Saturday, 1 March 2014

 குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் மற்றும் அவர்களுக்குக்கான சிறப்பு தொலைபேசி உதவி அழைப்பு எண் 1௦98. இந்த எண்ணில் இருபத்துநான்கு மணிநேரமும் குழந்தைகள் தொடர்பான புகார்கள் தெரிவிக்கலாம். இதுதொடர்பான விழிப்புணர்வு முகாம் குன்னத்தில் சமீபத்தில் நடைபெற்றது.

குன்னம், : பெரம்பலூர் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு மற்றும் சைல்டு லைன் 1098 (அனைத்து மகளிர் காவல்நிலையம்) மூலம் பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி யில் குழந்தைகள் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் குழந்தைகள் என்பவர்கள் எவர்கள்? 18 வயதிற்குட்பட்ட குழந்தைகள் சந்திக்கின்ற பிரச்சனைகள், குழந்தை திருமணம், பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் 2012, இன்னும் பிற குழந்தை பாதுகாப்புச் சட்டங்கள், குழந்தைகள் உரிமை கள் மற்றும் பாதுகாப்பு, குழந்தைகளுக்கான இலவச தொலைபேசி அழைப்பு சைல்டு லைன் 1098 ஆகியன குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மேலும் குழந்தை திருமணம் தொடர்பான விழிப்புணர்வு குறும்படம் மாணவிகளுக்கு காண்பிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு அனைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் ரஞ்சனா, மாவட்ட சமூகநல அலுவலர் பேச்சியம்மாள், பள்ளி தலைமையாசிரியை ப்ரியா, மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகின் பாதுகாப்பு அலுவலர் விமலா, ஆற்றுப்படுத்துநர் சாந்தி, சமூகப்பணியாளர் ரேகா, புறத்தொடர்பு பணியாளர் அனுரேகா, குன்னம் கிராம சுகாதார செவிலியர் ஆர்த்தி மற்றும் பள்ளி மாணவிகள், ஆசிரியர்களும் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நன்றி-தினகரன்.

0 comments:

Post a Comment