பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு அருகே ரஞ்சன்குடி என்ற பகுதியில்
சாலையோரத்தில் வேனை நிறுத்திவிட்டு இறங்கிய கும்பல் அங்கு மேய்ந்து
கொண்டிருந்த 2 ஆடுகளை வேனில் தூக்கிபோட்டனர். பிறகு அங்கிருந்து புறப்பட்டு
சென்றனர்.
இதை கண்ட சிலர் நெடுஞ்சாலை போக்குவரத்து பாதுகாப்பு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவலின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் தர்மராஜ், மற்றும் போலீசார் வாகனத்தில் விரைந்து சென்று திருமாந்துறை அருகே டோல்கேட்டில் வைத்து வேனை மடக்கி பிடித்தனர். வேனில் இருந்த ஆடுகளை மீட்ட போலீசார் கும்பல் 4 பேரை பிடித்து மங்களமேடு போலீசில் ஒப்படைத்தனர்.
போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தியபோது சென்னை கொடுங்கையூரைச் சேர்ந்த பாபு (வயது 20) ராமநாதபுரம் மாவட்டச் சேர்ந்த தினேஷ், தஞ்சை, வல்லத்தை சேர்ந்த கார்த்தி (28) மணிகண்டன் (23) என்று தெரியவந்தது.
அவர்களை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தியதில் மது போதையில் ஆடுகளை கடத்தி சென்றது தெரிய வந்தது.
நன்றி-மாலைமலர்.

0 comments:
Post a Comment