Sunday, 23 February 2014

சென்னை முத்தயால்பேட்டை பகுதியில் அப்பாவி இந்துப்பெண்ணை முஸ்லீம்கள் வீதியில் மானபங்கம் செய்தனர். இந்த அப்பாவிப் பெண்ணின் பாதுகாப்புக் கோரி, இந்து முன்னணி மாநகரச் செயலாளர் திரு.இளங்கோ காவல் நிலையத்திற்குச் சென்றார். காவல் நிலையத்தில் புகார் கொடுக்கச் சென்றவர் மீதும் அவர் கார் மீதும் காவல்நிலையத்தின் வாசலில் காவலர்கள் முன்னிலையில் முஸ்லீம்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

சமீபத்தில், 02/02/2014 அன்று இராமநாதபுரத்தில் கலெக்டர் அலுவலகம் முன் உள்ள காவல் நிலையத்திற்குள் புகுந்து முஸ்லீம்கள் தாக்குதல் நடத்தினர். இப்படி, காவல் நிலையங்களும், இந்து அமைப்புக்களின் பிரதிநிதிகளும் முஸ்லீம் தீவிரவாதிகளால் தாக்கப்படுவது தமிழ்நாட்டில் வாடிக்கையாகிவிட்டது.

இந்தத் தாக்குதலைக் கண்டித்து முத்தையால் பேட்டை, சௌக்கார்பேட்டை, பிராட்வே பகுதிகளில் பந்த் நடத்த இந்து அமைப்புக்கள் அழைப்புவிடுத்துள்ளன.தமிழகத்தைப் படிப்படியாக்க் காஷ்மீராக மாற்றிவரும் இஸ்லாமிய பயங்கரவாதத்தை எதிர்த்து, இந்தப் பகுதிவாழ் மக்கள் இந்த பந்தில் முழுமையாகப் பங்கெடுத்து ஆதரவு தரவேண்டுமென்று வேத விஞ்ஞான ஆராய்ச்சி மையம் வேண்டுகிறது. இந்தத் தாக்குதலை கண்டித்தும், அனைத்து குற்றவாளிகளையும் கைது செய்யக் கோரியும் இப்பகுதி மக்கள் அரசை வற்புறுத்தி ஜனநாயக முறையில் பல்வேறு போராட்டங்களை நடத்த வேண்டுகிறோம்.

இந்தக் கொலைவெறித் தாக்குதல் பற்றி திரு.இளங்கோ அவர்கள் நமக்கு அளித்த பேட்டி:
மதியம் 3 மணியளவில் ஒரு மார்வாடி சமூகப் பெண்மணி வேலைக்குச் சென்றுவிட்டுத் தனியாக ரோட்டில் நடந்து போய்கொண்டிருந்தார். அப்போது அந்தப் பகுதியிலிருக்கும் முஸ்லிம் இளைஞர்கள் அந்தப் பெண்மணியை மானபங்கப் படுத்திவிடுகிறார்கள். அவர்களிடமிருந்து தப்பித்துத் தன் வீட்டிற்குச் சென்ற அந்தப் பெண், தன் சகோதரரிடம் நடந்ததைச் சொல்கிறார். உடனே அந்தச் சகோதரர் வந்து, “யார் நீங்கள்? எதற்காக இப்படிச் செய்தீர்கள்?” என்று கேட்டதற்கு, அவரை 30, 40 பேர் சேர்ந்து அடித்து அவர் மண்டையை உடைத்து விடுகிறார்கள். இப்படிக் காயம் அடைந்தவுடன் அவரை அழைத்துக்கொண்டு மருத்தவமனைக்குச் செல்கிறார்கள். தாக்கப்பட்டு காயமடைந்த இளைஞரின் உறவினர்களும் மற்றும் அவர் வசிக்கும் பகுதியைச் சேர்ந்தவர்களும் கூடி, காவல் நிலையத்திற்குச் சென்று புகார் மனு அளிக்கிறார்கள். புகார் மனு அளித்தவுடன் காவல்துறை ஷாஜஹான் என்பவரைக் கைது செய்து கூட்டிக் கொண்டு வருகிறார்கள். உடனேயே, கைது விவரம் தெரிந்த தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், தமிழ்நாடு தௌஹீத் ஜமாத் மற்றும் வேறு சில அமைப்புகளைச் சார்ந்தவர்கள், கூட்டமாக காவல்நிலையம் முன்பாக வந்து “கைது பண்ணியவர் மேல் நடவடிக்கை எடுக்கக் கூடாது. அவரை ரிமாண்ட் செய்யக்கூடாது” என்று முற்றுகைப் போராட்டம் நடத்துவதற்குத் தயாராக நிற்கிறார்கள்.

இந்தச் சமயத்தில் இந்து முன்னணியினர்கள் மற்றும் பகுதிவாழ் இந்துப் பொதுமக்கள், வியாபாரிகள் அனைவரும் காவல்நிலையத்திற்குச் சென்றனர். நானும் இந்தத் தகவலறிந்து காரில் சம்பவம் நடந்த இடத்திற்குச் சென்றேன். காவல்நிலையம் முன்பாக சென்று என்னுடைய காரை நிறுத்தி அதிலிருந்து இறங்கும்போது, பின்பக்கம் இருந்து என் காரைத் தாக்குகிறார்கள். இன்னும் இரண்டு நாட்கள் அவகாசம் அதற்குள் இந்தக் காரை எரிப்போம். உள்ளே ஆளோடு வைத்து எரிப்போம் என்று சொல்லி விட்டு அடிக்கிறார்கள். போலீஸ் எல்லாம் சுற்றி நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். அதற்குப் பிறகு காரை அங்கிருந்து எடுத்து சென்றார் என் ஒட்டுனர்.

இது நடந்த பிறகு, அங்கு கூடியிருந்த நம் மக்கள் இது சம்பந்தமாகக் கோஷம் எழுப்பிக் கொண்டிருந்தார்கள். அப்போது அங்கே வந்த JC (Joint Commissioner) என்ன சொல்கிறார் என்றால், “நடவடிக்கை எடுக்கிறேன் நீங்கள் அமைதியாக்க் கிளம்பிச் செல்லுங்கள்” என்று கூறுகிறார். நாம் அப்பகுதி மக்களிடம் பேசி அங்கிருந்து அனுப்புவோம் என்று அவர்களை நெருங்கும் சமயத்தில், “அல்லாஜிந்தாபாத், பாகிஸ்தான் ஜிந்தாபாத்” என்று கோஷம் போட்டுக்கொண்டு இருந்தார்கள் முஸ்லிம்கள். காவல்துறையினர் அவர்களை எதுவும் சொல்லாமல், நம்மிடம் வந்து, “நீங்கள் செல்லுங்கள்” என்று எங்களைத் துரத்துகிறார்கள். சரி நாம் கூட்டத்தை கலைந்து போகச் சொல்லாம் என்று முயற்சிக்கையில் நம் இந்து சகோதரர்கள் அங்கே நிறுத்தி வைத்து இருந்த தங்களுடைய இரு சக்கர மோட்டார் வாகனத்தை எடுக்கச் சென்றபோது, அந்தப் பகுதியில் இருந்த முஸ்லிம்கள் அவர்களை அடிக்கிறார்கள். ரோட்டில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை எடுக்கச் சென்ற நம் இந்து சகோதரர்களை மடக்கிப் பிடித்து, அடித்து, சட்டையைக் கிழித்து, தடியடி நடத்துகிறது 40 50 பேர் சேர்ந்த கும்பல். இதெல்லாம் நடந்த பிறகு நாம் திரும்பவும் போலீஸ்காரர்களிடம் பேசுகிறோம். நாங்கள் பாதுகாப்பு தருகிறோம் என்று சொல்லி நம்மைச் சமாதனப்படுத்துகிறார்கள்.

பிறகு நம் அமைப்பைச் சேர்ந்தவர்களையும் பொது மக்களையும் கலைந்து போகச் சொல்லி அனுப்பி விட்டு, போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்துள்ளோம். இதையெல்லாம் கண்டித்து நாளை (24/02/2014) பிராட்வே, முத்தியால்பேட்டை, சவுகார்ப்பேட்டை ஆகிய பகுதிகளில் இந்து முன்னணி சார்பில் பந்த் அறிவித்துள்ளோம். இவர்கள் மீது நடவடிக்கை எடுத்து அனைத்து குற்றவாளிகளும் கைது செய்யப்படவேண்டும். இவ்வாறு அவர் நம்மிடையே தெரிவித்தார். 

நன்றி-VSRC

0 comments:

Post a Comment