Wednesday, 9 April 2014

நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் பா.ஜ.க வெளியேற்றப்பட்டு ராசாவா ஆத்தாவா என்று முடிவாகிவிட்டபிறகு பா.ஜ.க கூட்டணி கட்சிகள் குறிப்பாக பா.ஜ.க யாரை ஆதரிக்கவேண்டும் என்பது விவாதத்துக்குரிய பொருளாக மாறியிருக்கிறது.

"ராமருக்கு அயோத்தியில் ஆலயம் கட்டாமல் வேறு எங்கு கட்டுவது" என்ற கருத்துகொண்ட ஆத்தா மீது இந்து அமைப்புகளுக்கு என்றுமே பாசம் உண்டு. அதனால்தான் பா.ஜ.க வை தவிர்த்து ஒரு போட்டிகளம் உருவானால் அங்கு மற்ற திராவிட கட்சிகளை ஆதரிப்பதைவிட ஆத்தாவை ஆதரிப்பதை இந்து அமைப்புகள் ஒரு கொள்கை முடிவாகவே செய்துவருகின்றன.

அனால் இந்துத்துவ அமைப்புகள், குறிப்பாக பா.ஜ.க தமிழகத்தில் வளராமல் போனதற்கு முக்கிய காரணம் ஆத்தா என்பதை வசதியாக நாம் மறந்துவிடுகிறோம் அல்லது இந்த உண்மை நம் கண்களுக்கு தெரிவதில்லை. முன்பே கூறியதுபோல பா.ஜ.க தமிழகத்தில் வளர்ச்சியடைந்தால் இந்துத்துவ சிந்தனை கொண்டவர்கள் அ.தி.மு.க வை விட பா.ஜ.கவைத்தான் ஆதரிப்பார்கள் என்று ஆத்தாவுக்கு நன்றாகவே தெரியும். அதனால்தான் இந்து அமைப்புகளை குறிப்பாக பா.ஜ.க வை வளரவிடாமல் அதற்கென உள்ள ஒட்டு வங்கியை ஆத்தா இதுநாள்வரை மறைமுகமாக சுரண்டியுள்ளார்.

இதற்க்கு சமீபத்திய உதாரணம் இந்துமுன்னணி வெள்ளையப்பன் முதல் பா.ஜ.க ரமேஷ்ஜி வரையிலான கொடூர கொலைகளை கள்ள உறவு, கந்துவட்டி , முன்விரோதம் என கேவலப்படுத்தியதோடு அல்லாமல் ஆயிரம் பொய்யைச்சொல்லி உண்மைக்குற்றவாளிகளை கைதுசெய்யாமலே ஆத்தா நாடகம் நடத்தினார். எங்கே உண்மை குற்றவாலிகளை கைதுசெய்தால் தன்னை மதவாதி என சித்தரித்டுவிடுவார்களோ என அஞ்சிய ஆத்தா கட்டுக்கதைகளை பரப்பிவிட்டார்.கடைசியில் கருணாநிதியே இந்து தலைவர்கள் கொலையில் தமிழக அரசு வேடிக்கைபார்கிறது என்று கூறியபிறகு கொலையாளிகள் கைதுசெய்யப்படுகின்றனர். ஆனால் இன்று கூட சேலம் பா.ஜ.கவின் ரமேஷ்ஜி குடுமபத்தினருக்கு குறிப்பாக கொலைக்கான சாட்சியாகிய அவரின் மனைவிக்கு ஆத்தாவின் காவல்துறை பாதுகாப்பு வழங்காததால் பாதுகாப்பு கேட்டு கோர்ட்டு படியேறி நிற்கின்றனர் .

தற்போது சிலர் நீலகிரி தொகுதியில் பா.ஜ.க போட்டியில் இல்லாத நிலையில் பா.ஜ.க கூட்டணி குறிப்பாக இந்துத்துவ சிந்தனை உள்ளவர்கள் அல்லது மோடி பிரதமராக வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள் அ.தி.மு.க.வை ஆதரிக்க வேண்டும் என கூறுகின்றனர். இதற்க்கு அவர்கள் கூறும் காரணம் பண முதலை ராசா வுக்கு எதிரான வாக்குகள் சிதறக்கூடாது என்பதாகும். மேலும் அ.தி.மு.க விற்கு போடும் ஓட்டு தேர்தலுக்கு பிறகு மோடி பிரதமராக கைகொடுக்கும் என்று வேறு கிளப்பிவிடுகின்றனர்.

மக்களவை தேர்தலின் ஆரம்பத்தில் பா.ஜ.க கூட்டணிக்கு ஆளாய் பறந்தபோது, எங்கே பா.ஜ.கவுடன் கூட்டணி வைத்தால் சிறுபான்மையினர் ஒட்டு தனக்கு கிடைக்காமல் போய்விடும் என்று கருதிய ஆத்தா பா.ஜ.கவை சீண்டகூட இல்லை என்பது நமக்கு தெரியும். அந்த சூழ்நிலையில் பா.ஜ.வை ஒரு கூட்டணிக்கு தலைவனாக்கி அழகு படுத்தியது பா.ம.க, மதி.முக. மற்றும் தே.மு.தி.க என்பது நம் கண்முன் நடந்த உண்மை.

ஆனால் மதவாதிகளுடன் கூட்டணி வைத்துள்ளீர்களே என விஜயகாந்திடம் வினவியபோது கட்சி பெயரிலேயே மதத்தை கொண்ட கட்சிகள் மதவாத கட்சிகள் இல்லையா... அல்லது அதனுடன் யாரும் கூட்டணி வைக்கவில்லையா என எதிர்கேள்வி கேட்டு வாயை மூடினார்.

இந்தியாவிலேயே எங்கும் இல்லாத அளவில் பா.ம.க வினர் மீது தேசிய பாதுகாப்புச்சட்டத்தையும் / குண்டர் தடுப்புசட்டத்திலும் நூற்றுக்கணக்கில் பாய்ச்சி அவர்களின் தொண்டர்களை நாசப்படுத்தியது ஆத்தா .. எதிர்க்கட்சி அந்தஸ்து கொண்ட விஜயகாந்தின் கட்சியை உடைத்து அவரின் தளபதி எனக்கருதப்பட்ட பண்ருட்டியாரை கூட தன்வசப்படுத்தி சீரழித்ததும் இதே ஆத்தாதான். மேலும் கடந்த சட்டமன்ற தேர்தலில் ம.தி.மு.கவை கூட்டணி ஆசை காட்டி கடைசியில் நட்டாத்தில் விட்டவர் சாட்சாத் இதே ஆத்தாதான்.

இத்தகைய கட்சிகளை கூட்டணியாக கொண்டுள்ள நிலையில் நீலகிரி தொகுதியில் பா.ஜ.கட்சி அ.தி.மு.கவை ஆதரிக்கவேண்டும் என்று கூறினால் கூட்டணி தொண்டர்கள் மற்ற பா.ஜ.க போட்டியிடும் தொகுதியில் எப்படி தேர்தல்பணி செய்வார்கள். இதே கன்னியாகுமரி அல்லது சிவகங்கை தொகுதிகளில் பா.ஜ.க வினரின் வேட்பு மனுக்கள் தள்ளுபடிசெய்யப்பட்டிருக்குமாயின் இதே அ.தி.மு.க ஆதரவு நிலையை பேசுவார்களா...

எது எப்படி இருப்பினும் பா.ஜ.க நீலகிரி தொகுதியில் அ.தி.மு.விற்கு ஆதரவு தெரிவிப்பது என்பது பா,ஜ,க கூட்டணியின் குறிப்பாக தமிழக பா.ஜ.கவின் தற்கொலைக்கு சமம்...

0 comments:

Post a Comment