ஐக்கிய முற்போக்கு ( காங்கிரஸ்) கூட்டணி அரசில், இந்திய பொருளாதாரம் செழிப்பாக இருந்ததாக சிலர் கூறுகின்றனர். ஆனால் உண்மை நிலை அதற்கு மாறானது. இந்திய பொருளாதாரத்தை நிலைப்படுத்த, முந்தைய தேசிய ஜனநாயக ( பா.ஜ.,) கூட்டணி கடுமையாக உழைத்ததை அனைவரும் மறந்து விட்டனர். இந்திய பொருளாதாரத்தை நிலைப்படுத்த பா.ஜ., அரசு எடுத்த பல நடவடிக்கைகளின் பலனை, அடுத்து வந்த காங்கிரஸ் அரசு தனக்குச் சாதகமாக்கி கொண்டது. இதனால் காங்கிரஸ் அரசு சிறப்பாக செயல்பட்டது போல் தோன்றினாலும், உண்மையில், காங்கிரஸ் அரசின் கடந்தகால செயல்பாடு மற்றும் செய்யத் தவறியவைகளால், அடுத்து வரும் அரசுக்குத்தான் கெட்ட பெயர் ஏற்படும்; புதிய அரசு எதையும் செய்ய இயலவில்லை என்ற குற்றச்சாட்டைச் சந்திக்க நேரிடும். அந்த அளவுக்கு தற்போதைய காங்கிரஸ் அரசு பொருளாதார சீரழிவை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் அரசின் கடந்த 10 ஆண்டு ஆட்சிக் காலத்தில் 6 ஆண்டுக்கும் மேலாக நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரமே இந்த சீரழிவுக்கு முழு பொறுப்பு என்பதை யாரும் மறுக்க முடியாது.
அரசின் கடன்கள்
: மத்திய அரசின் கடன்கள் மற்றும் ஒட்டுமொத்த உள்நாட்டு வளர்ச்சிக்கு இடையேயான விகிதம், பா.ஜ., அரசின் காலத்தில் 60 சதவீதத்தை விட சற்றே கூடுதலாக இருந்தது. ஆனால் மாநில அரசுகளின் கடன்களையும் சேர்த்து பார்க்கும்போது இந்த விகிதம் 80 சதவீதத்தையும் தாண்டியது. தற்போது இந்த விகிதம், ஒட்டுமொத்த உள்நாட்டு வளர்ச்சியில் 70 சதவீதமாக உள்ளது. பா.ஜ., அரசின் காலத்தில் 5வது சம்பள கமிஷன் அமல் செய்யப்பட்டதால், அப்போது கடன் அளவு அதிகரித்து காணப்பட்டது.
பொருளாதார வளர்ச்சி மற்றும் பணவீக்க விகிதங்கள்:
பா.ஜ., அரசுக்கும் காங்கிரஸ் அரசுக்கும் இடையேயான வருடாந்திர வளர்ச்சி விகிதம் 1.7 சதவீதம்தான். ஆனால் ஒட்டுமொத்த உள்நாட்டு வளர்ச்சி விகித வித்தியாசம் 4.6 சதவீதமாக இருந்தது. அதேபோல், பணவீக்க விகிதமும் காங்கிரஸ் அரசின் காலத்தில் அதிகமாக ( 7.4 சதவீதம்) இருந்தது; ஆனால் பா.ஜ., அரசின் காலத்தில் 4.5 சதவீமாகவே இருந்தது. அதிக அளவிலான பணவீக்கம், உண்மையான கடன் மதிப்பைக் குறைத்து காட்டும்; இதனால் காங்கிரஸ் அரசின் காலத்தில் கடனுக்கும் ஒட்டுமொத்த உள்நாட்டு வளர்ச்சிக்கும் இடையேயான விகிதம் குறைவாக காணப்பட்டது.
வட்டி சுமைகள்:
பா.ஜ., அரசின் காலத்தில் செலுத்தப்பட்ட வட்டி மற்றும் பட்ஜெட் வருவாய்க்கு இடையேயான விகிதம் 40 சதவீதத்தைத் தாண்டவில்லை. மேலும் பா.ஜ., அரசு பொறுப்பேற்றபோது வட்டி விகிதம் அதிகமாக இருந்தது. அவர்களுடைய ஆட்சிக் காலத்தில் அது படிப்படியாக குறைய ஆரம்பித்தது. ஆனால் காங்கிரஸ் அரசு பொறுப்பேற்றபோது, குறைவான வட்டி விகிதமே இருந்தது; அது அவர்களுக்கு சாதகமாக இருந்தது; ஆனால் அவர்கள் ஆட்சிக் காலத்தில் வட்டி விகிதம் அதிகரிக்க ஆரம்பித்தது.
அரசின் பத்திரங்கள் மூலம் வருவாய் அதிகரிப்பது மற்றும் குறைவதன் பின்னணி ரகசியங்கள் குறித்து சாதாரண பொருளாதார மாணவர் கூட கூறமுடியும்; அதற்கு பொருளாதார நிபுணத்துவம் எதுவும் தேவையில்லை. அரசு கடன் வாங்குவதும் பணவீக்கமும் இருமுக்கிய அம்சங்கள்; எனவே எந்த அரசு பொருளாதார சுமையை அதிகரித்துள்ளது என்பதை, அது வாங்கிய கடனை வைத்தே மதிப்பிடலாம்.
பா.ஜ., பட்டபாடு; காங்கிரசுக்கு சாதகம்:
பா.ஜ., அரசின் காலத்தில், சிறுசேமிப்பு மீதான வட்டி விகிதங்கள் குறைக்கப்பட்டன. இது உள்நாட்டு வட்டி விகிதங்களில் பெருத்த விளைவை ஏற்படுத்தியது. ஆனால் இதன் பெரும்பாலான பலன்கள் அடுத்து வந்த காங்கிரஸ் அரசுக்கே சாதமாக அமைந்தன. மேலும் கா்ஙகிரஸ் அரசின் துவக்கத்தில் உலக வளர்ச்சி, பணவீக்க மற்றும் வட்டி விகித நிலைமைகள் ஆகியவை பாதிப்பை ஏற்படுத்தாத நிலைக்கு மாறின.
எனவே பா.ஜ., அரசின் காலத்தில் பட்ஜெட் வருவாய் விகிதத்தை விட அதிக அளவு வட்டி செலுத்தியது அவர்களின் தவறா? அல்லது காங்கிரஸ் அரசின் கால்ததில் பட்ஜெட் வருவாய் விகிதத்தை விட குறைவான அளவு வட்டி செலுத்தியது அவர்களின் சாதனையா என்பதை எளிதில் மதிப்பிட்டு விடலாம்.
மத்திய அரசின் மார்க்கெட் கடன்:
பணவீக்கம் அதிகரித்து இருந்ததால், காங்கிரஸ் அரசின் காலத்தில் கடன் விகிதம் குறைவாக காணப்பட்டது. காங்கிரஸ் அரசின் காலத்தில் மத்திய அரசு வாங்கிய மார்க்கெட் கடன் அபாயகரமான அளவுக்கு அதிகரித்தது. குறிப்பாக காங்கிரஸ் அரசின் 2வது ஆட்சிக் ( 2009- 14) காலத்தில், அரசின் மொத்த கடனுக்கும் பட்ஜெட் செலவுக்குமான விகிதாச்சாரம் அதிக அளவுக்கு இருந்தது. மார்க்கெட்டில் அதிக அளவுக்கு கடன் வாங்க வாங்க, உற்பத்திக்கான ஒதுக்கீடு குறைய ஆரம்பிக்கும்.
பா.ஜ., அரசின் காலத்தில் மத்திய அரசின் மொத்த மார்க்கெட் கடன் மற்றும் பட்ஜெட் செலவுக்கு இடையேயான விகிதாச்சாரம் மிகக் குறைவான அளவான 18.8 சதவீதத்தைத் தொட்டது. தொடர்ந்து ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் அரசு தனது வீணான செலவுத் திட்டங்களைத் துவக்கும் முன், இது 10 சதவீதமாக குறைந்திருந்தது. ஆனால்அதற்குப் பின் நிலைமையே தலைகீழாக மாறி விட்டது.
காங்கிரஸ் அரசின் அபரிமிதமான மார்க்கெட் கடன் மற்றும் ரிசர்வ் பாங்கின் மறைமுகமான நிதி உதவி எதிரொலியாக மக்களின் வாழ்க்கைச் செலவு 2008- 2011ல் 63 சுதவீம் அதிகரித்தது.
சுருக்கமாக கூறுவதென்றால், காங்கிரஸ் பதவி ஏற்ற காலத்தில்நிலவிய உலக மற்றும் உள்நாட்டு சூழ்நிலைகளைத் தனக்கு சாதகமாக்கிக் கொண்டு, இந்திய பொருளாதாரத்தை பெரும் சீரழிவுக்கு உள்ளாக்கி வி்ட்டது.
நன்றி-தினமலர்.
0 comments:
Post a Comment