பெரம்பலூர், : மக்களவைத் தேர்தல் எதிரொலியாக பெரம்பலூர் மாவட்டத் தில் துணை
வட்டார வளர்ச்சி அலுவலர்கள் 20 பேர் அதிரடியாக தொகுதி விட்டு தொகுதி
இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் தாமதமின்றி பணியேற்குமாறு
கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
மக்களவை, சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடை பெற இருந்தாலே, மாவட்ட அளவி லான அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில், மக்களவைத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதால், பெரம்பலூர் மாவட்டத்தில் டிஆர்ஓ, பிஆர்ஓ, கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் உள்ளிட்ட பலர் கடந்த சில தினங்களுக்கு முன்பாக இடமாற்றம் செய்யப்பட்டனர்.
இந்நிலையில், ஊரக வளர்ச்சித் துறையில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் நிலையில் இருந்த 20 பேரை கலெக்டர் தரேஸ் அஹமது அதிரடியாக இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
இதன் படி, 2014 மக்களவைத் தேர்தலுக்காக சொந்த ஊர் உள்ளடங்கிய சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட வட்டாரங்களில் பணிபுரியும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வேறு தொகுதிகளில் உள்ள வட்டாரங்களுக்கு பணிமாறுதல் செய்து கலெக்டர் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:
ஆலத்தூர் ஒன்றியத்தில் தணிக்கை துணை வட்டார வளர்ச்சி அலுவலராக இருந்த ஆலயமணி, வேப்பந்தட்டை ஒன்றியத்துக்கு சஉதி பணிக்கு மாற்றப்பட்டுள்ளார். வேப்பந்தட்டை ஒன்றியத்தில் ஏற்கனவே அப் பணியில் இருந்த அசோகன், வேப்பூர் ஒன்றியத்துக்கு ஆதிதிராவிடர் நலப் பணிக்கு மாற்றப்பட்டுள்ளார்.
ஏற்கனவே இப் பணியில் இருந்த செல்வமணியன் ஆலத்தூர் ஒன்றியத்துக்கு திட்டப் பணிக்கு மாற்றப்பட்டு ள்ளார். முன்னர் இங்கு பணியில் இருந்த தயாளன், வேப்பந்தட்டை ஒன்றிய தணிக்கை பணிக்கு மாற்றப்பட்டுள்ளார். முன்னர் இப்பணியில் இருந்த சம்பத்குமார், ஆலத்தூர் ஒன்றிய தணிக்கை பணிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இதே போல், பெரம்பலூர் ஒன்றிய சிறுசேமிப்பு திட்ட துணை வட்டார வளர்ச்சி அலுவலர் நடராஜன் ஆலத்தூர் ஒன்றியத்துக்கு தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப் பணிக்கு பணிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே இங்கு பணியில் இருந்த நடராஜன், வேப்பூர் ஒன்றிய நிர்வாகப் பணிக்கு மாற்றப்பட்டுள்ளார். ஏற்கனவே இப் பணியில் இருந்த இளங்கோவன், பெரம்பலூர் ஒன்றிய நிர்வாகப் பணிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். முன்னர் இங்கு பணியிலிருந்த சின்னப்பையன் வேப்பந்தட்டை ஒன்றிய திட்டப் பணிக்கு மாற்றப்பட்டுள்ளார். ஏற்கனவே இங்கு பணியில் இருந்த செந்தில்குமார், வேப்பூர் ஒன்றிய சிறுசேமிப்பு திட்டப் பணிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இதனிடையே, பெரம்பலூர் ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன், பெரம்பலூர் மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் நிர்வாகப் பணிக்கு மாற்றப்பட்டுள்ளார். ஏற்கனவே இங்கு பணியில் இருந்த செல்வக்குமார், வேப்பூர் ஒன்றியத்துக்கு தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப் பணிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். முனனர் இப்பணியில் இருந்த சரவணன் பெரம்பலூர் ஒன்றிய தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப் பணிக்கு மாற்றப்பட்டுள்ளார். ஏற்கனவே இங்கு பணியில் இருந்த பூங்கொடி வேப்பூர் ஒன்றிய திட்டப் பணிக்கும், ஏற்கனவே இப்பதவியில் இருந்த ஸ்டீபன் அந்தோணிசாமி, வேப்பூர் ஒன்றியத்துக்கு சஉதி பணிக் கும், ஏற்கனவே இங்கு பணியில் இருந்த முரளிதரன், வேப்பந்தட்டை ஒன்றியத்தில் காலியாக உள்ள ஆதிதிராவிடர் நலப் பணியிடத்திற்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ள னர்.
வேப்பூர் ஒன்றியத்தில் ஊராட்சி வளர்ச்சிப் பணிகளை கவனித்து வந்த மோகன், ஆலத்தூர் ஒன்றியத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். முன்னர் இப்பணியில் இருந்த மரியதாஸ் வேப்பூர் ஒன்றியத்துக்கு மாற்றப்பட்டுள்ளார்.
வேப்பந்தட்டை ஒன்றியத்தில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப் பணியில் இருந்த ரங்கநாதன், வேப்பூர் ஒன்றியத்தில் காலியாக உள்ள பணியிடத்துக்கும், வேப்பந்தட்டை ஒன்றியத்தில் சிறுசேமிப்பு திட்டப் பணியில் இருந்த ராமாயி, மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் கணக்குகள் பணியிடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு மாறுதல் செய்யப்பட்ட இவர்கள் அனைவரும் உடனடியாக அந்தந்தப் பணியிடங்களில் இருந்து விடுவிக்கப்பட்டு, அவர்களுக்கான பணியிடங்களில் உடனடியாக பணியேற்க வேண்டும் என்றும் அந்த உத்தரவில் அறிவுறுத்தியுள்ளார் கலெக்டர்.
நன்றி-தினகரன்.

0 comments:
Post a Comment