வடமாநில ஆங்கில செய்தி தொலைக்காட்சியான, என்.டி.டி.வி., லோக்சபா தேர்தல் முடிவுகள் குறித்த கருத்துக்கணிப்பை வெளியிட்டுள்ளது. இதில், பா.ஜ., இதுவரை இல்லாத அளவு, அதிக
இடங்களை கைப்பற்றி, தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கும் என கூறப்பட்டுள்ளது.
கருத்துக் கணிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:லோக்சபா தேர்தலில் பா.ஜ., 214 இடங்களில் வெற்றி பெறும். பா.ஜ., தலைமையிலான, தே.ஜ., கூட்டணி, 259 இடங்களில் வெற்றி பெறும். உத்தர பிரதேசத்தில் உள்ள, 80 தொகுதிகளில் அதிகபட்சமாக, பா.ஜ., கூட்டணி, 53 இடங்களை கைப்பற்றும். மகாராஷ்டிராவில், 36 இடங்களிலும், மத்திய பிரதேசத்தில், 25 இடங்களிலும் பா.ஜ., கூட்டணி வெற்றி பெறும்.பா.ஜ., பிரதமர் வேட்பாளர், நரேந்திர மோடியின் குஜராத் மாநிலத்தில், பா.ஜ., 22 இடங்களில் வெற்றி பெறும். பீகார், ராஜஸ்தானில், தலா, 21; கர்நாடகாவில், 16; டில்லியில், நான்கு இடங்களையும் பா.ஜ., கைப்பற்றும்.
காங்கிரசின் கோட்டையாக திகழும் அசாமில், பா.ஜ.,வுக்கு, நான்கு இடங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.இந்த எண்ணிக்கை, மத்தியில், ஆட்சி அமைக்க தேவையான, 272 இடங்களுக்கு, வெறும், 13 இடங்கள் மட்டுமே குறைவாக இருப்பதால், மாநில கட்சிகளின் துணையுடன், மத்தியில் பா.ஜ., ஆட்சி அமைப்பதற்கான சூழல் உருவாகும்.மேற்கு வங்க முதல்வர், மம்தா பானர்ஜியின் திரிணமுல் காங்., கட்சி, 28 இடங்களிலும், தமிழக முதல்வர் ஜெயலிலாதாவின் அ.தி.மு.க., 25 இடங்களிலும் வெற்றி பெற வாயப்பு உள்ளது. எனவே, மத்தியில் பா.ஜ., தலைமையிலான ஆட்சி அமைவதில், இந்த இரு கட்சிகளும் முக்கியப் பங்காற்றும்.
இந்த தேர்தலில் காங்., மற்றும் அதன் கூட்டணி கட்சிகள், தோல்வியை சந்திக்கும். காங்., 104 இடங்களிலும், காங்., தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி, 123 இடங்களில் மட்டுமே வெற்றி பெறும். இது காங்., கட்சிக்கு இதுவரை இல்லாத, பெரும் தோல்வியாக அமையும்.
தமிழகத்தில் எப்படி?
என்.டி.டி.வி., நடத்திய, தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்பில், தமிழகத்தில், எந்தெந்த கட்சிகளுக்கு எவ்வளவு இடம் கிடைக்கும் என, குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் விவரம்:
அ.தி.மு.க., 25
தி.மு.க., கூட்டணி 11
பா.ஜ., கூட்டணி 3
காங்., 0
நன்றி-தினமலர்.
0 comments:
Post a Comment