Saturday, 1 March 2014

பெரம்பலூர், :  இன்று (1ம்தேதி) முதல் ஒருங்கிணைந்த வேளாண் மை அலுவலகக் கட்டிடத்தில் மண்ஆய்வுக் கூடங்கள் செயல்படும். உரிய ஆய்வுக்கட்டணத்தை செலுத்தி விவசாயிகள் பயன்பெறலாம் என வேளாண் இணைஇயக்குநர் அழகிரிசாமி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
பெரம்பலூர் மாவட்டத்தில் வேளாண்மை துறையின் சார்பாக மாவட்ட அளவில் ஒருங்கிணைந்த வேளாண்மை அலுவலக கட்டிடம், கலெக்டர் அலுவலகப் பெருந்திட்ட வளாகத்தின் அருகே புதிதாகக் கட்டிமுடிக்கப்பட்டு, தமிழக முதல்வரால் காணொளி காட்சி மூலம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
 இந்த வளாகத்தில் வேளாண்மை மற்றும் அதனைச்சார்ந்த துறைகளான தோட்டக்கலைத்துறை, வேளாண் வணிகத்துறை, விதைச் சான்றுத்துறை, வேளாண் பொறியியல் துறை, மாவட்ட நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை மற்றும் மண் ஆய்வுக்கூடங்கள் ஆகியவை செயல் பட உள்ளது.
பெரம்பலூர் மாவட்ட விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு விவசாயிகள் மண் மற்றும் பாசனநீரை உடனுக்குடன் ஆய்வு செய்து, ஆய்வு முடிவுகளை வழங்கும் வகையில் மண் ஆய்வுக்கூடம் மற்றும் நடமாடும் மண்ஆய்வுக்கூடம் ஒருங்கிணைந்த வேளாண்மை அலுவலகக் கட்டிடத்தின் கீழ்தளத்தில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
எனவே, பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் ம்தேதி முதல் கலெக்டர் அலுவலகத்தின் தென்புறமுள்ள ஒருங்கிணைந்த வேளாண் மை அலுவலகக் கட்டிடத்தி லுள்ள மண்ஆய்வுக்கூடம் மற்றும் நடமாடும் மண் ஆய்வுக்கூடத்தில் தங்கள் மண் மற்றும் பாசனநீரை உரிய ஆய்வுக்கட்டணம் செலுத்தி ஆய்வுமுடிவுகளை பெற்றுக் கொள்ளலாம்.
மேலும் வேளாண்மை மற்றும் அதனைச்சார்ந்த அனைத்து துறைகளும் ஒரே வளாகத்தில் செயல் பட இருப்பதால், விவசாயிகள் விவசாயம்  தொடர் பாக தங்களுக்குத் தேவை யான அனைத்துதுறை மானியத் திட்டங்களை பெறும்வகையில் மண் ஆய்வுக் கூடம் மற்றும் நடமாடும் மண்ஆய்வுக்கூடம் இந்த ஒருங்கிணைந்த வேளாண்மைத்துறை கட்டிடத்தில் செயல்பட உள்ளது. மாவட்டத்திலுள்ள அனைத்து விவசாயிகளும் இதனைப் பயன்படுத்தி பயனடையலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

நன்றி-தினகரன்.

0 comments:

Post a Comment