை சமர்ப்பித்து,
விஜயகுமாரியின் உடல் மற்றும் மன நிலை கருதி அவரை தங்களுடன் அனுப்ப
வேண்டியதாக திரு. மகேஷ் கூறினார். நீதிபதி விஜயகுமாரியின் குடும்பத்தினர்
கோரிக்கைகளை புறந்தள்ளி, விஜயகுமாரியிடம் நான்கைந்து கேள்விகள் கேட்டு
விட்டு அப்பெண் மனநிலை பாதிக்கப்பட்டவர் போல் தெரியவில்லை என்பதால்
அப்பெண்ணின் முடிவே இறுதியானது என்று சொல்லி விஜயகுமாரியின் விருப்பதை
கேட்டார். அதற்கு விஜயகுமாரி தான் மதம் மாறிவிட்டதாகவும் மீண்டும் தன்
பெற்றோருடன் செல்ல விருப்பமில்லை என்று சொன்னவுடன் அதை விஜயகுமாரியின்
விருப்பமாக பதிவு செய்துவிட்டு, குடும்பத்தினர் தரப்பு மனுவை தள்ளுபடி
செய்தார்.
விஜயகுமாரியின் பெற்றோர்கள்
விஜயகுமாரியின் காலில் விழுந்து கெஞ்சி கதறி அழுதும், கிறிஸ்தவ
சர்ச்சுக்குச் செல்லும் முடிவில் விஜயகுமாரி பிடிவாதமாக இருந்தார் என்றார்
விஜயகுமாரியின் சகோதரி.
இப்படி, அப்பாவிப் பெண்களின் மனநிலையை
பாதிப்படையச் செய்து, அதையே சாதகமாக்கி மதமாற்றும் செய்யும் அளவுக்கு இந்த
கிறிஸ்தவர்கள் இறங்கியிருப்பது இந்த நாட்டிற்கும், நம் சமயத்திற்கும்,
பண்பாட்டிற்கும் பேராபத்தை விளைவிக்கும். எனவே மதமாற்றத் தடைச் சட்டத்தை
அரசு விரைவில் இயற்றி, இந்தப் பேராபத்திலிருந்து இந்த நாட்டைக் காப்பாற்ற
வேண்டும்.
0 comments:
Post a Comment